கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வியாழன், 8 நவம்பர், 2012

வட்டி இல்லா கடன் திட்டம் ஏன்?



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்கு சாட்சி கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். இன்றும் அவர் அனைவரும் (குற்றத்தில்) சமமானவர்கள் என்றார்கள் (முஸ்லிம் 3258)

வட்டி என்றால் என்ன?

ஒருவரிடம் இருந்து கடனாகப் பெரும் பணத்திற்கு செழுத்தப்படும் வாடகை வட்டி எனப்படுகிறது. பெரும்பாலும் மனிதன் தனது தேவைகளுக்கு மனிதாபிமான உதவியை எதிர்பார்க்கிறான். அப்படி ஒருவர் மற்றவருக்கு கொடுத்து உதவது ஒருவகை தர்மம். 
“நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் – அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது” (அல்-குர்ஆன் 57:18)
அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொள்வோராக இருந்தால் அதைத் தர்ம மாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது (அல்குர்ஆன் 2:280)
மனிதாபிமான உதவிகளை இஸ்லாம் ஆதரிக்கிறது, கடன் பெற்றவரின் நிலைமையை கருத்தில் கொண்டு அவருக்கு அவகாசம் அளிக்கச் சொல்கிறது அதற்கும் மேல் அவருக்கு திருப்பித் தர வசதியில்லாத நிலையில் அதை தர்மமாக்கிவிட வழியுறுத்துகிறது. 
ஆனால் இந்த நடைமுறை இன்று மக்களிடையே இல்லாமலேயே போய்விட்டது. மனிதாபிமான உதவிகள் இன்று வியாபரமாக மாற்றப்பட்டு விட்டது.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.83'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்குர்ஆன் 2:275. 
பாதிக்கப்பட்வனுடைய இயலாமையை மூலதனமாக கொண்டு இன்று வட்டித்தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. இதில் பெரும்பாலும் முஸ்லீம் சமூகத்தை கொண்டு மற்றவர்கள் வாழும் அளவிற்கு நம்முடைய ஆடம்பரங்களும், கட்டுப்பாடற்ற செலவீனங்களும் சென்று விட்டதைப் பார்க்கிறோம். இன்றைய நாட்களில் சாப்பாட்டுக்கே கஷ்டம் என்ற நிலையில் இருப்பவர்கள் மிகக்குறைவான-வர்களே. பெரும்பாலான கடன்கள் தமது வருமானத்திற்கு மீரிய செலவினங்களால் ஏற்படுவதே. 

வட்டி அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிரான போர் பிரகடனம்

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விட-மிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)

வட்டி ஏழு பெரும் பாவங்களில் ஒன்று

நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)  புஹாரி 6857

வட்டியை அல்லாஹ் அழிக்கிறான் தர்மத்தை வளர்க்கிறான்

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 2:276)
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.  (அல்குர்ஆன் 30:39)

வட்டி ஏற்படுத்தும் மறுமை வேதனை

மறுமையில் வெற்றி பெறுவதே ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாக இரக்க வேண்டும் .வட்டி வாங்கியவர்கள் மறுமையில் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று திருக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம். (அல்குர்ஆன் 4:161)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற
முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! 
"அவர் யார்?' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள்." அறிவிப்பாளர்: ஸமுரா(ரலி) புஹாரி 2085

வட்டி சாபத்திற்கு உரியது

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்……. அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா(ரலி) புஹாரி 5347

வட்டியின் பல்வேறு முகங்கள்

இன்று வட்டி இன்சூரன்ஸ் என்ற பெயரிலும், பேங்கில் சேவிங் அக்கவுன்ட் (சேமிப்புக் கணக்கு) என்ற பெயரிலும், வாகனங்கள் கனனுக்கு வங்கும் போதும், கிரடிட் கார்டுகளிலும், பைனான்ஸ் கம்பெனி கடனிலும், வருடக்கணக்கில் பேங்கில் பணத்தை இட்டு வைப்பதிலும் (Fixed Deposit) இன்று நாம் சாதரனமாக வட்டியை உண்ணுகிறோம். இவை எல்லாம் நமக்கு ஹராம் என்று யாரும் நினைப்பதில்லை. இந்தக் காலத்தைில் இதெல்லாம் எப்படி தவிர்க்க முடியும் என்று நினைக்கின்றனர். ஒரு முஸ்லிம் உண்மையில் மறுமை வெற்றியை மட்டும் இலக்காக கொண்டு வாழ்வானே ஆனால் அவனுக்கு இது மிகப்பெரிய பாவச் செயல் என்பது கண்டிப்பாக விளங்கும். 

நாம் செய்ய வேண்டியது என்ன?

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(அல்குர்ஆன் 2:278)
ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.(அல்குர்ஆன் 3:130)
source:ததஜ-புதுவலசை கிளை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக