கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

பரங்கிப்பேட்டை ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் - வீடியோ!


பரங்கிப்பேட்டை, ஆக.25: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 15.06.2013 அன்று பரங்கிப்பேட்டையில் மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனுடைய வீடியோவை உங்கள் பார்வைக்கு






உரை: E.முஹம்மத் (மாநில செயலாளர்)
தலைப்பு: தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள்




உரை: கோவை ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச்செயலாளர்)
தலைப்பு: தவ்ஹீத் கொள்கை


உரை: சகோ.பாஷா (நகர பொருளாளர்)
தலைப்பு: தீர்மானங்கள்



உரை: முஹம்மது இஸ்மாயில் (அமீரக கடலூர் மாவட்ட பொறுப்பாளர்)
தலைப்பு: நன்றியுரை

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஆறு நோன்பு!

ஷவ்வால் மாத ஆறு நோன்பு! ரமளான் முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

யார் ரமளான் மாதம் நோன்பு நோற்று அதை தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நாட்கள் நோன்பு நோற்கின்றாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யுப்(ரலி) நூல்கள்: முஸ்லிம் 1984 திர்மிதி, அபுதாவூத் 

 மேலும் நம் பகுதியிலுள்ள மக்கள் இந்த நோன்பை பெண்களுக்கு உண்டானது என்று கூறி ஆண்கள் அலட்சியமாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ்வும் அவனது ரஸுலும் அப்படி கட்டளையிடவில்லை. அதனால் சுன்னத்தான நோன்பு தானே என அலட்சியமாக இருக்காமல் அல்லாஹ்வின் அன்பைப்பெற முயற்சிக்க வேண்டும். பெருநாளை தொடர்ந்து ஷவ்வால் மாதம் முழுவதும் நமக்கு வசதியான நாட்களில் இந்த ஆறு நோன்புகளையும் நோற்று காலமெல்லாம் நோன்பு நோற்ற பலனை அடைந்திட முயற்சி செய்ய வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர் மீதும் அருள் செய்திடுவானாக!

சனி, 10 ஆகஸ்ட், 2013

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளி ஈத் பெருநாள் புகைபடக்காட்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் சிறப்பான முறையில் பெருநாள் கொண்டாடப்பட்டது ...கடந்த ஆண்டுகளைப்போல் திடல் தொழுகைக்கான திடல் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் பெருநாள் முதல் நாள் பெய்த மழையால் திடல் தொழுகை தடைப்பட்டது இதைத்தொடர்ந்து பள்ளிக்கு உள்ளே தொழுகை நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்...

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிஃத்ரா விநியோகம் -2013


கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பிஃத்ரா  விநியோகம் கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் சிறப்பான முறையில் நடைப்பெற்றது...மேலும் கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் நமது பக்கத்துக்கு கிராமங்களான கந்தகுமாரன் மற்றும் புத்தூர் மக்களுக்கும் பயன்படும் வகையில்  பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டது.. விபரம் வருமாறு

மொத்த வரவுகள் :ரூ 41,574/- 
                                       உள்ளூர் வசூல் (ஜமாஅத்தினர் மட்டும் )ரூ 18,174/-
                                       வெளிநாடு வசூல் ரூ 13,400/-
                                       தலைமை மூலம் ரூ 10,000/-

மொத்த செலவுகள்: ரூ 41,574/-
மளிகை பொருட்கள் மொத்தம் ரூ 29,074/-
கோழி விநியோகம் மொத்தம்    ரூ:12,500/-


குடும்பத்தினர்க்கு தலா ரூ 361.51 வீதம் மொத்தம் 115 குடும்பங்களுக்கு விஃத்ரா  விநியோகம் செய்யப்பட்டது...அல்ஹம்துல்லில்லாஹ்

செய்தி,படங்கள் :முஹம்மது ராஜவீ , இஜ்ஜுல்  

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்!-லைலதுல் கத்ர்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில் மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)

லைலத்துல் கத்ரு எந்த நாள்?
லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன. ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700) மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக்