கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சனி, 30 அக்டோபர், 2010

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்!


காலச் சக்கரத்தை சுழற்றும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89:1, 2)

இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது...
(துல்ஹஜ் மாதத்தின்) 'பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்'; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்(அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத போராளியைத் தவிர' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதீ 688

(துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் எந்த நல்லறமும் 'அய்யாமுத்தஷ்ரீக் நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விட சிறந்ததல்ல? என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜிஹாதை விடவுமா? என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்து புறப்பட்டு இரண்டையும் இழந்து விட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 969

இஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை இறையருளால் நாம் அடையவுள்ளோம். இஸ்லாம் குறிப்பிடும் புனித மாதங்களில் இந்த துல்ஹஜ் மாதமும் ஒன்றாகும். மனித இனத்தின் உயர்வுகளுக்கு வழிகாட்டும் ஏக இறைமார்க்கம், இம்மாதத்திலும் மனிதர்கள் இறையருளையும் இறையச்சத்தையும் பெறுவதற்குண்டான நேரிய காரியங்களைக் கற்றுத் தருகிறது.

இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஹஜ் மற்றும் அதன் கிரியைகளுக்கான காலகட்டம் இம்மாதத்தின் முதல் பத்து நாட்களிலேயே அடங்கியுள்ளது. இன்னும் உம்ரா, அரஃபா தின நோன்பு, பெருநாள் தொழுகை, குர்பானி போன்ற நல்லறங்களும் அல்லாஹ்வின் கிருபையால் துல்ஹஜ்ஜின் பத்து நாட்களிலும் அதைத் தொடர்ந்து அய்யாமுத்தஷ்ரீக் நாட்களிலும் அனுகூலமாயிருப்பதை உணரலாம்.

'...அந்த நாட்களில் 'லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் ஆகியவற்றை அதிகமாக கூறுங்கள்' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: தப்ரானி)

அரஃபா தினத்தில் (ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் நாள்) நோன்பு நோற்பது, அதற்கு முந்தைய ஒரு வருடம், அதற்கடுத்த ஒரு வருடம் ஆகிய இரு வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கை வைக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுகதாதா(ரலி) நூல்: திர்மிதீ 680எனவே அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பது நபிவழியாகும்.

பெருநாள்!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவை வந்தடைந்த போது, மதினாவாசிகளுக்கு விளையாடுவதற்கென இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரு நாட்களில் மதீனாவாசிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'இந்த இரு நாட்கள் எவ்வகையைச் சேர்ந்தது? எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அறியாமை காலத்தில் (இந்நாட்களில்) நாங்கள் விளையாடக் கூடியவர்களாக இருந்தோம் என்றனர். (அதைக்கேட்ட) அல்லாஹ்வினதூதர்(ஸல்) அவர்கள் 'நிச்சயமாக அல்லாஹ் அவ்விரு நாட்களை விடச் சிறந்ததாகவும், அவ்விரு நாட்களுக்குப் பதிலாகவும் 'அள்ஹா (எனும் ஹஜ்ஜுப் பெரு) நாளையும், ஃபித்ரு (எனும் ரமளான் பெரு) நாளையும் வழங்கியிருக்கிறான்' என்று கூறினார்கள். அனஸ்(ரலி) நூல்: ஸஹீஹ் அபுதாவுத் 1004

அறியாமைக் காலத்திலிருந்த இரு நாட்களுக்குப் பகரமாக மாட்சிமைமிக்க அல்லாஹ் தன் அடியார்களுக்கு நல்கிய நாட்கள்தான் இந்த இரு பெருநாட்கள். இந்த இரண்டு நாட்களிலும் தொழுவது, குத்பா (பிரசங்கம்) நிகழ்த்துவதோடு வேறு சில காரியங்களைச் செய்வதும் நபிவழியாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உண்ணும் வரை ஈதுல்ஃபித்ர் பெருநாளன்று (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஈதுல் அள்ஹா பெருநாளன்று தொழுது முடிக்கும் வரை உண்ண மாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1756

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஈது (தொழுகை)க்கு நடந்தவர்களாக வந்து, (தொழுதபின்) நடந்தே திரும்பிச் செல்வார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் ஸஅது(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1070

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்;முதலில் தொழுகையையே துவக்கு வார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப் பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப்பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத்(ரலி) நூல்: புகாரி 956

நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்கு) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகி இருப்பார்கள். உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி 974

நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 960

(ஈதுல்)ஃபித்ருவிலும், (ஈதுல்)அள்ஹாவிலும் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் ருகூவின் தக்பீர் நீங்கலாக (இரண்டு ரக்அத்களிலும் கிராஅத்துக்கு முன்) ஏழு-ஐந்து தக்பீர்களை கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: ஸஹீஹ் அபூதாவுத் 1043

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். 'யார் நமது தொழுகையைத் தொழுது, நாம் குர்பானி கொடுப்பது போல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத் தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள். பரா பின் ஆஸிப்(ரலி) நூல்: புகாரி 955

பெருநாள் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும், வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 986

பெருநாட்களையும், திருநாட்களையும் வீணான கேளிக்கைகளிலும் ஆடம்பரங்களிலும் திளைத்துக் கழிக்கின்ற உலகோர்க்கு மத்தியில் அந்த தினங்களையும் இறைவனுக்கு உவப்பான வழிகளில் கண்ணியப்படுத்தச் செய்யும் மார்க்கத்தின் அம்சங்களை கடைப்பிடிப்போமாக! அல்லாஹ் கருணையாளன்!

அன்புடன் வெளியிடுவோர்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (JT) - துபை மண்டலம்

புதன், 27 அக்டோபர், 2010

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம்.

மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் வாசகர்கள் கவனத்தில் கொள்க!

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?
தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?
இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம்: 5)

மவ்லித்’ என்பதின் பொருள்?
‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 8)

மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?
மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர்,தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

ஆஹா மெகா ஆஃபர்
உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுயைக பாதுகாப்பு பெற வருடத்தில் ஒருமாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.

மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டி ருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி
மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.

”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன? என்று கூறுவதை பாருங்கள் : நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்,(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(23 : 1-11)

செலவு செய்யும் முறை
நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : ”உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்ய விரும்புவேன்” என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள். தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)

மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?
”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப் படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

அமுத சுரபி மவ்லித்
அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம்.

”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார்.மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி
எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித்.

”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள்,ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான் மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4 : 19)

மலக்குகளின் வருகை
”எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் : அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும் மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!
மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.’ அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார்,மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.

ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

தொகுப்பு:-எம்.ஐ சுலைமான். TNTJ

செவ்வாய், 26 அக்டோபர், 2010

இந்தியா டுடே: பி.ஜே. யின் நேர்காணல்!








(பெரிதாக்கி பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்)

19 இயக்கமே!!

திங்கள், 25 அக்டோபர், 2010

மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கச் வந்தவர் மானத்தை இழந்தார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் கடந்த இரண்டு (2010-10-23.24) நாட்களாக சென்னை டி நகர் தியாகராஜர் மண்டபத்தில் வைத்து பகிரங்க விவாதம் நடந்தது.

இதில் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.

சுன்னத் ஜமாத் ஐ.பேரவையின் நிலைபாடு :
சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் அசிங்கங்களும் குர்ஆன் ஹதீஸிற்க்கு மாற்றமான கருத்துக்களும் இருக்கின்றன.

தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு :

சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் எந்தவொரு அசிங்கங்களோ குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான கருத்துக்களோ இல்லையென்பதும்.ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களின் பேச்சுக்கள் எழுத்துக்கள் தப்ஸீர்கள் ஆகியவற்றில் தான் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களும் கயமைகளும் பொய்களும் ஆபாசங்களும் நிறைந்துள்ளன.

விவாதத்தின் ஆரம்பமும் அரண்டு போன ஜமாலியும்.

விவாதம் ஆரம்பிப்பதற்காக இரு தரப்பு நடுவர்கள் சார்பாகவும் நாணயச் சுழற்சி மேற் கொள்ளப்பட்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தவ்ஹீத் ஜமாத் தரப்பால் சகோதரர் பி.ஜெ தனது வாதத்தை ஆரம்பித்தார்.

பொய்களின் மொத்த உருவம் ஜமாலி.

விவாதத்தின் ஒப்பந்தப் படி ஜமாலியினதும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களினதும் ஆபாசமான அசிங்கமான முன்னுக்குப் பின் முரனான கருத்துக்களை சகோதரர் பி.ஜெ பட்டியலிட ஆரம்பித்தார்.

முதலாவதாக அபூதாலிப் முஸ்லிம் என்று ஓரிடத்திலும் இன்னோரிடத்தில் அபூதாலிம் காபிர் என்றும் ஜமாலி பேசிய இரண்டு வீடியோ ஆதாரங்களை திரையில் போட்டுக் காட்டினார் சகோதரரர் பி.ஜெ அவர்கள்.

இடத்திற்கு தகுந்தால் போல் பேசுவதில் இவர் வல்லவர் என்பதற்கு எடுத்துக் காட்டப்பட்ட இந்த வீடியோவில் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கு இப்னு அஸாகீர் நஸயீ அபூதாவுத் ஆகிய கிரந்தங்களில் இருந்து ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டி அதன் ஒரு பகுதியை சொல்லி மறு பகுதியை மறைத்திருந்தார்.
அந்த ஹதீஸின் இரண்டாம் பகுதியே அபூதாலிப் அவர்கள் காபிர் தான் என்பதற்கு சான்றாக இருந்தது.

மீதியை ஏன் மறைத்தீர்கள் மக்கள் மத்தியில் ஏன் இப்படி பொய்களையும் புரட்டுகளையும் பறப்புகிறீர்கள் என்று விவாதத்தின் இருதிவரைக் கேட்டும் இந்தக் கேள்விக்கு ஜமாலி பதிலே தரவில்லை.

முதல் வாதத்திலேயே உளற ஆரம்பித்த ஜமாலி.

பி.ஜெவின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் ஆபாசங்கள் அசிங்கங்கள் இருக்கிறது என்று வாதிட வந்த ஜமாலி அவர்கள்.முதல் வாதத்திலேயே தலைபிற்கு கொஞ்சம் கூட சம்பந்தமின்றி பேச ஆரம்பித்தார்.

பி.ஜெ ஆண்கள் தொடையை மறைக்க வேண்டும் என்று கூறினார்.தற்போது ஆண்கள் தொடையை திறந்து கொள்ள அனுமதியுண்டு என்று கூறுகிறார் இது அவர்களது வெளியீடுகளில் உள்ள அபத்தம் என்று முதல் வாதத்தையும் கலாலா தொடர்பாக சகோதரர் பி.ஜெ அவர்களின் திருக்குர் ஆன் மொழியாக்கத்தில் 4வது அத்தியாயம் 12வது வசனத்திற்கு கொடுத்த விளக்கத்தினை அரைகுறையாக வாசித்துவிட்டு அதில் தவறு உண்டு என்று தனது இரண்டாவது வாதத்தையும் முன்வைத்தார்.

முரண்பாடு என்றால் என்னவென்று ஜமாலிக்கு பாடம் நடத்திய பி.ஜெ

விவாதம் ஆரம்பித்த அடுத்த கணமே உளறுவதற்கும் ஆரம்பித்தார் ஜமாலி இருந்தாலும் அவருடைய உளறளுக்கும் விவாதம் என்பதால் பதில் கொடுக்க வேண்டியது பி.ஜெயின் கடமை என்பதால் முதலில் முரண்பாடு என்றால் என்ன என்று விளக்கம் சொன்னார்.

ஒருவர் ஆரம்பத்தில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு பிறகு தான் சொன்ன கருத்து தவறு தற்போது திருத்திக் கொண்டு இந்தக் கருத்துக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்து விட்டு முதலாவது கூறிய கருத்துக்கு மாற்றமாக கருத்துச் சொன்னால் அதற்குப் பெயர் முரண்பாடு அல்ல திருத்தம் என்பதை கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் பாடமாக நடத்திக் காட்டினார் சகோதரர் பி.ஜெ அவர்கள்.

இதே நேரம் ஜமாலியைப் போல் ஒரு மேடையில் ஒரு கருத்தையும் இன்னொரு மேடையில் அதற்கு மாற்றமாக இன்னொரு கருத்தையும் சொல்லிவிட்டு மக்கள் மத்தியில் ஒரு கொள்கையற்றவனாக தன்னை காட்டிக் கொள்வதென்பது மூடத்தனம் கயமைத்தனம் பித்தலாட்டம் முரண்பாடு என்பதையும் மிக அழகாக விளக்கிச் சொன்னார்.

கிழித்தெறியப் பட்ட மத்ஹபு குப்பைகளும் மாட்டிக் கொண்ட ஜமாலியும்.

ஜமாலியுடையவும் அவர் ஆதரிப்பவர்களினதும் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இருக்கும் முரண்பாடுகளையும் ஆபாசங்களையும் கயமைத்தனங்களையும் பட்டியலிட ஆரம்பித்தார் பி.ஜெ

ஆனால் சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட ஒரு கேள்விக்குக் கூட ஜமாலியினால் இறுதி வரை பதில் தரவே முடியவில்லை.

மத்ஹபுகளில் மலிந்திருந்த அசிங்கங்கள்.

ஹனபி மற்றும் ஷாபி போன்ற மத்ஹபுகளில் ஒரு சாதாரண மனிதன் கூட நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசங்களும் அபத்தங்களும் கயமைகளும் நிறைந்துள்ளதை சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்டு சொன்னார்.

சகோதரர் பி.ஜெ பட்டியலிட்ட மத்ஹபு அசிங்கங்களை தலைப்புவாரியாக இங்கு குறிப்பிடுகிறோம்

1.தானாக காற்றை விட்டு தொழுகைகளை முடிக்கலாம்.

2.கிழக்கிலிருக்கும் ஒருவரும் மேற்கில் இருக்கும் இன்னொருவரும் திருமணம் முடிக்கலாம்.அப்படி முடித்து ஆறு மாதத்தில் மனைவி பிள்ளை பெற்றால் அதனை குறை சொல்ல முடியாது ஏனெனில் கராமத்தின் மூலம் அவன் அவளிடத்தில் வந்து போயிருக்கக் கூடும்.

3.ஹஜ்ஜுடைய நேரத்தில் மனைவி தவிர யாரோடு வேண்டுமானாலும் உடலுறவு கொண்டாலும் ஹஜ் முறியாது.

4.ஹஜ்ஜுடைய காலத்தில் கழுதையுடன் புணர்வது பெண்ணின் ஹஜ்ஜை முறிக்கும் ஆணின் ஹஜ்ஜை முறிக்காது.

5.சிறுமியுடன் விபச்சாரம் செய்தால் தண்டனையில்லை.(மத்ஹபு நூல்கள் அதற்காக சொல்லும் காரணங்களை விவாதத்தில் பார்த்துக் கொள்ளவும்.)

6.ஊமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை

7.விபச்சாரம் செய்துவிட்டு பணம் கொடுத்துவிட்டால் அதற்கு தண்டனை இல்லை.

8.பைத்தியத்துடன் விபச்சாரம் செய்தால் தண்டனை கிடையாது.

9.வெளிநாட்டுக் காபிர் உள்நாட்டு முஸ்லிம் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் காபிருக்கு தண்டனை கிடையாது.

10.ஒரு பெண்ணை கண்ணியா இல்லையா என்று கண்டுபிடிக்க அவளை சுவற்றில் சிறு நீர் கழிக்கச் செய்ய வேண்டும்.அது சுவற்றில் படுகிறதா? இல்லையா? என்பதை வைத்து அவள் கண்ணியா? இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.என்ற கேவலமான வழிமுறைகள்.

11.விபச்சாரம் செய்து மாட்டிக் கொண்டவன் விபச்சாரியை மனைவி என்று சொல்லிவிட்டால் தண்டனை இல்லை.

12.தனது மர்ம உருப்பை தன்னுடைய பின் துவாரத்தில் நுழைத்தால் அவனுக்கு சட்டம் என்ன? என்று அதற்கு சட்டம் தொகுத்துள்ள மத்ஹபுவாதிகள்.

13.தான் திருமணம் செய்த மனைவியுடன் இரவில் உணர்ச்சியுடன் நெருங்கும் போது அவளுடைய மகளின் மீது தவறுதலாக கை பட்டுவிட்டால் மனைவிக்கும் கணவனுக்கும் உள்ள திருமன உறவு நீங்கிவிடும்.

14.இரண்டு பேர் திருடச் சென்று ஒருவன் உள்ளே சென்று திருடிவிட்டு வெளியிலிருப்பவனுக்கு அதனை கொடுத்தால் இருவருக்கும் தண்டனை இல்லை.(உள்ளே போனவன் திருடியதை வெளியில் கொண்டுவரவில்லை வெளியில் இருந்தவன் உள்ளே போய் திருடவில்லை இதுதான் மத்ஹபின் விளக்கமாம்.)

15.தூங்கி எழுந்ததும் பல் துலக்கும் போது முதலாவது வரும் எச்சிலை விழுங்கிவிட வேண்டும்.

16.ஹஜ்ஜின் போது சுய இன்பம் செய்தால் அது ஹஜ்ஜை பாதிக்காது.

17.தொழ வைத்த இமாமையே குர்பானி கொடுக்களாம்.

18.சிறிதளவு கஞ்சா அடிக்கலாம்.

19.குழந்தையை கடத்தியவனுக்கு தண்டனை இல்லை.

20.பல் துலக்கும் போது தனது இரண்டு கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களைக் கொண்டு ஒரே நேரத்தில் பல் துலக்க வேண்டும்.

மத்ஹபில் உள்ள குப்பைகள் பட்டியல் போட்டு எடுத்துக் காண்பித்தார் சகோதர் பி.ஜெ அந்த அசிங்கங்களுக்கு விவாதத்தின் இறுதி வரை எந்த ஒரு பதிலையும் தராது தனது தோல்வியை ஒத்துக் கொண்டு அமைதி காத்தார் ஜமாலி.
நபியவர்கள் மீதே பொய் சொன்ன ஜமாலி. எடுத்துக் காட்டும் படி சவால் விட்டார் பி.ஜெ.

கழுதையுடன் புணருவது தொடர்பான மத்ஹபு குப்பைகளை பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்டும் போது மத்ஹபு தொடர்பாக எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாத ஜமாலி இதற்கு மட்டும் நபியவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஸை சொன்னார்.

அதாவது : யார் மிருகத்துடன் புணர்கிறானோ அவனுக்கு தண்டனை இல்லை. என்று நபியவர்கள் கூறிய செய்தி திர்மிதியில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக பொய் சொன்னார் ஜமாலி.

அப்படி ஒரு ஹதீஸே இல்லை இருந்தால் திர்மிதியில் இருந்து எடுத்துக் காட்டுங்கள்.என்று சவால் விட்டார் பி.ஜெ ஆனால் நபியின் மீது பொய் சொன்ன பொய்யர் ஜமாலி இருதிவரை அப்படி ஒரு ஹதீஸைக் காட்டவே இல்லை.

ஜமாலி நபியவர்கள் மீது துணிந்து இட்டுக் கட்டிய பொய்கள்.

அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக இப்னு அஸாகீரில் உள்ளதாக குறிப்பிட்டார் ஜமாலி ஆனால் இப்னு அஸாகீரில் உள்ள செய்தியோ அபூதாலிப் காபிர் என்பதைத் தான் குறிப்பிடுகிறது.

நபியவர்கள் அபூதாலிபை காபிர் என்று எந்த ஹதீஸில் சொன்னாரோ அதே ஹதீஸின் ஒரு பகுதியை மறைத்து அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக நபியின் மீதே பொய் சொன்னார் ஜமாலி.

இது தொடர்பாக அபூதாவுத் நஸாயி போன்ற கிரந்தங்களிலும் ஹதீஸ் வருவதாக சொன்னவர் கடைசி வரை ஹதீஸைக் காட்டவே இல்லை.

புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களிலும் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கான ஆதாரம் இருப்பாக சொன்னார் ஜமாலி ஆனால் அதற்கு மாற்றமாக அபூதாலிப் காபிர் என்பதற்கான ஆதாரம் தான் புகாரி முஸ்லிமில் உள்ளது.

வுழூ செய்யும் போது வாய்ப் பகுதியை மூன்று முறை தனியாகவும் மூக்கை மூன்று முறை தனியாகவும் நபியவர்கள் கழுவியதாக புகாரியை ஆதாரம் காட்டி பொய் சொன்னார்.

பெண்கள் ஜும்மாத் தொழுகைக்கு வரக்கூடாது என்று நபியவர்கள் சொன்னதாக முஸ்லிமில் ஹதீஸ் இருக்கிறது என்று இல்லாத ஹதீஸை இருப்பதாக நபியவர்கள் மீது இட்டுக் கட்டினார்.

பெருநாள் முடிந்து இரண்டு நாட்கள் வரை குர்பானி கொடுக்களாம் என்ற நபியவர்கள் கூறியதாக முஅத்தாவில் ஹதீஸ் இருப்பதாக இல்லாத செய்தியை நபியவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டினார்.

யார் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளட்டும் (முஸ்லிம்)

என்ற நபி மொழியை எடுத்துக் காட்டி இந்த ஹதீஸிற்கு ஏற்றாட் போல் உங்கள் வாதம் உள்ளது என்பதை பி.ஜெ அவர்கள் விவாதக் கலத்திலேயே ஜமாலியிடம் தெரிவித்தார்.

தண்டவாளம் ஏறியது ஜமாலியின் வண்டவாளம்.

விவாதத்தில் தவ்ஹீத் ஜமாத் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக செயல்படுகிறது என்று வாதிட வந்த ஜமாலியின் முரண்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் வீடியோ காட்சியாக போட்டுடைத்தார் பி.ஜெ

அதாவது கூட்டத்திற்கு தகுந்தாற் போல் இடத்திற்கு ஏற்றாற் போல் பேசுவதில் வல்லவரான ஜமாலி ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு தில்லு முல்லு வேலைகளை செய்வார்.

அவை வீடியோவாக அரங்கத்தில் போட்டுக் காட்டப்பட்டு அவரிடமே விளக்கம் கேட்கப் பட்டது.

விவாதம் செய்வாதாக அரங்கத்திற்கு வந்தவர் மதில் மேல் குந்திய பூனை போல் இருதி வரை உளரிக் கொட்டிக் கொண்டே இருந்தார்.

அரங்கத்தில் போடப்பட்ட ஜமாலியின் ஒன்றுக் கொன்று முரண்பட்ட வீடியோக்கள் தலைப்பு வாரியாக.

