கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சனி, 9 ஆகஸ்ட், 2014

ஓர் வபாத் செய்தி!

நமதூர் தெற்குத் தெருவில் வசிக்கும் மர்ஹும் ஆம்ஷா அவர்களின் மகனும்,அப்துல்பாரி அவர்களின் மருமகனுமாகிய முஹம்மது அமீன் நேற்று நள்ளிரவு தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு tntj  பிரார்த்தனை செய்கிறது.

செவ்வாய், 29 ஜூலை, 2014

TNTJ கொள்ளுமேடு மர்கசில் பெருநாள் திடல் தொழுகை!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளை தவ்ஹீத் மர்கசில் இந்த ஆண்டிற்கான பெருநாள் தொழுகை சிறப்பான முறையில் நபி வழிபடி மார்க்சின் பின்புறத்திலுள்ள திடலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் வழக்கம்போல் ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.சகோதரர் முஹம்மது ரஜ்வீ  அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்





படங்கள்: இமாம் அலி 

கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிஃத்ரா விநியோகம் -2014

கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பிஃத்ரா  விநியோகம் கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் சிறப்பான முறையில் நடைப்பெற்றது...மேலும் கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் நமது பக்கத்துக்கு கிராமம் புத்தூர் மக்களுக்கும் பயன்படும் வகையில்  பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டது.. விபரம் வருமாறு

பிஃத்ரா பெற்று பயனடைந்த குடும்பங்கள் மொத்தம்: 105

மொத்த வரவுகள் :ரூ 46,350/- 
                                       உள்ளூர் வசூல் (ஜமாஅத்தினர் மட்டும் )ரூ 21,000/-
                                       வெளிநாடு வசூல் ரூ 15,350/-
                                       தலைமை மூலம் ரூ 10,000/-

மொத்த செலவுகள்: ரூ 41,574/-
மளிகை பொருட்கள் மொத்தம் ரூ 32,530/-
கோழி விநியோகம் மொத்தம்    ரூ:12,600/-
ரோக்கமாக வழங்கியது (6ஏழைகளுக்கு ) ரூ 1220/-



படங்கள் செய்திகள்:
யாசின்,இமாம் அலி மற்றும் ரஜ்வீ 

பெருநாள் தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கான உதவி !

கடலூர் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது விதவைகள் போன்றோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவிகளை செய்து வருகின்றது. இதனடிப்படையில் நமதூரில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டது.மொத்தம் 19 நபர்களுக்கு அவர்களுக்காக ஆடைகள் கொள்ளுமேடு தவ்ஹீத் சகோதரர்களால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..


வியாழன், 8 மே, 2014

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : 90.6% மாணவர்கள் தேர்ச்சி!

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இத்தேர்வில் 90.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தாள். தர்மபுரி பள்ளி மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்தார். மேலும் 3ம் இடத்தை இரண்டு மாணவர்கள் பிடித்தனர், நாமக்கல் போதுப்பட்டியைச் சேர்ந்த டி.துளசிராஜன் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பெற்றார்.  மேலும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த எஸ்.நித்யாவும் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தைப் பிடித்தார்.  

ப்ளஸ் 2 தேர்வில் ஒட்டுமொத்தமாக 90.6 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 4 லட்சத்து 14 ஆயிரத்து 211 மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுஷாந்தி 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். ஆங்கிலத்தில் ஓசூரைச் சேர்ந்த பவித்ரா 198 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பிடித்தார். கணிதத்தில் 3882 புலிகள் 200க்கு 200 பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 5,884 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை தேர்வு நடந்தது. இதற்காக 2210 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 74,197 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 38,392 பேர் மாணவிகள். புதுச்சேரியில் 120 பள்ளிகளில் படித்த 13,528 பேரும் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 1 லட்சம் பேர் எழுதினர். இது தவிர சிறைகளில் உள்ள 58 கைதிகளும் இந்த தேர்வை எழுதினர். டிஸ்லெக்சியா மற்றும் இதர குறைபாடுகள் உள்ள மாணவர்கள் 1000 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.  
தேர்வின்போது, கேள்வித்தாள் படித்து பார்க்க இந்த ஆண்டும் 15 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. 

விடைத்தாளில் முதல் முறையாக மாணவர்களின் போட்டோ, தேர்வு எழுதும் பாடம் உள்ளிட்டவை அச்சிட்டு வழங்கப்பட்டன. ஹால்டிக்கெட்டிலும் மாணவ மாணவிகளின் போட்டோ இடம் பெற்றது.  மாணவர்களின் வருகையை பதிவு செய்ய போட்டோவுடன் கூடிய பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த தேர்வு மையங்களில் மாணவர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டன. 

