காலங்களைப் படைத்த கருணையாளனாகிய அல்லாஹ் தன் இறுதித் திருமறையில் கூறுகின்றான்...
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! [அல்குர்ஆன் 9:36]
இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். இதை அல்லாஹ்வின் மாதமென்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத்திற்கென்று பல சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்த போதிலும், நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இம்மாதத்தில் இஸ்லாமியர் களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் காரியங்களெல்லாம் நம்மை நரகப்படுகுழியில் தள்ளிவிடக்கூடியவை என்பதை அறியாமல் இன்றும் அதிகமான இஸ்லாமியர்கள் முஹர்ரம் மாதத்தின் பெயரால் பல பாவமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்...
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல்ஆகிர் மாதத்திற்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி) ஆதாரம் : புகாரி 3197
பஞ்சா எடுப்பது
இந்த புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் பல ஊர்களில் பஞ்சா என்ற பெயரில் விழா எடுப்பார்கள். இஸ்லாத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் பின்பற்றக்கூடிய(?) இளைஞர்களும், இளைஞிகளும், ஆண்களும், பெண்களும் கலர்ஃபுல்லாக காட்சியளித்து, ஒருவரை ஒருவர் கண்டு இன்புற்று, மகிழ்ச்சியைக் கொண்டாடி இந்த பஞ்சாவை சிறப்பிப்பார்கள். இதனை கண்களும், கைகளும், கால்களும், உள்ளமும் செய்கின்ற விபச்சார விழா என்று கூட குறிப்பிடலாம். அந்த அளவிற்கு இந்த பஞ்சா விழாவில் அனாச்சாரங்களும், அட்டூழியங்களும் பெருக்கெடுத்துக் காணப்படும்.
பள்ளிவாசலில் தொழும்போது நபிவழியின் அடிப்படையில் விரலசைத்து தொழுததற்காக கொதித்தெழுகின்ற ஜமாஅத்தினரும், ஒன்றும் இல்லாத தொப்பிக்காக காவல்துறை வரை சென்று புகார் கொடுக்கின்ற ஜமாஅத்தினரும், ஆலிம் பெருமக்களும் இந்த அனாச்சாரங்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால் உண்மையான சமுதாய நலனை மார்க்க அடிப்படையில் அமைத்துக் கொள்ளவும், நிர்மாணிக்கவும் இவர்கள் நாடாததுதான் வணக்கத்தின் பெயரால் சமுதாயம் கெட்டுப்போவதற்கு முக்கிய காரணங்களாகி விட்டன.
இந்த பஞ்சாவில் அப்படி என்னதான் நடக்கின்றது? மனிதனின் கை போன்று செய்யப்பட்ட ஒன்றை ஒரு குதிரையின் மீது வைத்துக் கொண்டு வருவார்கள். இந்த குதிரையின் மீது ஏறி உட்கார்ந்தாலோ, அல்லது அதன் பாதங்களில் தண்ணீர் ஊற்றினாலோ நாடியது நடக்கும் என்று இந்த பஞ்சாவைக் கொண்டாடக்கூடிய பக்தர்களும் மற்றும் திருமணமாகாத பக்தைகளும், குழந்தை பாக்கியம் இல்லாத பக்தைகளும் இந்த குதிரை மகான்(?) அருள் செய்து விடுவார் என்ற நம்பிக்கையில் போட்டி போட்டுக் கொண்டு அவர்களின் மதநம்பிக்கைப் பிரகாரம் அதற்கான சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபடுவார்கள்.
படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ் ஒருவன்தான் குழந்தைப் பாக்கியம் தரக்கூடியவன் என்ற நம்பிக்கையெல்லாம் இவர்களுக்கு கிடையாது. ஏனென்றால் இவர்களின் மதநம்பிக்கைப் பிரகாரம் குதிரைச் சாமியைத்தான் குழந்தை பாக்கியம் தருபவராக இவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் உண்மையான முஸ்லிம்களுக்கு திருமறைக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்...
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்;. ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 43: 49-50)
மேலும் குதிரையின் மீது கொண்டுவரப்படுகின்ற கையின் விளக்கமாகிறது அதிலுள்ள ஐந்து விரல்களும் இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள ஐந்து கடவுள்களைக் குறிப்பதாகும். அவர்கள் முஹம்மது(ஸல்), அலி(ரலி), ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி), ஃபாத்திமா(ரலி) ஆகியோராவர்.
இந்த பஞ்சா எடுக்கின்ற சுன்னத் ஜமாத்தினர்(?) இந்த ஐவரையும் கடவுளாகத்தான் வணங்குகின்றனர் என்று நாமாக கற்பனை செய்து கூறவில்லை. இவர்கள் ஓதக்கூடிய மௌலிதுகளில் ஒன்றில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
மேலும் குதிரையின் மீது கொண்டுவரப்படுகின்ற கையின் விளக்கமாகிறது அதிலுள்ள ஐந்து விரல்களும் இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள ஐந்து கடவுள்களைக் குறிப்பதாகும். அவர்கள் முஹம்மது(ஸல்), அலி(ரலி), ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி), ஃபாத்திமா(ரலி) ஆகியோராவர்.
இந்த பஞ்சா எடுக்கின்ற சுன்னத் ஜமாத்தினர்(?) இந்த ஐவரையும் கடவுளாகத்தான் வணங்குகின்றனர் என்று நாமாக கற்பனை செய்து கூறவில்லை. இவர்கள் ஓதக்கூடிய மௌலிதுகளில் ஒன்றில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
லீ கம்ஸத்துன் உத்ஃபீ பிஹா ஹர்ரல் வபாயில் ஹாத்திமா அல்முஸ்தஃபா வல் முர்தலா வப்னாகுமா வல்பாத்திமா இதன் பொருள்: எனக்கு முஹம்மது, அலீ, ஹஸன், ஹுஸைன், ஃபாத்திமா ஆகிய ஐந்து