மார்க்க விஷயத்தில் பித்அத் புதிதாக ஒன்றும் உருவாகாது ஆனால் உலக விஷயத்தில் உருவாகும் (வாகனங்கள் நாம் பயன் படுத்தும் பொருட்கள்) என்று ஓரிடத்தில் பேசிய ஜமாலி இன்னோரிடத்தில் தான் சொன்னதை தானே மறுத்துப் பேசிய காட்சி போட்டுக் காட்டப் பட்டது.

அபூதாலிப் முஸ்லிம் என்று ஒரு மேடையிலும் அவர் காபிர் தான் என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய வீடியோ அரங்கத்தினர் மத்தியில் போட்டுக் காண்பிக்கப் பட்டது.

இறைவன் அர்ஷில் இருக்கிறான் என்று ஒரு மேடையிலும் அர்ஷில் இல்லை என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப் பட்டது.

ஒரு விஷயம் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை என்று தமிழகத்திலும் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்று இலங்கையிலும் ஜமாலி பேசிய வீடியோ போடப்பட்டு முரண்பாட்டிட்கு விளக்கம் கோறப்பட்டது.

மார்க்க விஷயத்திற்கு சவூதி ஆதாரமாகாது என்று ஒரு வீடியோவிலும் ஆதாரமாகும் என்று இன்னோர் வீடியோவிலும் தனக்குத் தானே முரண்பட்ட காட்சி அரங்கத்தினர் முன்னிலையில் போடப்பட்டது.

தவ்ஹீத் வாதிகள் மதிக்கும் அறிஞர்களை மரியாதையாக தான் பேசுவதாக குறிப்பிட்ட ஜமாலியிடம் இப்னு தைமிய்யா அவர்களை அவன் இவன் என்று ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப் பட்டது.

இறைவனுக்கு உருவம் உண்டு என்று இப்னு தைமிய்யா கூட கூறவில்லை என்று கடந்த விவாதத்தில் வாதித்தவர் இப்னு தைமிய்யா இறைவனுக்கு உருவம் உண்டு என்று கூறினார் என இப்னு தைமிய்யாவை மேடையில் வைத்து வசை பாடும் காட்சி போட்டுக் காண்பிக்கப் பட்டது.

இப்படி தனக்குத் தானே ஜமாலி அவர்கள் முரண்பட்டு பேசிய விடியோக்கள் அரங்கத்தில் திரையில் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

அந்த வீடியோக்களை பார்த்தவுடன் அவர்கள் தரப்பு மக்களே ஜமாலி யார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள்.

போடப்பட்ட எந்த ஒரு வீடியோவுக்கும் பதில் தர முடியாமல் திண்டாடினார் ஜமாலி.

பி.ஜெ விட்ட சவாலும் விரண்டோடிய ஜமாலியும்.

மத்ஹபு நூல்களில் உள்ள ஆபாசங்களையும் அசிங்கங்களையும் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட போது அதில் உள்ள அசிங்கங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேச திராணியற்றுப் போன ஜமாலி இப்படியெல்லாம் அசிங்கங்களை இவர்கள் வாசித்துக் காட்டுகிறார்கள் என்று நீழிக் கண்ணீர் வடித்தார்.

அப்போது பி.ஜெ அவர்கள் அவரிடத்தில் மத்ஹபில் உள்ள அசிங்கத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து அசிங்கம் இல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல் நீங்கள் இதை தைரியம் இருந்தால் படித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார்.

ஆனால் விவாதத்தின் இருதி வரை அதை அவர் படிக்கவே இல்லை.

விவாதத்திற்கு அவர்கள் தரப்பால் வந்தவர்களே முகம் சுழித்துப் போகும் அளவுக்குத் தான் ஜமாலியின் வாதங்கள் அமைந்தன.

அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.
அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களால் ஊதி அணைத்துவிட நினைக்கிறார்கள்.தன்னை மறுப்போர் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(61:8)

தொகுப்பு : RASMIN M.I.Sc

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

துவங்கியது ஜனவரி 4 போராட்ட சுவர் விளம்பரங்கள்-திருச்சி சமஸ்பிரான் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளையில் பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடைபெறவுள்ள ஜனவரி 4 போராட்டத்தை பற்றிய விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் வண்ணம் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது


புதன், 20 அக்டோபர், 2010

செல்கல்பட்டில் கூடிய" தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்"-தின் வின் மாநில செயற்குழு!


17.10.2010 அன்று இறையருளால் செங்கல் பட்டு ஷஃபா மர்வா மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


1. கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று அலகாபாத் நீதிமன்றம் 60 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த பாபர் மஸ்ஜித் தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் மீழ முடியாத அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது. அது இந்திய நாட்டின் அரசியல் சட்ட வரம்புகளைத் தாண்டி,இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணாக அளிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களின் வாழ்வுரிமையான வழிபாட்டு உரிமையை பறித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது.

முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அக்கிரமும் ஆகும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்துகளை பதிவு செய்து தங்களுடைய கடுமையான ஆட்சேபணைகளையும் கண்டணங்களையும் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பை தங்களுடைய நீதிமன்ற அனுபவம்,அறிவு ஞானம் எனும் உலைக்கூடத்தில் இராசயனப் பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது

1992 டிசம்பர் 6ந்தேதி அன்று இந்துத்துவா சங்கபரிவார வன்முறைக்கும்பல் பாபர் மஸ்ஜிதை அக்கிரமமாக இடித்து தரைமட்டமாக்கி தகர்த்தெரிந்தது.. இந்த அக்கிரம செயலை நீதிமன்றம் கண்டு கொள்ளாததுடன் அதைக் கண்டிக்காமலும் விட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பான கோரச் செயலை மன்னித்து அச்செயலை புனிமாக்கியுள்ளது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர் 1993 ஐனவரி 7ம் தேதி அன்று குடியரசுத் தலைவர் ஆணைப்படி பாபரி மஸ்ஜிதை சுற்றி அமைந்துள்ளநிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. பின்னர் அதை நாடாளு மன்றத்தில் சட்டமாகக் கொண்டு வந்தது..

அந்தச் சட்டத்தின் விதி எண் : 4 உட்பிரிவு (3) பாபரி மஸ்ஜித் தொடர்பான அனைத்து உரிமையியல் வழக்குகளை செல்லாதது என்று அறிவித்திருந்தது.
பாபரி மஸ்ஜித் வழக்கு குறித்து குடியரசுத் தலைவர் கேட்டிருந்த கருத்திற்கு உச்ச நீதிமன்றம் அக்டோபர் 24, 1994ல் அளித்த தீர்ப்பில் இந்த பிரிவை ரத்து செய்தது. அந்த தீர்ப்பின் போது முஸ்லிம்கள் சர்ச்சைக்குரிய நிலத்தை 1528 லிருந்து 400 ஆண்டுகாலமாக அனுபவித்து வந்துள்ளனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எதிரிடை அனுபவ உரிமை (Adverse possession) யை இது பாதிக்கச் செய்து பறித்து விடுவதால் இது செல்லாது என்று குறிப்பிட்டது. அதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றம் 30.09.2010 அன்று அளித்த இந்த தீர்ப்பு, உச்ச நீதி மன்றம் 1994 அக்டோபர் 24 அன்று அளித்த தீர்ப்பிற்கு எதிரானது.

