பிரபஞ்சத்தின் படைப்பாளானாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே! பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ( அல்குர்ஆன்: 29:57)
மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் மரணித்தே தீர வேண்டும். மரணத்திலிருந்து தப்பித்தவர்கள் யாருமில்லை. இன்று மற்றவர்கள் மரணித்தால் நாளையோ அல்லது நாளை மறுநாளோ நாம் மரணிக்கப் போகிறோம்...
.
அந்த மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்மையெல்லாம் படைத்த இறைவன் இயம்புகின்றான். அதனால் தான் மரணித்தப் பின் நீங்கள் அனைவரும் என்னிடமே கொண்டு வரப்படுவீர்கள் என்று தன்னுடைய திருமறையின் மூலமாக கூறுகின்றான்.
அதுமட்டுமின்றி இவ்வுலக வாழ்வையும் மரணத்தையும் இவ்வாறு கூறுகின்றான்:
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன். மன்னிப்பவன். (அல்குர்ஆன் 67 : 2)
நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது. (அல்குர்ஆன் 31 : 22)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும். 1.நிலையான தர்மம் 2.பயனுள்ள கல்வி 3.இறைவனிடம் பிரார்த்திக்கும் குழந்தைகள். (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம்)
ஒரு இலக்கை நோக்கி மனித இனம் பயணித்துக் கொண்டிருக்கிறது. மனித இனம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அந்த இலக்கை அது அடைந்தே தீரும். அவ்விலக்கை சில லட்சியங்களுடன் வாழ்ந்து சென்றடைந்தால் மனித இனம் மாண்பு பெறும். அந்த லட்சியங்களையும் தன்னைப் படைத்த இறைவனும் அவனின் திருத்தூதரும் காட்டிய வழியில் அமைத்துக் கொள்ளுமேயானால் நிலையான பலா பலன்களை மனித இனம் தனது இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்ளும். இல்லையெனில் தலைக்குனிவே! அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
இறைவனோடு மனித இனத்துக்குள்ள பந்தம் சில தினங்களுக்கு மட்டுமல்ல. குறிப்பிட்ட நேரத்தோடு












