கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தவ்ஹீத் பள்ளியில் ஜும்மா உரை "ஏகத்துவ அழைப்பு"

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் 25.02.2011 வெள்ளிக்கிழமை அன்று சேலத்திலிருந்து வந்திருந்த முஹம்மது இம்ரான் அவர்கள் "ஏகத்துவ அழைப்பு " என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
”பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 881)

புதன், 23 பிப்ரவரி, 2011

கேள்வி: அல்லாஹ்விடம் ஒன்றை வேண்டுவதற்கு இடைத்தரகர் தேவையா?

    இறைவனிடம் கையேந்துவதற்கு யாரையும் துணைச் சாதனமாகவோ இடைத்தரகராகவோ ஆக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில

“(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்திக்கும் போது பதிலளிக்கிறேன்; எனவே அவர்கள் என்னிடமே கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்போது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் (என்று கூறுவீராக!) (அல்குர்ஆன் 2 : 186)

என “அல்பகறா” (பசுமாடு) என்ற அத்தியாயத்தில் இறைவனும்,

“(நண்பர்களே!) நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது (யாவற்றையும்) செவியுறுபனையும் (உங்களுக்கு) மிக நெருக்கமாகவனையுமே நிச்சயம் அழைக்கின்றீர்கள். அவன் (தனது பேரறிவால் எப்போதும்) உங்களுடனேயே இருக்கிறான்” (நூல் : முஸ்லிம்)

என்று அண்ணலாரும் நமக்குப் பிரார்த்தனையின் ஒழுக்கங்களைக் கற்றுத் தந்திருக்கிறார்கள்

கப்ருஸ்தான் சென்றால் ஓதும் துஆ

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பொது மையவாடிக்கு சென்று 'அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஹ்மிநீன் . வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன் '
(அடக்க தளங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே ! உங்கள் மீது இறை சாந்தி பொழியட்டும் .இறைவன் நாடினால் நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள் தாம்) என்று கூறினார்கள் .


நூல் :ஸஹிஹ் முஸ்லிம் 419, அறிவிப்பாளர் : அபூஹுரைரா

மனிதர்களால் குறையும் பூமி!

அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அறிவோம். நம்மிடம் பாதுகாக்கப்பட்ட ஏடு உள்ளது. திருக்குர் ஆன் 50:4

அல்லாஹ் உங்களை பூமியிலிருந்தே வளர்த்து பெரிதாக்கினான்.
திருக்குர் ஆன் 71:17

உலகில் வாழும் மனிதர்களால் பூமி குறைகிறது என்ற தத்துவம் இவ்வசனங்களில் சொள்ளப்பட்டிருக்கிரத். அதில் மிகப்பெரிய உண்மை அடங்கியிருக்கிறது.

பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாளும் அதற்குரிய எடை வெளியிலிருந்து கிடைப்பதில்லை. பூமியுடைய எடை குறைந்து தான் அது மனிதனாக, மிருகங்களாக,மரங்களாக மற்ற உயிரினங்களாக உற்பத்தியாகின்றன.

இப்படியே முளைக்கின்ற, வளருகின்ற எல்லாப் பொருளுமே தங்களின் எடையை பூமியிலிருந்து தான் எடுத்துக் கொள்கின்றன.

எத்தனை கோடி மக்கள் பெருகினாலும் அதனால் பூமியுடைய எடை கூடாது. இந்த மக்களோடு சேர்த்து பூமியை எடை போட்டால் ஆரம்பத்தில் பூமியை படைத்த போது இருந்த அதே எடை தான் இருக்கும்.

சனி, 19 பிப்ரவரி, 2011

ஜுமுஆ உரை:தொழுகையைப் பேணுவோம்

எல்லாம் வல்ல அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்தினருக்கும் வழங்கிய பாக்கியங்களில் மிகப் பெரும் பாக்கியம் ஜும்ஆ வெள்ளிக்கிழமையாகும்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்  கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் 18.02.2011 வெள்ளிக்கிழமை அன்று பேரணாம்பட்டு யாசின் "அவர்கள் "மறுமை சிந்தனைகள்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடம் பற்றாக்குறையாக போனதும் பெண்கள் எல்லாம் பள்ளிக்கு வந்து சொற்பொழிவை  கேட்க வாய்ப்பாக அமைந்திருப்பதும் நமது தவ்ஹீத் பள்ளியின்  சிறப்பம்சம் என்றே சொல்லவேண்டும்.

”சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும்.  அதில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள்.  அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள்.  யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : திர்மிதி 450

புதன், 16 பிப்ரவரி, 2011

மவ்லித் என்பதின் பொருள் என்ன?

மவ்­லிது எனும் அரபிச் சொல்லி­ன் அகராதிப் பொருள் 'பிறந்த நேரம்' அல்லது 'பிறந்த இடம்'என்பதாகும். (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 8)
ஆனால் பிற்காலத்தில் இஸ்லாத்தில் நபியவர்கள் காட்டாத பித்அத்தான,அனாச்சாரமான காரியங்களை உருவாக்கியவர்கள் நபியவர்களை இறைவனுக்கு நிகராக உயர்த்தி கடவுளாக சித்தரித்து படிக்கும் கவிதைகளுக்கு மவ்­லிது எனப் பெயரிட்டுவிட்டனர். இதற்கும் உண்மை இஸ்லாத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை.

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?
அல்லாஹ் மவ்லூத் ஓதியதாக பொய்யர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லி­தை எழுதியவர் யார் என்பது தெரியாது. இதோ அவர்களின் நூலிலேயே கூறப்பட்டிருப்பதைப் பாருங்க்.
மகுடமாய்த் திகழும் சுப்ஹான மவ்லி­தை கல்விக் கடல் கஸ்ஸாலி­ இமாம் (ரஹ்) அவர்களோ,அல் இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றி யிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 'இயற்றியவர் யார்?' என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித், பக்கம்: 5)

சமுதாய ஒற்றுமையும்! ஒற்றுமை தலைவர்களும்!

மகத்துவமும் கண்ணியமுமிக்க எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா தன் திருமறையில்
அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்: 3: 103)

இன்றைய சூழலில் முஸ்லீம் சமுதாயத்திற்கு மிக மிக அவசியமானது சமுதாய ஒற்றுமை என்பதில் சமுதாய நலனில் அக்கறையுள்ளவர்கள் அனைவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. அத்தகைய சமுதாய ஆர்வலர்களின் எண்ணங்களுக்கு வடிகால் ஏற்படுத்தும் முகமாக, தாங்கள் தான் ஒற்றுமையின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்கள் போல், அரசியலை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும், மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களும் நல்லவர்கள் போல் நடித்து வருகின்றனர்.

திங்கள், 14 பிப்ரவரி, 2011

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும்

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். ''நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்'' (என்று அவர் கூறினார்.)


அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்).

''எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

''என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்கள் மீது அதை நாங்கள் திணிக்க முடியுமா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று (நூஹ்) கேட்டார்.

''என் சமுதாயமே! இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி­ அல்லாஹ்விடமே உள்ளது. நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள். எனினும் உங்களை அறியாத கூட்டமாகவே நான் கருதுகிறேன்''

புதன், 9 பிப்ரவரி, 2011

இறைவனிடம் கேட்பது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு- RASMIN M.I.Sc

ஒரு மனிதன் இறைவனிடம் தனது தேவைகளை முன்வைப்பதற்கு இஸ்லாமிய மார்க்கம் அழகிய நடை முறைகள் பலவற்றைக் கற்றுத் தருகிறது.அதிலே மிகவும் முக்கியமான நடைமுறை எவருக்கு எந்தத் தேவையானாலும் அதை அவர் தனது இறைவனிடம் நேரடியாக் கேட்க்க வேண்டும் இடைத்தரகர் வைக்கக் கூடாது. அதே போல் எந்தக் காரணம் கொண்டும் இறைவன் அல்லாதவர்களிடம் கேட்கவே கூடாது அப்படிக் கேட்டால் அது இறைவனுக்கு இணை வைத்தல் என்ற மாபெரும் குற்றமாக கருதப்படும்.

தான் பலவீனமானவன் என்பதையும் இறைவன் சர்வ சக்தி படைத்தவன் என்பதையும் பிரார்த்தனையின் மூலம் மனிதன் ஒப்புக் கொள்கின்றான். எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் நபி (ஸல்) அவர்களும் இதை வலியுறுத்தியுள்ளார்கள்.

நமதூரில் இன்று தவ்ஹீத் மர்கஸ் திறப்பு - தவ்ஹீத்தின் எழுச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருப்பையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொளுமேடு  கிளையின் சார்பாக மர்கஸ் கட்டப்பட்டு இன்ஷாஅல்லாஹ்  இன்று  09.01.2011 புதன் கிழமை  அஸர் தொழுகையுடன் துவங்குகிறது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் அப்துர்ரஜ்ஜாக் மற்றும் அபூபக்கர் ஆகியோர் கலந்து கொண்டு  உரையாற்றுகின்றனர்.கிளை தலைவர் ரஜ்வி மற்றும் தாயகம் சென்றுள்ள மர்கஸ் மேலாண்மைக்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இன்ஷாஅல்லாஹ் மர்கஸ் திறப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை  விரைவில் வெளியிடுகின்றோம்.....