ஒரு சொத்து குறித்த உரிமை தொடர்பான வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் போது அந்தச் சொத்து தனக்குச் சொந்தம் என்று நிரூபிக்க வேண்டிய பொருப்பும் கடமையும் சொத்தின் சொந்தக்காரர் மீது இல்லை. மாறாக இந்தச் சொத்திற்கு எதிராக யார் வழக்குத் தொடுக்கின்றாரோ அந்தப் பிரதிவாதியின் மீதுதான் அந்தப் பொறுப்பு இருக்கின்றது. இதுதான் இந்திய சாட்சிய சட்ட ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட 110 ன் விதியாகும். அலகாபாத் உயர்நீதிமன்றம் இதை அப்பட்டமாக மீறி உள்ளது. பாபரி மஸ்ஜிதின் உரிமையாளரும் அனுபவதாரருமான முஸ்லிம்களை வெளியில் தள்ளியதோடு மட்டுமல்லாமல் அவர்கள்தான் இந்த சொத்துக்கு உரியவர்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்பதை முஸ்லிம்கள் மீது சுமத்தி அவர்களிடமிருந்து இந்தச் சொத்தை அநியாயமாகப் பறித்துள்ளது.

தொல்லியல் ஆய்வு என்பது இந்திய சாட்சிய சட்டத்தின் கீழ் உள்ளதல்ல, நீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டதல்ல என்பது தெரிந்தும் அதையே முழு ஆதாரமாகக் கொண்டு அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொல்லியல் ஆய்வு என்பது பாபரி மஸ்ஜித் இடிக்கப்படாத பட்சத்தில் சாத்தியமானதுமல்ல. பாபரி மஸ்ஜித் என்று ஒன்று அந்த இடத்திலேயே இல்லாதது போன்று தொல்லியல் ஆய்விற்கு உத்தரவிட்டு அதன்படியே தீர்ப்பும் அளித்தது அநியாயமும் அக்கிரமும் ஆகும். இது போன்று பாபரி மஸ்ஜித் என்றொரு கட்டிடம் இல்லாதது போன்றும் அது இடிக்கப்படாதது போன்றும் அந்த நிலத்தை மூன்று பங்காக பங்கு பிரித்திருப்பது இந்தத் தீர்ப்பின் மாபெரும் துரோகமாகும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு அப்பாற்பட்டும், இந்திய அரசின் உயிர்மூச்சான மதச்சார்பின்மைக்கு எதிராகவும் பெரும்பான்மை மதத்தினரின் மூடநம்பிக்கை, புராணம், கற்பனை அடிப்படையிலும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மதநம்பிக்கை , புராணம் ,இதிகாசம் என்ற அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் இந்த அடிப்படையில் பிறமதத்தவரின் வழிபாட்டுத் தலங்கள் அல்லாமல் பிறருடைய சொத்துக்களை ஆக்கிரமிப்பதற்கும் அபகரிப்பதற்கும் இந்தத் தீர்ப்பு வழிகோலியுள்ளது. இப்படி இந்திய ஒற்றுமைக்கும் மதச் சார்பின்மைக்கும் வேட்டு வைப்பது இந்தத் தீர்ப்பின் மாபெரும் பாதக பயங்கர அம்சமாகும்.

சங்கப்பரிவாரம் இதுவரை எழுதியும் பேசியும் வந்த வசனத்தை அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பாக தந்துள்ளது. ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுவது போல் Judgment delivered justice not delivered (தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதி நியாயம் வழங்கப்படவில்லை) என்று இந்திய சட்ட வல்லுநர்கள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர்கள் குறிப்பிடுகின்ற அநியாயமான இந்தத் தீர்ப்பை முஸ்லிம் சமுதாயம் ஏற்கவில்லை. இனியும் ஏற்பதில்லை என்று கூறி இந்தத் தீர்ப்பை வன்மையாக கடுமையாக இந்தச் செயற்குழு கண்டிக்கின்றது.

2. ராமர் பிறந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டியது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு நேர்மாறானது. அது பள்ளிவாசலே இல்லை என்று கூறி இஸ்லாமிய மார்க்கத்திற்கு முட்டாள் தனமான விளக்கம் கொடுத்து இந்திய அரசியல் சட்டப்படி கூட தீர்ப்பளிக்க தகுதியற்ற நீதிபதி தரம்வீர் சர்மா வை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

3. பாபரி மஸ்ஜித் தீர்ப்பு குறித்து யாருக்கும் அஞ்சாமல் நியாயமான கருத்து தெரிவித்த முலாயம் சிங் யாதவ்,லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரை இந்த செயற்குழு வெகுவாகப் பாராட்டுகின்றது.

4. இந்தத் தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மதம் கடந்து ஆர்ப்பரித்து குரல் எழுப்புகின்ற நடுநிலையாளர்கள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், ஊடகத் துறையினர் உட்பட அனைவருக்கும் இந்தச் செயற்குழு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

5. பாபர் மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு முடிவு செய்த பாபரி மஸ்ஜித் செயல்பாட்டுக் குழுவிற்கு (BMAC) இச்செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

6. அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான மாத்திரத்தில் இதை வரவேற்ற திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், சமுதாய இயக்கங்கள், குறிப்பாக இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம் இது வெற்றியின் முதற்படிக்கட்டு என்று தனது முகத்திரையை கிழித்து தனது துரோகத் தனத்தை வெளிப்படுத்திய தமுமுக, மற்றும் மமக வை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

7. பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்ற அத்வானி போன்றோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மென்மையான அணுகு முறை யைக் கையாண்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசை இச்செயற்குழு கண்டிக்கிறது. இத்தீர்ப்பிற்குப் பிறகு அவர்களை தப்புவிக்க சட்டமும் துணை போவதைக் கண்டு இச்செயற்குழு தனது வருத்தத்தை பதிவு செய்கிறது

8. காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகங்கள்.

துரோகம் : 1
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23 நள்ளிரவில்தான் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோரின் சிலைகள் பாபரி மஸ்ஜிதின் உள்வளாகத்தில் வைக்கப்பட்டன. அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தச் சிலைகளை உடனே அப்புறப்படுத்தி , அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததோடு மட்டுமல்லாமல் ஐவேளை தொழவிடாமல் தடுத்து நிறுத்தி பள்ளிவாசலை இழுத்து மூடிய துரோகத்தை காங்கிரஸ்தான் செய்தது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் இந்த அக்கிரமத்திற்கு துணைபோனது.
துரோகம் : 2
1989 ராஜீவ் காந்தி பிரதம அமைச்சராக இருக்கும் போது நாடாளுமன்ற தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இந்துக்கள் ஓட்டுக்களை பொறுக்குவதற்காக பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்த நிலத்திற்குள் விஸ்வஹிந்து பரிஷத் குண்டர்கள் சிலா நியாஸ் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு வைபவத்தை நடத்துவதற்கு அனுமதிவழங்கியததான் 1992ல் பாபர் மஸ்ஜித் உடைப்பிற்கு காரணமானது. இது காங்கிரஸ் கட்சி செய்த அடுத்த துரோகமாகும்

துரோகம் : 3
1992 பாபரி பள்ளிவாசல் இடிக்கப்படப் போகின்றது என்று உளவுத் துறை தகவல் தெரிவித்தும் மாநில பிஜேபி அரசைக் கலைக்காமல் கரசேவை என்ற பெயரில் இராணுவத்தின் மேற்பார்வையில் இந்துத்துவா சக்தி கயவர்கள் பாபரி மஸ்ஜிதை இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததும் காங்கிரஸ் ஆட்சிதான்.
துரோகம் : 4
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பிறகு அதே இடத்தில் தற்காலிக கோயில் கட்ட அனுமதித்ததும் காங்கிரஸ் அரசுதான்.

துரோகம் : 5
பாபர் மஸ்ஜித் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பது மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்னால் வெறும் சிந்தனையோட்டமாக மட்டுமே இருந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில் முதன் முதலாக பள்ளியின் கீழ் கோயில் இருந்ததா? என்பதை ஆய்வு செய்வதற்காக தன் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சிக்குரிய வழிகளை ஏற்பாடு செய்தது.. அதுதான் இன்றைய இந்தத் தீர்ப்பிற்கு காரணமாக அமைந்தது. இப்படி அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கு துரோகங்களுக்காக காங்கிரஸ் கட்சியை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. .

9. தீர்ப்பு எழுதி அதன் மை காய்வதற்குள்ளாக முஸ்லிம்களுக்கென்று ஒதுக்கப்படட மூன்றில் ஒரு பங்கு இடத்தையும் தங்களுக்கு விட்டு விட வேண்டும் என்று கூறி முஸ்லிம்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகின்ற ஆர்எஸ்எஸ் விஹெச்பி பஜ்ரங்தள் பிஜேபி போன்ற இந்துத்துவா அமைப்புகளை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

10. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் தீர்ப்பு வெளியான பிறகு பள்ளிவாசல்கள் புனிதத் தலமல்ல. அந்தப் பள்ளிவாசல்களை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் கையகப்படுத்தி சுகாதாரம் மற்றும் சாலைப் போடுதல் போன்ற பல்வேறு வகைக்கு பயன்படுத்தலாம் என்றும் பாபர் மஸ்ஜித் கட்டப்பட்ட இடம் இராமர் பிறந்த இடம்தான் என்று தீர்க்கப்பட்டது போன்று இனி இதுபோல் காசி விஸ்வநாத் கோயில், பிருந்தாவன் கோயில் விவகாரமும் தீர்க்கப்படவேண்டும் என்றும் கூறிய இந்துத்துவா வெறியன் அரசியல் அனாதை சுப்பிரமணிய சுவாமியை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

11. பாபரி மஸ்ஜித் பாணியில் இனி வேறொரு மஸ்ஜிதில் கைவைப்பதற்கு பாசிச சங்பரிவாரக் கும்பமல் முயற்சி செய்தால் அதே பாணியில் முஸ்லிம்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணித்து பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டார்கள் என்பதை இந்த செயற்குழு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.

12. சட்ட வரம்பைத் தாண்டி மதச் சார்பின்மைக்கு எதிராகவும் மதநம்பிககையின் அடிப்படையிலும் வழங்கப்பட்ட அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும் மேல் முறையீட்டின் போது சட்ட வரம்பிற்கு உட்பட்டு இவ்வழக்கில் தீர்ப்பளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை கோரியும் வருகின்ற ஜனவரி 4 2011 அன்று தமிழகம் தழுவிய அளவில் சென்னையிலும் மதுரையிலும் மாபெரும் பேரணி மற்றும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.

13. பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்கள் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். முஸ்லிம்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில் மதநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு, இந்திய அரசியல் சாசனச் சட்டத்திற்கு உட்பட்டு மேல்முறையீடு செய்யபடும் பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதீமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று இந்தச் செயற்குழு நம்பிக்கைவைக்கிறது.

14. தமிழக வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜுலை 4 2010 அன்று 15 இலட்சம் மக்கள் மத்திய அரசிடம் இந்திய அளவில் இட ஒதுக்கீடு கோரி தீவுத் திடலில் ஒன்று கூடினர். ஒடுக்கப்பட்டோரின் இந்த உரிமை மாநாட்டிற்கு பின்னர் ஏற்பட்ட பிரதமர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சந்திப்பின் போது இக்கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்தனர். அப்போது விரைவில் அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தனர். அந்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றும்படி பிரதமர் மன்மோகன்சிங் அவர்களையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களையும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

15. திருவிடைச்சேரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.அதே நேரத்தில் பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் துதிப்பதையும், தொழுவதையும் தடை செய்து குழப்பம் விளைவிப்பது கொலையை விடக் கொடியது. இத்தகைய அக்கிரமத்தனமான காரியங்களில் ஈடுபடுவர்கள் மீது பள்ளிவாசல் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இத்தகையவர்கள் பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பில் இருந்தால் அவர்களை களையெடுக்க வேண்டும் என்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களையும் இஸ்லாமியப் பெருமக்களையும் இநதச் செயற்குழு வாயிலாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டிக் கொள்கிறது.

16. திருவிடைச் சேரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பது வெள்ளிடை நீர் போல அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியில் உலகமெங்கிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு பெருவருகின்றது. ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் தவ்ஹீத் கொள்கையை பின்பற்றக்கூடிய மக்களாக மாறிவிட்டனர். 2010 ஜுலை 4 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை ஏற்று இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் அணிவகுத்து வந்ததே மிகப் பெறும் சான்றாகும். இதனைப் பொறுக்க முடியாத தவ்ஹீதிற்கு எதிரான சில அமைப்புகள் மற்றும் இலட்டர் பேடு இயக்கங்கள் பள்ளிவாசலில் தொழுவதை தடைசெய்பவர்களையும் குழப்பம் விளைவிப்பவர்களையும் கண்டிக்காமல் திருவிடைச் சேரி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மட்டும் பெரிது படுத்தி, பழியை தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சுமத்தி இதன் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என பகற்கனவு காண்கின்றன. ஆனால் இவர்கள் எவ்வளவுதான் பழி சுமத்தினாலும், திட்டங்கள் தீட்டினாலும் சத்தியக் கொள்கையின் பேரொளியை அணைத்து விட முடியாதென்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தவ்ஹீத் கொள்கைக்கும் எதிரான இவர்கள்தான் காணாமல் போவார்கள் என்றும் இந்த செயற்குழவின் வாயிலாக எச்சரிக்கிறோம்.

17. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பை ஏற்று முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையான இந்திய அளவில் இட ஓதுக்கீட்டைப் பெறுவதற்காக தமிழக இஸ்லாமிய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜுலை 4 அன்று சென்னைத் தீவுத் திடலில் சங்கமித்த இலட்சக் கணக்கான இஸ்லாமியப் பெருமக்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும், ஜமாஅத்தார்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கும் இந்தச் செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இதற்காக பொருளாதார உதவி செய்த வெளிநாடு, உள்நாடு கொள்கைச் சகோதரர்களுக்கும் அயராது பாடுபட்ட அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் இந்தச் செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

8. தற்போது நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் முஸ்ம்கள் அனைவரின் எண்ணிக்கையும் விடுபட்டு விடாமல் இருப்பதற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முஸ்ம்கள் மத்தியில் நிகழ்த்துமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும் இடம் பெயர்ந்து வாழும் முஸ்ம்களின் எண்ணிக்கையையும் ஒருங்கிணைத்து அவர்களின் மொத்த மக்கட்தொகையளவை வெளியிடுமாறு மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

19. இதற்கென இந்திய வெளியுறவு அமைச்சகத்தையும் மற்றும் வெளிநாட்டு தூதரங்களையும் அணுகி ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தி இடம் பெயர்ந்த இந்தி யர்களின் மொத்த எண்ணிக்கையையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு இந்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

20. அடிக்கடி பாலஸ்தீனத்தில் முஸ்ம்களைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேன் காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு அதன் மீது பொரு ளாதாரத் தடையை ஏற்படுத்த உலக நாடு களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்க ளின் உணர்வுகளை மதித்து இஸ்ரேலுடன் உள்ள உறவைத் துண்டிக்குமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

21. முஸ்லிம்களுக்கு உரிய இட ஒதுக் கீட்டில் நடந்த குளறுபடிகளைச் சரி செய்வ தாக தமிழக அரசு முஸ்லிம் சமுதாயத்துக்கு கடந்த தேர்தலின்போது உறுதியளித்தனர். அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுத் ததாகத் தெரியவில்லை. எனவே கொடுத்த வாக்கை நிறைவேற்றுமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

