கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வியாழன், 8 மே, 2014

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : 90.6% மாணவர்கள் தேர்ச்சி!

சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இத்தேர்வில் 90.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தாள். தர்மபுரி பள்ளி மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்தார். மேலும் 3ம் இடத்தை இரண்டு மாணவர்கள் பிடித்தனர், நாமக்கல் போதுப்பட்டியைச் சேர்ந்த டி.துளசிராஜன் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பெற்றார்.  மேலும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த எஸ்.நித்யாவும் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தைப் பிடித்தார்.  

ப்ளஸ் 2 தேர்வில் ஒட்டுமொத்தமாக 90.6 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 4 லட்சத்து 14 ஆயிரத்து 211 மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுஷாந்தி 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். ஆங்கிலத்தில் ஓசூரைச் சேர்ந்த பவித்ரா 198 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பிடித்தார். கணிதத்தில் 3882 புலிகள் 200க்கு 200 பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 5,884 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை தேர்வு நடந்தது. இதற்காக 2210 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 74,197 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 38,392 பேர் மாணவிகள். புதுச்சேரியில் 120 பள்ளிகளில் படித்த 13,528 பேரும் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 1 லட்சம் பேர் எழுதினர். இது தவிர சிறைகளில் உள்ள 58 கைதிகளும் இந்த தேர்வை எழுதினர். டிஸ்லெக்சியா மற்றும் இதர குறைபாடுகள் உள்ள மாணவர்கள் 1000 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.  
தேர்வின்போது, கேள்வித்தாள் படித்து பார்க்க இந்த ஆண்டும் 15 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. 

விடைத்தாளில் முதல் முறையாக மாணவர்களின் போட்டோ, தேர்வு எழுதும் பாடம் உள்ளிட்டவை அச்சிட்டு வழங்கப்பட்டன. ஹால்டிக்கெட்டிலும் மாணவ மாணவிகளின் போட்டோ இடம் பெற்றது.  மாணவர்களின் வருகையை பதிவு செய்ய போட்டோவுடன் கூடிய பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த தேர்வு மையங்களில் மாணவர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டன. 

கேள்வித்தாள் இந்த ஆண்டு மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு அத்தாட்சியாக மாணவர்களிடம் கையெழுத்து

சனி, 3 மே, 2014

கொள்ளுமேடு தீ விபத்து தவ்ஹீத் ஜமாஅத் நிவாரண உதவி!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொள்ளுமேடு சலாமத் புது நகரில் இருக்கும் மர்ஹூம் கரிகடை அன்வர் அவர்களின் வீடு நள்ளிரவு 1 மணிக்கு மர்ம நபர்களால் எரிக்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானயின.இதைத் தொடர்ந்து கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியதோடு நிவாரண உதவியாக 5 ஆயிரம் ரூபாய் பணமாக வழங்கப்பட்டது.அவர்கள் அல்ஹம்துலில்லாஹ்.. அவர்களின் துயர் போக்க இறைவனிடம் தூஆ செய்வோமாக.
படங்கள்: முஹம்மது ரஜ்வி (நமது செய்தியாளர்)