கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சனி, 30 ஜூன், 2012

காட்டுமன்னார்குடியில் இஸ்லாத்தை ஏற்ற சுவாமிநாதன்


kattumannar koil
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் 23 6 12 அன்று சுவாமிநாதன் என்ற முதியவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை யூசுஃப் என மாற்றிக்கொண்டார். அல் ஹம்துலில்லாஹ்

திங்கள், 18 ஜூன், 2012

அநியாயம் இது அநியாயம்!


 ஜுன்18 மார்ச் மாதம் 1346 பயிற்சி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1346 பேரில் ஒரே ஒரு முஸ்லிமுக்குக் கூட வேலை அளிக்கப்படவில்லை. 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்குக் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.  இதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக மாவட்டம் முழுவதும் கண்டன சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது...


மரணத்திற்கு பின்னும் நன்மைகள்!


பிரபஞ்சத்தின் படைப்பாளானாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:  
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே! பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ( அல்குர்ஆன்: 29:57)
 மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் மரணித்தே தீர வேண்டும். மரணத்திலிருந்து தப்பித்தவர்கள் யாருமில்லை. இன்று மற்றவர்கள் மரணித்தால் நாளையோ அல்லது நாளை மறுநாளோ நாம் மரணிக்கப் போகிறோம்...
.
அந்த மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்மையெல்லாம் படைத்த இறைவன் இயம்புகின்றான். அதனால் தான் மரணித்தப் பின் நீங்கள் அனைவரும் என்னிடமே கொண்டு வரப்படுவீர்கள் என்று தன்னுடைய திருமறையின் மூலமாக கூறுகின்றான்அதுமட்டுமின்றி இவ்வுலக வாழ்வையும் மரணத்தையும் இவ்வாறு கூறுகின்றான்:உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன். மன்னிப்பவன். (அல்குர்ஆன் 67 : 2) நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.    (அல்குர்ஆன் 31 : 22)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும். 1.நிலையான தர்மம் 2.பயனுள்ள கல்வி  3.இறைவனிடம் பிரார்த்திக்கும் குழந்தைகள். (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம்)
ஒரு இலக்கை நோக்கி மனித இனம் பயணித்துக் கொண்டிருக்கிறது. மனித இனம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அந்த இலக்கை அது அடைந்தே தீரும். அவ்விலக்கை சில லட்சியங்களுடன் வாழ்ந்து சென்றடைந்தால் மனித இனம் மாண்பு பெறும். அந்த லட்சியங்களையும் தன்னைப் படைத்த இறைவனும் அவனின் திருத்தூதரும் காட்டிய வழியில் அமைத்துக் கொள்ளுமேயானால் நிலையான பலா பலன்களை மனித இனம் தனது இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும். இல்லையெனில் தலைக்குனிவே! அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
இறைவனோடு மனித இனத்துக்குள்ள பந்தம் சில தினங்களுக்கு மட்டுமல்ல. குறிப்பிட்ட நேரத்தோடு முடிவடைந்து விடுவதுமல்ல. பிறக்கும் பாக்கியம் பெற்றதிலிருந்து மரணத்தின் வழியாக மறுமை வாழ்க்கை வரை மகத்தான இரட்சகனின் நிர்ணய ஏற்பாட்டில் மனிதன் பிரிக்க முடியாத அம்சமாக இருக்கிறான்

பிறவிப் பயனை அவன் அடைய வேண்டுமேயானால் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்க்கைப் பற்றிய கவலையும் அக்கறையும் மனிதர்களின் எண்ணங்களில் நீங்காத நீருற்றாக ஊற்றெடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது ரசூலும் எடுத்துக் காட்டும் நன்மைகளை செயல்படுத்துவதன் மூலம் அந்த நீருற்று அல்லாஹ்வின் பேரருளால் வற்றாத ஜீவநதியாய் பொங்கி பிரவகிக்கும்.
இந்த நதியின் விளைச்சலும் அதன் அறுவடையும் ஏக நாயன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தால் கிடைப்பதாகும்.அதைத்தான் அல்லாஹ் தனது திருமறையில் 67 : 2 ல் உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்று சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் படைத்ததாகக்

ஞாயிறு, 17 ஜூன், 2012

மிஃராஜ் தரும் படிப்பினை!

கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்... 'மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன். பார்ப்பவன்' (அல்குர்ஆன் 17:1) விண்ணகப் பயணம் (மிஃராஜ்) அண்ணலாரின் நபித்துவ வாழ்வில் பொன்னைப் போல் ஒளிரும் ஒரு உண்மை நிகழ்ச்சியாகும்.