22. முஸ்லிம்களில் பிற்பட்டவர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டா லும் பிற்பட்ட முஸ்லிம்களும் மற்ற முஸ்லிம்களும் பொதுப் பட்டியலிலும் விண்ணப் பிக்க சட்டப்படி உரிமை இருந்தும் அதிகாரி கள் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து வருகின்றனர்.பொதுப் பட்டியலில் உள்ள 3% இடங்களிலும் முஸ்லிம்கள் போட்டியிடலாம் என்று தெளிவான ஆணை பிறப் பிக்குமாறு முதல்வரை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

23. சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி, கல்விக் கடன் ஆகியவை சென்ற ஆண்டு அதிகாரி களின் ஆணவப் போக்காலும் கல்வி நிலை யங்களின் அலட்சியப் போக்காலும் பெரும் பாலான முஸ்லிம்களுக்கு கிடைக்க வில்லை. அதுபோல் இந்த ஆண்டு நடக்கா மல் இருக்க தெளிவான வழிகாட்டுதலை வழங்கி அலைக்கழிக்காமல் முஸ்லிம் சமுதாயம் பயன் பெற தெளிவான வழிகாட் டுதலை அறிவிக்குமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

source: tntj.net

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

ஹாஜி யார்?

ஹஜ் செய்வது ஒரு புனித காரியம். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். தொழுகை, நோன்பு போன்ற கடமைகளைப் போல் ஹஜ் என்பது எல்லோருக்கும் கடமையாகி விடாது. யாருக்கு ஹஜ்ஜுக்குச் சென்று வருவதற்கு வசதியிருக்கின்றதோ அவர்களுக்கு மட்டுமே ஹஜ் செய்வது கடமையாகும்.

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)

பொதுவாகவே வணக்கங்கள் அனைத்தையும் இறைவனுக்காகவே செய்ய வேண்டும். தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற எந்த வணக்கமாக இருந்தாலும் அதை உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்காக நிறைவேற்ற வேண்டும். அதில் முகஸ்துதி, விளம்பர நோக்கு கலந்து விடக் கூடாது.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப் படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன் 98:5)

வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை நான் வணங்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆக வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன் எனக் கூறுவீராக! என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன் என்றும் கூறுவீராக! உளத்தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன் எனவும் கூறுவீராக! (அல்குர்ஆன் 39:11லி14)

இந்த வசனங்கள் வணக்கத்தைக் கலப்பற்றதாக்கி வணங்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

ஆனால் இன்று வியாபாரத்தை விளம்பரப் படுத்துவது போல் ஹஜ்ஜையும் விளம்பரம் செய்வதன் மூலம் அதிக பொருட்செலவு செய்து, பெரும் சிரமத்துடன் செய்கின்ற பெரும்பாலானவர்களின் ஹஜ் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இல்லாமல் போவதைப் பார்க்க முடிகின்றது.

ஹஜ்ஜைப் பற்றி இறைவன் கூறும் போது, அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல்குர்ஆன் 2:196) என்று கூறுகின்றான்.

அல்லாஹ் இவ்வாறு கூறியிருக்க பெரும்பாலும் ஹஜ் உம்ராவை நிறைவேற்றுபவர்கள் விளம்பர நோக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதைப் பார்க்க முடிகின்றது.

விருந்து வைபவங்கள்

இன்று ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் வீடு வீடாகச் சென்று நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன், நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன் என்று பயணம் சொல்லும் வழக்கம் இருக்கின்றது. இஸ்லாத்தின் முக்கியக் கடமைகளில் ஒன்றான தொழுகைக்கு ஒருவர் போகும் போது யாரிடமும் சென்று, நான் தொழுகைக்குப் போகின்றேன் என்று கூறுவதில்லை. அதுபோல் நான் நோன்பு வைக்கப் போகின்றேன் என்று யாரிடமும் போய் சொல் க் கொண்டிருப்பதில்லை. ஆனால் அதுபோன்ற கடமைகளில் ஒன்றான, அதே சமயம் வசதி படைத்தவர்கள் மட்டும் செய்யும் கடமையான ஹஜ்ஜுக்கு மட்டும் இவ்வாறு சொல்கின்றார்கள் என்றால் தங்களது செல்வத்தைத் தம்பட்டம் அடிப்பதாகவே இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஹஜ்ஜுக்குப் போகும் போது உயிருடன் திரும்புவோமோ இல்லையோ என்ற சந்தேகம் இருப்பதால் எல்லோரிடமும் சொல் விட்டுச் செல்கிறோம் என்று இதற்குக் காரணம் கூறுகின்றார்கள். ஆனால் இதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் வேறு எந்தப் பயணம் மேற்கொண்டாலும் இதுபோன்று ஊர் முழுக்க பயணம் சொல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு யாரும் செய்வதில்லை.

மேலும் ஹஜ் என்பது முந்தைய காலத்தைப் போன்று நீண்ட காலப் பயணமாகவும் இல்லை. 30 நாட்களுக்குள் முடிந்து விடும் இலகுவான பயணமாக இன்று ஆகி விட்டது. இப்படியிருக்கையில் இவர்களின் இந்த வாதம் ஏற்புடையதாகாது.

இவ்வாறு பயணம் சொல்வதோடு நிறுத்திக் கொள்வதில்லை. ஊரை அழைத்து விருந்து போடும் கொடுமையும் பல ஊர்களில் நடைபெறுகின்றது. ஹஜ் விருந்து என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர்களை அழைத்து பெரிய விருந்துகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விருந்து வைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தானே என்று இவர்கள் கேட்கலாம். ஆனால் ஒரு வணக்கத்தை மையப்படுத்தி விருந்து வைக்க வேண்டுமானால் அதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுத ல் ஆதாரம் இருக்க வேண்டும். இல்லையென்றால் அது பித்அத் எனும் வழிகேடாகவே அமையும். நபி (ஸல்) அவர்களும், அவர்களது காலத்தில் எத்தனையோ நபித்தோழர்களும் ஹஜ் செய்துள்ளனர். ஆனால் அதற்காக விருந்தளித்ததாக எந்த ஹதீசும் இல்லை.

இந்த ஹஜ் விருந்துகள் ஒரு சமூக நிர்ப்பந்தமாகவே ஆக்கப்பட்டு வருகின்றன. ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் விருந்து வைக்கவில்லையென்றால் அது ஏதோ மட்டமான ஒரு செயல் போல கருதப்படும் நிலையும் உள்ளது. பொதுவாக ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு ஒரு லட்சம் ரூபாய் தேவையென்றால் விருந்து, வழியனுப்பு என்ற விளம்பர வகைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யப்படுகின்றது.

ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் ஹஜ் கடமையாகி விடும் என்றால், இந்த விருந்துகளுக்காக மேலும் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வரை அவர் ஹஜ் செய்யாமல் தாமதிக்கின்றார். விருந்து வைக்காமல் ஹஜ்ஜுக்குச் சென்றால் நம்மை மக்கள் மதிக்க மாட்டார்களே என்று இவர் நினைப்பது தான் இதற்குக் காரணம். இதுபோன்று ஒரு நிர்ப்பந்தத்தை இந்த ஹஜ் விருந்துகள் ஏற்படுத்தியுள்ளன.

சில ஊர்களில் ஹஜ்ஜுக்குச் செல்லும் போதும், சில ஊர்களில் திரும்பி வரும் போதும், சில ஊர்களில் இரண்டு வேளைகளிலும் இத்தகைய விருந்துகள் வைக்கப்படுகின்றன. வணக்கத்தை விளம்பரமாக்கி, மற்றவர்கள் ஹஜ் செய்வதைத் தடுக்கும் இத்தகைய விருந்துகளை சமுதாயம் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.