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!அல்குர்ஆன் 72:18  

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

தனியோனைத் துதித்திட தனிப்பள்ளி அவசியமே!

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம் ஏராளம்! தாயத்து தகடுகள், தர்ஹா வழிபாடுகள், மௌலிது குப்பைகள் போன்ற இணை கற்பிக்கும் காரியங்களை எதிர்த்ததற்காகவும் மத்ஹபுப் பிரிவினைகளைக் கண்டித்ததற்காகவும் ஏகத்துவ வாதிகள் ஊர் நீக்கம் செய்யப்பட்டனர். ஏன்? தொழுகைக்குக் கூட பள்ளி வாசல்களில் தடை செய்யப்பட்டனர்.


நான்கு மத்ஹபுகளுக்கு மாற்றமாக தலையில் தொப்பி போடாமல், நெஞ்சில் கைகட்டி, விரலசைத்துத் தொழுபவர்கள் இப்பள்ளியில் தொழக் கூடாது; இரண்டாவது ஜமாஅத் நடத்தக் கூடாது என்றெல்லாம் ஜமாஅத்துல் உலமாவின் தூண்டுதலின் பேரில் ஊருக்கு ஊர் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் போர்டுகள் மாட்டப்பட்டன.

நபிவழியின் பிரகாரம் விரலசைத்துத் தொழுதவர்களின் விரல்கள் நறுக்கப்பட்டன. கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

ஆனால் அதே சமயம், மது அருந்துபவர்கள், முரீது எனும் இணைவைபு கூட்டம்,வரதட்சணை வாங்கும் கயவர்கள், வட்டி மூசாக்கள், நாத்திகவாதிகள்,அரசியல் புரோக்கர்கள் ஆகிய அனைவருக்கும் பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. எங்களது அடிப்படை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகள் ஆகிய இரண்டு மட்டுமே என்றுரைத்ததற்காக மட்டுமே தவ்ஹீத் வாதிகள் பள்ளிகளை விட்டும் விரட்டப்பட்டனர்.

இவர்கள் நம்மைப் பள்ளிகளை விட்டும் விரட்டுவதென்ன? இது போன்ற பள்ளிகளில் உண்மையான முஃமின்கள் ஒரு போதும் நிற்கக் கூடாது என்பது தான் ஏக நாயனின் கட்டளை! இதோ இறைவனின் கட்டளையைப் பாருங்கள்.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! அல்குர்ஆன் 9:107, 108

ஓதும் இறைநெறிகளும்! மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்!!

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர்.

எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

மோடியை கைது செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை திட்டமிட்டு நடத்தியவர் நரேந்தி மோடிதான் என்றாலும் அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடியின் ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
குஜராத் மாநில அரசு இந்தக் கலவர வழக்கை சரியாக விசாரணை நடத்தாது என்று கருதிய உச்சநீதி மன்றம் கலவர வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு ளுஐவு என்னும் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்தக்குழு தக்க முறையில் விசாரணை நடத்தி 600 பக்க அறிக்கையை சீல் வைத்து உச்சநீதி மன்றத்தில் மே 2010ல் ஒப்படைத்தது.

புதன், 2 பிப்ரவரி, 2011

சப்தமிட்டு ஆமின் சொல்லலாமா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடிந்ததும் ”ஆமீன்” கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும் (தொழ வைப்பவரும்) மஃமூமும் (பின் நின்று தொழுபவரும்) சப்தமிட்டு ஆமீன் கூற வேண்டும்.
782 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَالَ الْإِمَامُ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ فَقُولُوا آمِينَ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ تَابَعَهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنُعَيْمٌ الْمُجْمِرُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ رواه البخاري
இமாம் ”கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்” எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­), நூல்: புகாரி
2286 وأخبرنا أبو يعلي حمزة بن عبد العزيز الصيدلاني أنبأ أبو بكر محمد بن الحسين القطان ثنا أحمد بن منصور المروزي ثنا علي بن الحسن بن شقيق أنبأ أبو حمزة عن مطرف عن خالد بن أبي أيوب عن عطاء قال ثم أدركت مئتين من أصحاب النبي صلى الله عليه وسلم في هذا المسجد إذا قال المغضوب عليهم ولا الضالين سمعت لهم رجة بآمين ورواه إسحاق الحنظلي عن علي بن الحسن وقال رفعوا أصواتهم بآمين (سنن البيهقي الكبرى ج: 2 ص: 59)
இந்தப் பள்ளிவாச­ல் (சுமார்) 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். (அவர்கள்) இமாம் ”கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்” எனக் கூறும் போது ”ஆமீன்” என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அதா, நூல்: பைஹகீ

தொழுகையில் விரலை நீட்டலாமா?