இந்த மிஃராஜ் பயணம் வரலாற்றில் எத்தகைய புதுமையையும், புரட்சியையும் தோற்றுவித்தது? எவ்வாறு திருப்பு முனையாக அமைந்தது? என்பதை எண்ணிப்பார்ப்போர் நம்மில் மிகச் சிலரே. இன்னும் சிலரோ மிஃராஜின் தாத்பரியத்தை தாங்களும் உணராமல் சமுதாயத்தையும் உணரச்செய்யாமல் மிஃராஜ் தினத்தில் சில சடங்கு-சம்பிரதாயங்களை கொண்டாடி விட்டு குறுகிய பலன்களை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். மிஃராஜ் என்பது அதற்கானதல்ல. இஸ்லாம் மார்க்கம் பல உயர்ந்த நோக்கங்களுக்காக மனிதர்களுக்கு அருளப்பட்ட மார்க்கம்.

மிஃராஜ் என்ற இந்த விண்ணகப்பயணம் நவீன உலகில் வாழ்பவர்களால் எண்ணிப்பார்க்கக்கூட முடியாத அளவுக்கு, அதே நேரத்தில் வல்ல அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நடத்திக்காட்டப்பட்ட, காட்டப்படக்கூடிய அற்புதமாக நிறைந்துள்ளது. அந்தப்பயணத்தில் மக்கள் பண்படுத்தக் கூடிய அறவுரைகளை தனது தூதருக்கு வழங்கி தன்னை வழிபடும் இஸ்லாமிய சமுதாயம் எத்தகைய உயர்ந்த பண்பு நலன்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற படிப்பினைகள் நிறைந்ததாகவும் இந்த மிஃராஜ் பயணம் அமைந்திருந்தது. நாம் வாழுகின்ற இந்த பூமி அல்லாஹ்வின் ஆட்சிக்கு உட்பட்ட மிகச்சிறிய எல்லையாகும்.

இந்த பூமியின் பிரதிநிதிகளாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் உள்ளனர். ஒரு ஆட்சியின் கீழ் உள்ள பிரதிநிதிகளுக்கு ஏனைய சாதாரண மக்களுக்கு தெரியாத அரசின் சில உயர் விவகாரங்கள் காண்பிக்கப்படுவது போன்று வல்ல இறைவனும் தனது இப்புவியின் பிரதிநிதிகளான தூதர்களுக்கு தனது சில அற்புதங்களை காண்பிக்கின்றான். ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன..அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)நூல்: புஹாரி(4981) என்ற நபி(ஸல்) கூற்றுக்கேற்ப ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் அற்புதங்களை வழங்கி உள்ளான். இதற்கு ஏராளமான சான்றுகளை திருமறையில் நாம் காணலாம். உதாரணமாக நபி இபுராஹீம்(அலை)

புதன், 13 ஜூன், 2012

கல்வி உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளையின் சார்பாக பள்ளி  மாணவ மாணவிகளுக்கு  நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நமதூர் முஸ்லிம் உயர்நிலை பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளியில் பயிழக்ககூடிய 25ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது  முகம்மது தலிபா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  ஊராட்சி மன்ற தலைவர் சிராஜுதீன் அவர்கள் கலந்துக்கொண்டு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.இதன் சமயம் அபுல் மல்ஹர் அவர்கள் கிளையின் செயல்பாடுகள் என்ற தலைப்பிலும் ஜாவித் மற்றும் நிஜார் அஹமது ஆகியோர் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.
அல்ஹம்துலில்லாஹ்....
படம்:முஹம்மது பைசல் 

செவ்வாய், 12 ஜூன், 2012

நமதூரில் தெருமுனைப் பிரச்சாரம்

இன்ஷாஅல்லாஹ் நமதூரில் வருகின்ற வெள்ளிகிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற உள்ளாது. தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக நடைப்பெற துஆ செய்யவும்.

திங்கள், 11 ஜூன், 2012

முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது TNTJ!


ஜே அரசின் பச்சை துரோகம்: 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை! இல்லை!, டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம் முற்றுகை!
தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதாஇ ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை. அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.

இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.
இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:
அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்
கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும். ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?
இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும். முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில்

சனி, 9 ஜூன், 2012

கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாத்தின் மருத்துவ உதவி

உடல் நலக்குறைவால் பாதிக்கபட்திருக்கும்  நமதூர் மேலத்தெருவை சேர்ந்த ஒரு சகோதரருக்கு நேற்று ஜூம்மா தொழுகைக்கு பிறகு  உதவி செய்யப்பட்டது.அல்ஹம்துளிலாஹ்.
உடல் நலன் பாதிக்கப்பட்டிருக்கும் நமது சகோதரர்  விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக! 


செய்தி:முஹம்மது பைசல்