கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

செவ்வாய், 29 மார்ச், 2011

தயவு செய்து சிந்தியுங்கள்!

தொகுப்பு: Habiburrahman
அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’தின் தேர்தல் ஆதரவு நிலையை தொடர்ந்து பல்வேறு கேள்விகளை முன் வைக்கும் நம் சகோதரர்கள் அனைவரும் இந்த மடலை ஒரு முறையேனும் முழுதாக படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாமெல்லாம் முதன் முதலில் ஓர் அடிப்படையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க வாக இருந்தாலும் அது அ.தி.மு.க வாக இருந்தாலும் ரெண்டுமே இஸ்லாமிய சமுதாயத்திற்கு பாதகங்களைத்தான் அதிகம் செய்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க இயலாது.

அரசியல் என்றாலே அரசியல்வாதிகள் என்றாலே ஊழல், அவரவர்களுக்கு சொத்து சேர்த்துக்கொள்ளுதல், அடக்குமுறைகள், லஞ்சம், சிறுபான்மை சமுதாயத்தை நசுக்குதல்... இவையெல்லாம் அவர்களோடு ஒட்டி பிறந்த ரெட்டை குழந்தைகள். இதில் அவர்களுக்குள் யாருக்கும் விதிவிலக்கில்லை.

இந்த நாட்டில் சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தில் வாழும் நாம் இந்த அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறேன் என கிளம்பினால், முழுநேர அரசியலில் ஈடுபட்டால் - முஸ்லிம் அல்லாத மற்ற மற்ற சமுதாயத்தவர்களின் ஆதரவையும் பெற்றால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதற்காக வளைந்து கொடுக்க ஆரம்பித்து; அனைத்து விழயங்களிலும் வளைந்துகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு; இறுதியில் படைத்த இறைவனுக்கு இணைவைக்கும் பகிரங்க வழிகேட்டு காரியங்களும் நம் கண் முன்னே நடக்கும்போது அதை தடுக்க திராணியற்றவர்களாக மாறி,இறுதியில் அரசியல் சாக்கடையில் விழுந்த பன்றிகளாக உருவெடுப்போம்,தள்ளப்படுவோம். நமது ஒரே உயர் நோக்கமான மறுமை வாழ்கையை பாழாக்கி கொள்வோம். மரணத்திற்குப்பின் நிரந்தர நரகத்தில் தள்ளப்படுவோம்.

சனி, 26 மார்ச், 2011

மூன்று முறை பேசியும் முஸ்லிம்களைப் புறக்கணித்த அதிமுக

வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அதிமுக வாக்களித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் அதிமுக சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு மூன்று தடவை நேரில் வந்து ஆதரவு கேட்டனர். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதியளிப்போம் என்று சொன்னால் தவிர நாங்கள் ஆதரிக்க முடியாது என்று நாம் திட்டவட்டமாகச் சொன்னோம். இதன் பின்னர் பல தடவை பேச்சு வார்த்தை நடத்திய பின் தேர்தல் அறிக்கையில் சொல்வதாகவும் அதற்கான வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்று நம்மிடம் கேட்ட போது அந்த வாசகத்தை நாம் எழுதிக் கொடுத்தோம். கட்டாயம் தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்று அவர்கள் உறுதி மொழி அளித்தாலும் தேர்தல் அறிக்கையைப் பார்க்காமல் நாங்கள் முடிவு சொல்ல முடியாது என்று கூறினோம்.

இதன் காரணமாகவே அதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை யாருக்கு ஆதரவு என்னும் முடிவை எடுக்காமல் தள்ளி வைத்தோம்.

ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக ஒரு வார்த்தையும் இல்லை.

ஆனால் திமுக வின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அதிகரிப்பது பற்றி கூறப்பட்ட பின்பும் திமுக வின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பியடித்த ஜெயலலிதாவுக்கு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பாராவை மட்டும் காப்பியடிக்கக் கூட மனமில்லை.

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளி ஜும்ஆ உரை- "மறுமை சிந்தனைகள்"

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் 24.03.2011அன்று வெள்ளிக்கிழமை சிகாபுத்தீன் அவர்கள் "மறுமை சிந்தனைகள்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தன.



தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய் வோருடன் ருகூவு செய்யுங்கள் (அல் குர்ஆன் 2.43)
அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்' என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.(அல் குர்ஆன் 2.83)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் (அல் குர்ஆன் 2:110)

தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள் (அல் குர்ஆன் 2:238)

புதன், 23 மார்ச், 2011

அவசரப் பொதுக்குழு அறிவிப்பு – இன்ஷா அல்லாஹ் சென்னையில் மார்ச் 26 ல் !

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது, முஸ்லிம் சமுதாயத்துக்கு நன்மை அளிக்கும் என்பதைப் பற்றி சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஆய்வு செய்யப்பட்டது.


தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் வெளியிடாததாலும் கூட்டணிகள் முடிவாகாததாலும் அப்போது முடிவு எடுக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை.
இதன் பின்னர் நடத்தப்பட்ட மாநில செயற்குழுவின் போதும் அரசியல் நிலமை தெளிவாகாமல் இருந்தது. ஆனால் தற்போது கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு விட்டன. வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு விட்டன.

மேலும் தேர்தல் அறிக்கையும் பெரும்பாலும் வெளியிடப்பட்டு விட்டன. தேர்தல் குறித்து முடிவு செய்ய ஏற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் வருகின்ற 26-3-11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை இம்பீரியல் ஹால் – எழும்பூர்- இல் மாநில அவசரப் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது இதையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


மாநிலப் பொதுச் சேயலாளர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

செவ்வாய், 22 மார்ச், 2011

பதவிக்காக இணைவைக்கவும் தயார்!!

பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். தமிழ்நாட்டில் முதலாவதாக பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் இவராகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

அதுமட்டுமல்ல, இவர் தனது பிரசாரத்தை தொடங்கிய இடம் வண்ணார்பேட்டை சாலைத் தெருவில் உள்ள வெற்றி வேலடி விநாயகர் கோயில். அங்கு சிறப்பு பூஜையை முடித்துக் கொண்டு, விநாயகரை வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டு, தேங்காய் விடலையும் போட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.

என்ன இப்படி? என கட்சிக்காரர்களிடம் கேட்டால், மைதீன்கான் இதே தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் போட்டி போட்டபோதும் இதே கோயிலில் வணங்கிவிட்டுதான் பிரசாரத்தை தொடங்கினார். இரு தேர்தல்களிலும் அவருக்கு அமோக வெற்றி. அதுமட்டுமல்ல, கடந்த தேர்தல் வெற்றி அவரை அமைச்சராகவும் ஆக்கியது. அந்த "சென்டிமெண்ட்'தான் மைதீன்கானை இந்தத் தேர்தலிலும் இங்கே அழைத்து வந்துள்ளது என்றனர்.

திங்கள், 21 மார்ச், 2011

தஸ்பீஹ் மணி

பிற மதத்தவர்கள் வைத்திருக்கும் ஜெபமாலையிலிருந்து காப்பியடிக்கப்பட்டதே தஸ்பீஹ் மணி.அல்லாஹ்வின் தூதரும், அவர்களின் அன்புத் தோழர்களும் இந்த ஜெபமாலையை வைத்துக் கொண்டிருக்கவில்லை.'யார் பிற சமயக் கலாச்சாரத்திற்கேற்ப நடக்கின்றாரோ அவர் அவர்களைச் சேர்ந்தவரே' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)நூல்கள் : அபூதாவூத் 3512, அஹ்மத் 4868

எனவே பிற சமயத்தவரிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்த தஸ்பீஹ் மணி தவிர்க்கப்பட வேண்டியதாகும்.'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் தஸ்பீஹ் எண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்'அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)நூல்கள் : திர்மிதீ 3332, 3408, நஸயி 1331,'உங்கள் விரல்களால் எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : புஸ்ரா (ரலி)நூல்கள் : திர்மிதீ 3507, அபூதாவூத் 1283

வெள்ளி, 18 மார்ச், 2011

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளி ஜும்ஆ உரை- "நிய்யத்"

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் இன்று 18.03.2011 வெள்ளிக்கிழமை சிதம்பரம் ஆதம் அவர்கள் "நிய்யத்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தன.