கேள்வித்தாள் இந்த ஆண்டு மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு அத்தாட்சியாக மாணவர்களிடம் கையெழுத்து

சனி, 3 மே, 2014

கொள்ளுமேடு தீ விபத்து தவ்ஹீத் ஜமாஅத் நிவாரண உதவி!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொள்ளுமேடு சலாமத் புது நகரில் இருக்கும் மர்ஹூம் கரிகடை அன்வர் அவர்களின் வீடு நள்ளிரவு 1 மணிக்கு மர்ம நபர்களால் எரிக்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானயின.இதைத் தொடர்ந்து கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியதோடு நிவாரண உதவியாக 5 ஆயிரம் ரூபாய் பணமாக வழங்கப்பட்டது.அவர்கள் அல்ஹம்துலில்லாஹ்.. அவர்களின் துயர் போக்க இறைவனிடம் தூஆ செய்வோமாக.
படங்கள்: முஹம்மது ரஜ்வி (நமது செய்தியாளர்)

புதன், 29 ஜனவரி, 2014

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டத்தில் கொள்ளுமேடு சகோதரர்கள்!

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டத்தில் கொள்ளுமேடு சகோதரர்கள்!புகைப் படத்தொகுப்பு.
















செவ்வாய், 28 ஜனவரி, 2014

பல லட்சம் இஸ்லாமியர்கள் திரண்ட தவ்ஹீத் ஜமாத்தின் இட ஒதுக்கீடு போராட்டம்!


மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் லட்சகணக்கான முஸ்லீம்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை, கோவை, நெல்லை, திருச்சி ஆகிய இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை காந்திபுரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரையாற்றினார்.அப்போது அவர், ”தமிழகத்தில் முஸ்லீம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு போதுமானதல்ல என்றும் அதை அதிகரித்துத் தருவோம் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், இரண்டரை ஆண்டு காலமாகியும் இன்னும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல், இந்திய அளவில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் அரசு ஏமாற்றி வருகிறது.
உடனடியாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றம், சட்டமன்றத்தை முற்றுகையிட்டு அதன் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்குவோம்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை
இதேப்போன்று சென்னையிலும் ராஜரத்னம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

நெல்லை, வண்ணாரப்பேட்டை தெற்குப் புறவழிச்சாலையில் ஜமாத்அத் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. இதற்கு ஜமாத்அத் மாநில மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள்

7 சதவீத இடஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் போராட்டம்!

சென்னை, -முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் நடந்த சிறை செல்லும் போராட்டத்தில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
சிறை செல்லும் போராட்டம்
மத்தியில் 10 சதவீதமும், தமிழகத்தில் 7 சதவீதமும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னை, திருச்சி, நெல்லை, கோவை, புதுச்சேரி, காரைக் கால் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் சிறைசெல்லும் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் தனி மேடை அமைக்கப்பட்டு போராட்டம் நடந்தது. மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரை
தமிழகத்தில் முஸ்லிம்களின் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த மாநில அரசை வலியுறுத்தியும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைப்படி மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் 10 சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டை சட்டமாக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தின் 4 மையங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே இடத்தில் நடத்தினால் நகரமும் கொள்ளாது, அனைவரையும் கைது செய்து சிறைக்கு அழைத்து செல்ல போலீசாரிடமும் அவ்வளவு வாகனங்களும் இல்லை. இதனால் 4 இடங்களில் பிரித்து நடத்தப்படுகிறது.
ஏமாற தயாராக இல்லை
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு காசு கொடுத்தும், சாராய பாக்கெட்டுகள் கொடுத்தும் கூட்டிவரவில்லை. இடஒதுக்கீட்டை பெறுவதை குறிக்கோளாக கொண்டு அனைவரும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டுள்ளனர். பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தரும் கட்சிக்கு எங்கள் ஆதரவை அளிக்க முடிவு செய்துள்ளோம். இனியும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு சமுதாயம் தயாராக இல்லை.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க, மற்றும் தி.மு.க, தேர்தல் வாக்குறுதிகளில், ‘‘முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு போதுமானதாக இல்லை, என்பதால் வெற்றி பெற்றால், அதிகரித்து வழங்கபடும்’’ என்று இரண்டு கட்சிகளுமே ஒப்புக்கொண்டு அறிவித்தன. ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
மிகப்பெரிய அதிசயம்
முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று தந்த கட்சி தி.மு.க. தான். இதற்காக கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு