கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஜனவரி, 2014

பல லட்சம் இஸ்லாமியர்கள் திரண்ட தவ்ஹீத் ஜமாத்தின் இட ஒதுக்கீடு போராட்டம்!


மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் லட்சகணக்கான முஸ்லீம்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை, கோவை, நெல்லை, திருச்சி ஆகிய இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை காந்திபுரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரையாற்றினார்.அப்போது அவர், ”தமிழகத்தில் முஸ்லீம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு போதுமானதல்ல என்றும் அதை அதிகரித்துத் தருவோம் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், இரண்டரை ஆண்டு காலமாகியும் இன்னும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல், இந்திய அளவில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் அரசு ஏமாற்றி வருகிறது.
உடனடியாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றம், சட்டமன்றத்தை முற்றுகையிட்டு அதன் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்குவோம்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை
இதேப்போன்று சென்னையிலும் ராஜரத்னம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

நெல்லை, வண்ணாரப்பேட்டை தெற்குப் புறவழிச்சாலையில் ஜமாத்அத் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. இதற்கு ஜமாத்அத் மாநில மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள்

7 சதவீத இடஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் போராட்டம்!

சென்னை, -முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் நடந்த சிறை செல்லும் போராட்டத்தில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
சிறை செல்லும் போராட்டம்
மத்தியில் 10 சதவீதமும், தமிழகத்தில் 7 சதவீதமும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னை, திருச்சி, நெல்லை, கோவை, புதுச்சேரி, காரைக் கால் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் சிறைசெல்லும் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் தனி மேடை அமைக்கப்பட்டு போராட்டம் நடந்தது. மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரை
தமிழகத்தில் முஸ்லிம்களின் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த மாநில அரசை வலியுறுத்தியும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைப்படி மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் 10 சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டை சட்டமாக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தின் 4 மையங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே இடத்தில் நடத்தினால் நகரமும் கொள்ளாது, அனைவரையும் கைது செய்து சிறைக்கு அழைத்து செல்ல போலீசாரிடமும் அவ்வளவு வாகனங்களும் இல்லை. இதனால் 4 இடங்களில் பிரித்து நடத்தப்படுகிறது.
ஏமாற தயாராக இல்லை
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு காசு கொடுத்தும், சாராய பாக்கெட்டுகள் கொடுத்தும் கூட்டிவரவில்லை. இடஒதுக்கீட்டை பெறுவதை குறிக்கோளாக கொண்டு அனைவரும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டுள்ளனர். பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தரும் கட்சிக்கு எங்கள் ஆதரவை அளிக்க முடிவு செய்துள்ளோம். இனியும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு சமுதாயம் தயாராக இல்லை.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க, மற்றும் தி.மு.க, தேர்தல் வாக்குறுதிகளில், ‘‘முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு போதுமானதாக இல்லை, என்பதால் வெற்றி பெற்றால், அதிகரித்து வழங்கபடும்’’ என்று இரண்டு கட்சிகளுமே ஒப்புக்கொண்டு அறிவித்தன. ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
மிகப்பெரிய அதிசயம்
முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று தந்த கட்சி தி.மு.க. தான். இதற்காக கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு

செவ்வாய், 13 நவம்பர், 2012

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது மன்னிப்பு அறிவிப்பு!

அபுதாபி:சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது, அல்லது அபராதம், சிறைத்தண்டனை இல்லாமல் சொந்த நாடுகளுக்கு திரும்பும் வகையில் பொது மன்னிப்பை ஐக்கிய அரபு அமீரக அரசு மீண்டும் அறிவித்துள்ளது. டிசம்பர் 4-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை பொது மன்னிப்பின் காலாவதியாகும்.

இக்காலக்கட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைத்து தொழிலாளர்களும் வசிப்பிட, குடியேற்ற துறையுடன் தொடர்புக்கொண்டு சட்டப்பூர்வமான ஆவணங்களை பெறவோ அல்லது அவுட் பாஸைப் பெற்று சொந்த நாடுகளுக்கு திரும்பவோ செய்யலாம். இத்தகவலை அஸிஸ்டெண்ட் அண்டர் செகரட்டரி மேஜர் ஜெனரல் நாஸர் அல் அவாதி மின்ஹலி தெரிவித்துள்ளார்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

தமிழக முஸ்லீம்களின் தற்போதைய நிலை குறித்து BBC-யில் P.J பேட்டி!