ஒப்புக் கொள்ளப்படும் ஒரு துஆ நேரம்:
நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, ”ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ”அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை” என்றும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 93

அல்லாஹ்வின் வார்த்தை

நம்பிக்கை கொண்டோரே!
சகித்துக்கொள்ளுங்கள்!சகிப்புத்தன்மையில்(மற்றவர்களை) மிகைத்துவிடுங்கள்!உறுதியாக நில்லுங்கள்!அல்லாஹ்வை அஞ்சுங்கள்!வெற்றி வெறுவீர்கள்.அல் குர்ஆன்3:200


"...அவர்கள் கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றத்தை மன்னித்தும் விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான்." (அல்குர்ஆன் 3:134).

"உங்களில் ஒருவர் வெறுக்கத் தக்கதைக் கண்டால் அதைத் தனது கரத்தால் மாற்றட்டும்; அதற்குச் சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும்; அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனதால் வெறுத்து ஒதுக்கட்டும். இதுவே ஈமானின் பலவீனமான நிலையாகும்" என நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். (அபூஸயீத் அல் குத்ரி (ரலி), முஸ்லிம்).

"... நன்மைக்கும், பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திலும் வரம்பு மீறுதலிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம்." (அல்குர்ஆன் 5:2).
"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தில் சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள் ..." (3:110). நன்மையைக் கொண்டு தீமையைத் தடுக்கிறீர்கள்; அதானாலே சிறந்த சமுதாயம் என்று குர்ஆன் கூறுகிறது. நபி( ஸல்) அவர்கள் தங்கள் உம்மத்தைப் பற்றிக் கவலை அடைந்ததைப்போல், அறியாமையில் இருக்கும் முஸ்லிம்களைப் பற்றிய கவலை, ஒவ்வொரு முஸ்லிம்களுக்குள்ளும் இருக்கவேண்டும்.

ஞாயிறு, 13 மார்ச், 2011

ஆழ்கடலில் அலைகளும், இருள்களும் - சுனாமியால் நாம் கற்க வேண்டிய படிப்பினை...

24:40 அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்.
அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை. அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டீனால் அவனால் அதைப் பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.


24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ் கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன.ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக் கொண்டே சென்று முடிவில் தன்கையையே கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம் கூறுகின்றது.

பட்டப் பகலில் கடல் மீது விழும் சூரிய ஒளி, சிறிது சிறிதாகக் குறைந்து காரிருள் ஏற்படுகின்றது என்று விஞ்ஞானிகள் இன்று கண்டறிந்துள்ளனர். சூரியனின் வெளிச்சத்தில் ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்கள் உள்ளன.சூரிய ஒளியின் ஒவ்வொரு நிறத்தின் அலை வேகம் வேறுபடுவதால் கடலில் ஒவ்வொரு குறிப்பிட்ட தொலைவில் ஒவ்வொரு நிறமாகத் தடுக்கப்படுகிறது. சிவப்புக் கதிர் கடலில் 15 மீட்டர் வரை தான் செல்லும். 15 மீட்டர் ஆழத்திற்கு மேல் சென்றால் சூரியனின் ஆறு வண்ணங்கள் தான் தெரியும். அங்கே சிவப்பான பொருட்களை மட்டும் காண முடியாத அளவுக்கு ஒரு இருள் ஏற்படுகின்றது.

வெள்ளி, 11 மார்ச், 2011

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளி ஜும்ஆ உரை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் 11.03.2011 வெள்ளிக்கிழமை அன்று ஆயங்குடி சிஹாபுத்தீன் அவர்கள் "சொர்க்கத்தில் சேர்க்கும் நற்காரியங்கள்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தன.

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸீர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, "நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்" என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ், நூல்: அபூதாவூத் 883)


(குறிப்பு : நமது ஸலவாத், ஸலாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது. "நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நஸயீயில் 1265வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப் படுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.)

திங்கள், 7 மார்ச், 2011

கொள்ளுமேடு ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியின் நிர்வாகிகள் தேர்வு நேற்று நடைப்பெற்றது,இதில் நமதூர் பக்கிர் முஹம்மது அவர்கள் கொள்ளுமேடு ஜமாஅத் தலைவராக தேந்தெடுக்கப்பட்டார். மேலும் 
 முஹம்மது தல்ஹா அவர்கள்  ஜமாஅத் செயலாளராகவும்
அப்துர்ரஹ்மான் (கிராம சபை  உறுப்பினர்) அவர்கள் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஜமாத்தை ஒருங்கிணைக்கும் பொருட்டு ஜமாஅத் கமிட்டி நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,அவர்களின் விபரம்

முஹம்மது இஸ்மாயில்
சபிக்குர்ரஹ்மான் (ஆசிரியர்)
உமர்ஹத்தாப் 
அப்துல்வதூது
முஹம்மது ரஜ்வி
முஹம்மது சலீம்
முஹம்மது அன்சாரி 
நிஹ்மத்துல்லாஹ்.
முஹம்மது ஆசிக்

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். (திருக்குர்ஆன். 3:104) என்ற அல்லாஹ்வின் வார்த்தையை முழுமைப்படுத்தும் விதத்தில் நம்முடைய ஜமா அத் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம்.

செய்தி:அபுல் மல்ஹர்

ஞாயிறு, 6 மார்ச், 2011

தவ்ஹீத் பள்ளியில் ஜும்மா உரை "பித்அத் "

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் 04.03.2011 வெள்ளிக்கிழமை அன்று சேலத்திலிருந்து வந்திருந்த முஹம்மது ஹக்கீம் அவர்கள் "பித்அத் " என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தன.

சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதி 450

வெள்ளி, 4 மார்ச், 2011

முஸ்லீம் பெயர்தாங்கி அரசியல் கட்சிகள் !!!

கண்ணியமிக்க வல்லோன் தன் திருமறையில் கூறுகிறான்: அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுப் படுத்துகிறாய்.நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 3:26)

ஒருவருக்கு ஆட்சியை வழங்குவதும், அதைப் பறித்துக் கொள்வதும் நம்மை படைத்த அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது.நாம் வாழும் இந்திய திருநாட்டிலே யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நாமே தீர்மானித்து, தெர்ந்தெடுக்கக் கூடிய வசதியை வல்ல இறைவன் இந்திய அரசியல் சாசனத்தின் மூலம் நமக்கு வழங்கியுள்ளான். அதனடிப்படையில் இந்திய முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய ஓட்டை ஆண்டாண்டு காலமாக சில குறிப்பிட்ட கட்சிகளுக்கே ஓட்டளித்து அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து அழகுப் பார்த்தோம்.

நமது தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்த சட்டசபைத் தேர்தல் இன்ஷாஅல்லாஹ் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைபெறம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சி அல்லது தான் சார்ந்த கூட்டணிக்குத் தான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என விரும்புவார்கள். மேலும், மற்ற சமுதாயத்தைப் பொருத்தவரையில் எல்லாக் கட்சிகளிலும் பரவலாக இருக்கின்றனர்.

ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் இதுநாள் வரையில் குறிப்பிட்ட சில கட்சிகளுக்குத்தான் ஆதரவு என்ற நிலைபாட்டில் உள்ளனர். யாரை முஸ்லீம் சமுதாயம் ஆதரிக்குமோ அவர்கள் தான் அதிகமான இடங்களை பெற்றுனர் என்பதால் அனைவரின் பார்வையும் முஸ்லீம் சமுதாயத்தின் மீது தான் உள்ளது.

வியாழன், 3 மார்ச், 2011

இறை நம்பிக்கை

நம்மில் ஒரு சிலர் அல்லாஹ்வை நம்புகிறோம் ஆனால் மறுமையை நம்புவதில்லை இறுதிநாளை நம்புவதில்லை விதியை நம்புவதில்லை சொர்க்கம் மற்றும் நரகத்திலும் நம்பிக்கையே இல்லை மாறாக தன் செல்வத்தையும் (எதிர்காலத்தில் காப்பற்றுவார்கள் என) பிள்ளைகளையும் குடும்பத்தினரையும் நம்புகிறார்கள் ஆனால் இறைவனை நம்பும் விதத்தில் நம்புவதில்லை.அவனுடைய வல்லமையையும்,கருணையையும் நம்புவதில்லை.

ஒரு முஹ்மின் என்பவர் எதையெல்லாம் நம்ப வேண்டும் என்றால்

அல்லாஹ் ஒருவனே என்றும் அவனுக்கு இணை இல்லை என்றும் முதலில் நம்ப வேண்டும்,
பிறகு மலக்குகளை நம்ப வேண்டும் ,
வேதங்களை நம்ப வேண்டும்,
நபிமார்களை நம்ப வேண்டும் ,
இறுதிநாளை நம்ப வேண்டும்
நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கிறது என்று நம்ப வேண்டும் ,
மரணத்திற்கு பின்பு மீண்டும் எழுப்ப படுவோம் என்றும் நம்ப வேண்டும்.

ஒரு சிலர் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் சமுதாயத்திற்க்கும், ஊருக்கும், உறவினர்களுக்கும் அஞ்சுகிறார்கள் யார் அல்லாஹ்வை அஞ்சவில்லையோ அவர்கள் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்கு அஞ்சியே வாழ்வதை கண்கூடாக காண்கிறோம்.

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). (அல்குரான் 2:177 )

செவ்வாய், 1 மார்ச், 2011

குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூவர் மாவட்டம் ஆவடி கிளையில் கடந்த 27-2-11 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிசழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் அளித்தார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் செங்குன்றம் காந்திநகர் கிளையின் தாவா பணியின் காரணமாக
ஒரு குடும்பம் இஸ்லாத்தை தழுவியது அல்ஹம்துலில்லாஹ்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு


சமுதாய கோரிக்கையை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு  5% இடஒதுக்கீடு தரும் கூட்டணிக்கே ஆதரவு என்று TNTJ அறிவித்த பொதுக்குழு முடிவை ஆதரிக்கிறோம்.
சமூக சிந்தனையுடன், சமுதாய முன்னேற்றத்துக்காக TNTJ எடுக்கும் மார்க்க மற்றும் அரசியல் முடிவை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஆதரிப்போம்



TNTJ கிளை நிர்வாகிகள் தேர்வு

கடந்த வெள்ளிக் கிழமை அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையின்  பொதுக்குழு நடைப்பெற்றது, கிளை உறுப்பினர்கள் மற்றும் ஜமாஅத் தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . அதன் சமயம் கிளையின் தலைவராக தாயகம் சென்றுள்ள அபுல் மல்கர் அவர்கள் செயல்படுவது என்றும் கிளையின் செயலாளராக முஹம்மது ரஜ்வீ, பொருளாராக அபூ பக்கர், மாணவரணி தலைவராக ஜாவித் ஆகியோர் தேர்தேடுக்கபட்டனர்.

புதிய தலைவராக தேர்தெடுக்கப்பட்ட அபுல் மல்கர் அவர்கள் புதிய உத்வேகத்தோடு செயல்பட வேண்டும் என்றும் தவ்ஹீத் பள்ளி மூலம் கொள்ளுமேட்டில் ஏகத்துவ புரட்சியை ஏற்படுத்தும் வண்ணம் நம்முடைய பணிகள்   அமைந்திட வேண்டும் என்றும் தொண்டர்களிடையே உரையாற்றினார்.