தொழுகை இருப்பில் விரலசைக்க வேண்டுமென்ற செய்தி பலமானதாகும். அதை உறுதிப்படுத்தும் வேறு அறிவிப்புகளும் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் இடது தொடை மீது இடது முன்னங்கை வைப்பார்கள். வலது தொடை மீது வலது முன்கையை வைப்பார்கள். கடைசி இரண்டு விரல்களை மடக்கிக் கொண்டு கட்டை விரலையும் நடு விரலையும் வளையம்போலாக்கி தமது ஆள்காட்டி விரலை உயர்த்தி அழைப்பதுபோல் அசைத்;ததை நான் பார்த்தேன் ‘
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்கள்: நஸயி (879), அப்னு ஹிப்பான், தாரமி, அஹ்மத் أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ زَائِدَةَ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظَرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا قَالَ وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ لَمَّا رَفَعَ رَأْسَهُ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ وَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا ( النسائ : 879)

இஸ்லாமும் தோழமையும்!!

ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்க்கையில் பலவிதமான உறவுகளைப் பெறுகின்றான். ஒரே மனிதன் கணவனாகவும், மகனாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் இன்னும் பல நிலையைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.

இதுபோன்ற உறவுகளில் சிலதை அவன் பெறாவிட்டாலும் நட்பு என்ற உறவையாவது பெற்றிருப்பான். ஏனென்றால் சிறியவர்கள் பெரியவர்கள் கொடியவர்கள் நல்லவர்கள் ஆகிய அனைவரும் யாரையாவது ஒருவரை நண்பர்களாக தேர்வுசெய்யாமல் இருப்பதில்லை.

நட்பினால் பல பயன்களை மனிதன் அடைவதால் நாம் எல்லோரும் நட்பு கொள்கிறோம். பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் தனிமையை விரும்புவதில்லை. துணைக்கு நண்பன் வந்து விட்டால் நேரம் போவதே தெரியாமல் எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறோம். நண்பர்கள் அதிகமாக கூடிவிட்டால் நம்முகத்தில் கவலையையே பார்க்க இயலாது. சந்தோஷமாக காலத்தை கடத்துவதற்கு ஒரு சாதனமாக நட்பு இங்கு பயன்படுகிறது.

நமக்கு ஏற்படும் கஷ்டங்களை நமது நண்பனிடம் தெரிவிக்கும் போது நெஞ்சத்தில் ஏற்பட்ட கனம் காணாமல் போய் விடுகிறது. இங்கு நட்பு என்பது கட்டடத்தைத் தாக்க வரும் மின்னலை இடிதாங்கி வாங்கிக் கொண்டு கட்டடத்தை காப்பதைப் போல உதவுகிறது.

நண்பர்களை அதிகம் பெற்றவர்கள் தங்களது காரியங்களை சுலபமாக முடித்துவிட்டு வருகிறார்கள். மருத்துவமனையில் நண்பர் பணிபுரிந்தால் இவர் மருத்துவமனை செல்ல நினைக்கும் போது தேவையான ஏற்பாடுகளை நண்பரே செய்து கொடுக்கிறார். கஷ்டங்கள் வரும்போது பக்கபலமாகவும் நிற்கிறார்.இன்னும் இது போன்று பல பயன்கள் நட்பின் மூலம் மனிதர்களுக்கு கிடைப்பதால் நபி (ஸல்) அவர்கள் நட்புவைப்பதை நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் (4760)

வீதியின் ஒழுக்கங்கள்!!

வீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்தி செல்ல வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அல்குர்ஆன் 24:30, 31

வீதியில் ஆணவத்துடன் நடப்பது கூடாது:
அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ''ஸலாம்'' எனக் கூறுவார்கள். அல் குர்ஆன் 25:63

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.


''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' அல் குர்ஆன் 31:18, 19

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

தமிழக அரசே! திமுக அரசே!


முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை கண்கானிக்க குழு அமைத்திட வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை ஏற்று கண்கானிப்பு குழு அமைத்த தமிழக அரசுக்கு நன்றி !

முஸ்லிம்களின் 3.5 சத இடஒதுக்கீட்டை 5 சதமாக உயர்த்தினால் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் ஆதரவும் தி.மு.கவுக்கே!


இவன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

கொள்ளுமேடு கிளை
கடலூர் மாவட்டம்.