ஹாஜி பட்டம்

ஹஜ் செய்து விட்டு வருபவர்களிடம் காணப்படும் மற்றொரு நடைமுறை ஹாஜி பட்டம். அதுவரை சாதாரண கருத்த ராவுத்தராக இருந்தவர், ஹஜ்ஜுக்குச் சென்று விட்டு வந்ததும் ஹாஜி கருத்த ராவுத்தராகி விடுவார். அதன் பிறகு இவர்களது பெயர் போடப்படும் இடங்களில் ஹாஜி என்ற அடைமொழி பயன்படுத்தப்படவில்லை என்றால் மிகுந்த கோபத்துக்குள்ளாகி விடுவார்கள். சிலர் கையெழுத்தில் கூட ஹாஜியைச் சேர்த்துப் போடுகின்றார்கள். ஒரு ஹஜ் செய்தால் ஹாஜி என்றும், இரண்டு ஹஜ் செய்தால் அல்ஹாஜ் என்றும் போட்டுக் கொள்வது தான் வேடிக்கையான விஷயம்.

ஹஜ் செய்தால் பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜை முடித்த பிறகு தமது பெயருக்கு முன்னால் ஹாஜி என்று போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் காலத்தில் ஹஜ் செய்த இலட்சக்கணக்கான நபித்தோழர்களில் எவரும் இவ்வாறு அழைக்கப்படவில்லை. இவர்கள் வார்த்தைக்கு வார்த்தை கூறும் இமாம்கள் கூட தங்களது பெயருக்கு முன்னால் ஹாஜி பட்டத்தைச் சூட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் இவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் ஹாஜி என்று சூட்டிக் கொண்டு அழகு பார்க்கின்றனர் என்றால் இதிலும் தங்களது வணக்கத்தை விளம்பரமாக்கும் நோக்கமே மிகைத்து நிற்கின்றது

thanks:rasmin

திங்கள், 11 அக்டோபர், 2010

அநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்.


இஸ்லாம் என்றால் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களில் ஈடுபடுவது மட்டும்தான் என்று பல எண்ணிக்கொண்டிருக்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச­லேயே தன் வாழ்கை கழித்தார்கள். உலக விஷயங்களைப்பற்றி நபிகளார் கவனத்தில் கொள்ளவில்லை, தொழுவதும் நோன்பு நோற்பதும்தான் அவர்களின் கடமையாக இருந்தது என்று எண்ணுகிறார்கள். அவர்கள் எண்ணும் வண்ணம் பல அறிஞர்களின் சொற்பொழிவுகளும் அமைந்திருக்கிறது.

வணக்க வழிபாடுகளை விட்டு விட்டு அரசியல் விஷயங்களில் ஈடுபட்டால் அது ஆன்மீகத்திற்கு எதிரானது என்றும் அநீததற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ஆன்மீகவாதிகள் இல்லை என்றும் எண்ணுகின்றனர்.

இவ்வாறு செய்பவர்களை காணும் பெற்றோர்கள், நீ உண்டு உன் தொழுகை உண்டு என்று இருக்க வேண்டியதுதானே என்று கண்டிப்பதைக் காண்கிறோம்.

ஆனால், உண்மையில் இஸ்லாம் அனைத்து துறைகளிலும் ஈடுபடவேண்டும் என்றும் அவ்வாறு செய்வதினால் மறுமையில் கூ­லி உண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

மார்க்க விஷயமாக இருந்தாலும் சரி, உலகவிஷயமாக இருந்தாலும் சரி, அநியாயம் நடக்கும்போதும் நீததற்கு மாற்றமாக காரியங்கள் நிகழும் போது அதை தட்டிக் கேட்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

இவ்வாறு தீமையை தட்டிக் கேட்போர் நல்லடியார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர்ஆன் 3:114)

தீமைக்கு எதிராக போராடும் ஒரு கூட்டத்தினர் இவ்வுலுகில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்றும் இவர்கள் வெற்றியாளர்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)

இவ்வசனம், தீமைக்கு எதிரான போராட்டம் மறுமைக்கு வெற்றித் தேடித் தரும் காரியம் என்பதை மிகத் தெளிவாக கூறுகிறது. நபி (ஸல்) அவர்களும் கூட தீமையைக் கண்டவர் எப்படி நடக்க வேண்டும் என்று வழிகாட்டியுள்ளார்கள்.

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்­ரித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் (ர­லி), நூல்கள் :

முஸ்­லிம் (78),திர்மிதீ (2098), நஸயீ(4922), அபூதாவூத் (963),இப்னுமாஜா (1265), அஹ்மத் (10651)

இறைநம்பிக்கை உள்ளவர்கள் தீமை காணும் போது நாவால் அதை தடுக்க சக்தியிருந்தால் அதை தடுக்க வேண்டும் என்ற நபிமொழியை நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அரசியல்வாதிகள் தீமைகளைச் செய்தால் இதற்கும் நமக்கும் என்ன தொடர்பு?
இது அரசியல், அதில் போய் நாம் ஏன் தலையிட வேண்டும் என்று நினைப்பவர்கள் பின்வரும் நபிமொழியை படிக்கட்டும்.

எந்த ஜிஹாத் சிறந்தது? என்று ஒரு மனிதர் கேட்டார்? அதற்கு நபி (ஸல்) அவர்கள் அநியாயம் செய்யும் மன்னர் முன் சத்தியத்தை எடுத்துரைப்பதுதான் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப்(ரலி­),
நூல்கள் :நஸயீ (4138), அஹ்மத் (18076)

ஆட்சியாளர்கள் நியாயத்திற்கு எதிராக நடக்கும் போது அதைப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதை தட்டிக் கேட்பவர்கள் சிறந்த ஜிஹாதை (அறப்போரை) செய்தவர்களாக கருதப்படுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் சத்தியம் என்று தெரிந்த ஒன்றை ஆட்சியாளர் என்பதற்காக சொல்லாமல் இருக்கக்கூடாது. நியாயத்தை எங்கிருந்தாலும் சொல்லும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும்.

நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்கüன் பழிப்புரைக்கு அஞ்சாமல் 'உண்மையே பேசுவோம்' என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் உறுதிமொழி அüத்தோம். (நூல் :புகாரி 7199)

முஸ்­லிம்கள் தொழுமிடமாக பயன்படுத்தி வந்த பாபர் பள்ளிவாசலை 1992 டிசம்பர் 6 அன்று அநியாயமாக ஒரு கும்பல் இடித்து தள்ளியது.அதை அன்றைய அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. முஸ்­லிம்களின் எதிர்ப்பை காட்டிய போது அதே இடத்தில் பள்ளிவாசல் கட்டித் தருவோம் என்றும் வாக்குறுதி வழங்கிவிட்டு இன்று வரையிலும் பள்ளிவாசல் கட்டித் தரவில்லை.

இந்த அநியாயத்தை கண்டிப்பதும் ஆட்சியாளர்களிடம் உரிமையை பெற்றுத்தர போராடுவதும் மார்க்கம் அங்கீகரித்த, நன்மையை பெற்றுத்தரும் நற்செயலாகும் என்பதை கவனத்தில் கொண்டு இது போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு ஈருலுக நன்மையைப் பெறுவோம்.
நன்றி:ஏகத்துவம் மாத இதழ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டதில் கடந்த 6-10-2010 அன்று நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டதில் கடந்த 6-10-2010 அன்று நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.

வெள்ளி, 1 அக்டோபர், 2010

நீதி செத்துப் போனது- பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை!


பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.


எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.

ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.


நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.


இது தொடர்பாக வரும் 17-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.
இப்படிக்கு
ரஹ்மதுல்லாஹ்
மாநிலத் துணைத் தலைவர்