தமிழக முஸ்லீம்களின் தற்போதைய நிலை குறித்து BBC தமிழோசை நடத்தி வரும் ஆய்வுத் தொகுப்பில் தமிழக முஸ்லீம்களின் வாழ்வுரிமைக்காக பல வருடங்களாக பல விதமான போராட்டங்களையும் இட ஒதுக்கீடுக்கான விழிப்புணர்வு மாநாடுகளையும் தொடார்ந்து நடத்தி வரும் தமிழக முஸ்லீம்களின் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் சகோ.பீ.ஜைனுல்  ஆபிதீன்  அவர்கள் 05.08.2012 அளித்த சிறப்பு பேட்டி.
(BBC வெளியிட்ட செய்தியை பார்க்க கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்)

http://www.bbc.co.uk/tamil/india/2012/08/120805_tnmuslimpart1.shtml

செவ்வாய், 29 மார்ச், 2011

தயவு செய்து சிந்தியுங்கள்!

தொகுப்பு: Habiburrahman
அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’தின் தேர்தல் ஆதரவு நிலையை தொடர்ந்து பல்வேறு கேள்விகளை முன் வைக்கும் நம் சகோதரர்கள் அனைவரும் இந்த மடலை ஒரு முறையேனும் முழுதாக படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாமெல்லாம் முதன் முதலில் ஓர் அடிப்படையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க வாக இருந்தாலும் அது அ.தி.மு.க வாக இருந்தாலும் ரெண்டுமே இஸ்லாமிய சமுதாயத்திற்கு பாதகங்களைத்தான் அதிகம் செய்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க இயலாது.

அரசியல் என்றாலே அரசியல்வாதிகள் என்றாலே ஊழல், அவரவர்களுக்கு சொத்து சேர்த்துக்கொள்ளுதல், அடக்குமுறைகள், லஞ்சம், சிறுபான்மை சமுதாயத்தை நசுக்குதல்... இவையெல்லாம் அவர்களோடு ஒட்டி பிறந்த ரெட்டை குழந்தைகள். இதில் அவர்களுக்குள் யாருக்கும் விதிவிலக்கில்லை.

இந்த நாட்டில் சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தில் வாழும் நாம் இந்த அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறேன் என கிளம்பினால், முழுநேர அரசியலில் ஈடுபட்டால் - முஸ்லிம் அல்லாத மற்ற மற்ற சமுதாயத்தவர்களின் ஆதரவையும் பெற்றால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதற்காக வளைந்து கொடுக்க ஆரம்பித்து; அனைத்து விழயங்களிலும் வளைந்துகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு; இறுதியில் படைத்த இறைவனுக்கு இணைவைக்கும் பகிரங்க வழிகேட்டு காரியங்களும் நம் கண் முன்னே நடக்கும்போது அதை தடுக்க திராணியற்றவர்களாக மாறி,இறுதியில் அரசியல் சாக்கடையில் விழுந்த பன்றிகளாக உருவெடுப்போம்,தள்ளப்படுவோம். நமது ஒரே உயர் நோக்கமான மறுமை வாழ்கையை பாழாக்கி கொள்வோம். மரணத்திற்குப்பின் நிரந்தர நரகத்தில் தள்ளப்படுவோம்.

சனி, 26 மார்ச், 2011

மூன்று முறை பேசியும் முஸ்லிம்களைப் புறக்கணித்த அதிமுக

வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அதிமுக வாக்களித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் அதிமுக சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு மூன்று தடவை நேரில் வந்து ஆதரவு கேட்டனர். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதியளிப்போம் என்று சொன்னால் தவிர நாங்கள் ஆதரிக்க முடியாது என்று நாம் திட்டவட்டமாகச் சொன்னோம். இதன் பின்னர் பல தடவை பேச்சு வார்த்தை நடத்திய பின் தேர்தல் அறிக்கையில் சொல்வதாகவும் அதற்கான வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்று நம்மிடம் கேட்ட போது அந்த வாசகத்தை நாம் எழுதிக் கொடுத்தோம். கட்டாயம் தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்று அவர்கள் உறுதி மொழி அளித்தாலும் தேர்தல் அறிக்கையைப் பார்க்காமல் நாங்கள் முடிவு சொல்ல முடியாது என்று கூறினோம்.

இதன் காரணமாகவே அதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை யாருக்கு ஆதரவு என்னும் முடிவை எடுக்காமல் தள்ளி வைத்தோம்.

ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக ஒரு வார்த்தையும் இல்லை.

ஆனால் திமுக வின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அதிகரிப்பது பற்றி கூறப்பட்ட பின்பும் திமுக வின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பியடித்த ஜெயலலிதாவுக்கு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பாராவை மட்டும் காப்பியடிக்கக் கூட மனமில்லை.

செவ்வாய், 22 மார்ச், 2011

பதவிக்காக இணைவைக்கவும் தயார்!!

பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். தமிழ்நாட்டில் முதலாவதாக பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் இவராகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

அதுமட்டுமல்ல, இவர் தனது பிரசாரத்தை தொடங்கிய இடம் வண்ணார்பேட்டை சாலைத் தெருவில் உள்ள வெற்றி வேலடி விநாயகர் கோயில். அங்கு சிறப்பு பூஜையை முடித்துக் கொண்டு, விநாயகரை வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டு, தேங்காய் விடலையும் போட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.

என்ன இப்படி? என கட்சிக்காரர்களிடம் கேட்டால், மைதீன்கான் இதே தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் போட்டி போட்டபோதும் இதே கோயிலில் வணங்கிவிட்டுதான் பிரசாரத்தை தொடங்கினார். இரு தேர்தல்களிலும் அவருக்கு அமோக வெற்றி. அதுமட்டுமல்ல, கடந்த தேர்தல் வெற்றி அவரை அமைச்சராகவும் ஆக்கியது. அந்த "சென்டிமெண்ட்'தான் மைதீன்கானை இந்தத் தேர்தலிலும் இங்கே அழைத்து வந்துள்ளது என்றனர்.

வெள்ளி, 4 மார்ச், 2011

முஸ்லீம் பெயர்தாங்கி அரசியல் கட்சிகள் !!!

கண்ணியமிக்க வல்லோன் தன் திருமறையில் கூறுகிறான்: அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுப் படுத்துகிறாய்.நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 3:26)

ஒருவருக்கு ஆட்சியை வழங்குவதும், அதைப் பறித்துக் கொள்வதும் நம்மை படைத்த அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது.நாம் வாழும் இந்திய திருநாட்டிலே யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நாமே தீர்மானித்து, தெர்ந்தெடுக்கக் கூடிய வசதியை வல்ல இறைவன் இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் நமக்கு வழங்கியுள்ளான். அதனடிப்படையில் இந்திய முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய ஓட்டை ஆண்டாண்டு காலமாக சில குறிப்பிட்ட கட்சிகளுக்கே ஓட்டளித்து அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து அழகுப் பார்த்தோம்.

நமது தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த சட்டசபைத் தேர்தல் இன்ஷாஅல்லாஹ் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைபெறம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சி அல்லது தான் சார்ந்த கூட்டணிக்குத் தான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என விரும்புவார்கள். மேலும், மற்ற சமுதாயத்தைப் பொருத்தவரையில் எல்லாக் கட்சிகளிலும் பரவலாக இருக்கின்றனர்.

ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இதுநாள் வரையில் குறிப்பிட்ட சில கட்சிகளுக்குத்தான் ஆதரவு என்ற நிலைபாட்டில் உள்ளனர். யாரை முஸ்லீம் சமுதாயம் ஆதரிக்குமோ அவர்கள் தான் அதிகமான இடங்களை பெற்றுனர் என்பதால் அனைவரின் பார்வையும் முஸ்லீம் சமுதாயத்தின் மீது தான் உள்ளது.

புதன், 12 ஜனவரி, 2011

காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதி

வாக்காளர்க‌ள்:
மொத்த வாக்காளர்கள்:1,79,633
ஆண் வாக்காளர்கள்: 93,009
பெண் வாக்காளர்கள்:86,624
வாக்குச்சாவடிகள்: 212

தற்போதைய எம்.எல்.ஏ.:
ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)

தொகுதி மறுசீர‌மைப்பு:
தொகுதி மறுசீரமைப்பில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

தொகுதி எல்லைக‌ள்:
காட்டுமன்னார் கோயில் தாலுக்கா
இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 11 முறை
தி.மு.க.: 5 முறை வெற்றி
காங்கிர‌ஸ்: 2 முறை வெற்றி
இந்திய‌ ம‌னித உரிமை க‌ட்சி: 2 முறை வெற்றி
காங்கிர‌ஸ் ஜ‌ன‌நாய‌க‌ப் பேர‌வை: 1 முறை வெற்றி
விடுத‌லைச் சிறுத்தைக‌ள்: 1 முறை வெற்றி