கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

செவ்வாய், 28 ஜூன், 2011

தவ்ஹீத் பள்ளி ஜும்ஆ உரை- "மிஹ்ராஜ் தரும் படிப்பினை "

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் 24.06.2011 வெள்ளிக்கிழமை அன்று இலங்கை அப்துல் ஹக்கீம் அவர்கள் "மிஹ்ராஜ் தரும் படிப்பினை " என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தன.
மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.

மிஃராஜ் ஓர் அற்புதம்

மஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே!

மமகவிற்கு மரண அடி– சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்!

கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.

உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இன்று (28/06/2011) சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்

செவ்வாய், 7 ஜூன், 2011

சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்

மமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா? அல்லது அரசுக்குத் தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், 09/06/2011 வியாழக்கிழமை அன்று தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதற்காக மக்களை பெருந்திரளாக திரட்டும் பணியையும் முடுக்கியும் விட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்களைக் கண்டு சுறுசுறுப்படைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து ”உணர்வு அலுவலகம் உங்களுடையது தான், 9 ஆம் தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவகம் ஒப்படைக்கப்படும்” என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர்.

அவர்களின் வாக்குறுதி நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலும், அதிகாரிகள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாலும் இந்த சட்டசபை முற்றுகைப் போராட்டம் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டள்ளது.

ஞாயிறு, 5 ஜூன், 2011

தவ்ஹீத் பள்ளி ஜும்ஆ உரை -"பெற்றோரை பேணுவோம்"

 கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் 03.06.2011அன்று வெள்ளிக்கிழமை பென்னடம் யாசீன் அவர்கள் "பெற்றோரை பேணுவோம் " என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தன

ஒருவர் நபி அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று கேட்டார். அதற்கு நபி "அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா

ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்

பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23

பெற்றோரை பேணுதலும் ஜிஹாத்