கண்ணியமும் மகத்துவமும் மிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
'மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன். பார்ப்பவன்' (அல்குர்ஆன் 17:1)
விண்ணகப் பயணம் (மிஃராஜ்) அண்ணலாரின் நபித்துவ வாழ்வில் பொன்னைப் போல் ஒளிரும் ஒரு உண்மை நிகழ்ச்சியாகும்.
இந்த மிஃராஜ் பயணம் வரலாற்றில் எத்தகைய புதுமையையும், புரட்சியையும் தோற்றுவித்தது? எவ்வாறு திருப்பு முனையாக அமைந்தது? என்பதை எண்ணிப்பார்ப்போர் நம்மில் மிகச் சிலரே. இன்னும் சிலரோ மிஃராஜின் தாத்பரியத்தை தாங்களும் உணராமல் சமுதாயத்தையும் உணரச்செய்யாமல் மிஃராஜ் தினத்தில் சில சடங்கு-சம்பிரதாயங்களை கொண்டாடி விட்டு குறுகிய பலன்களை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். மிஃராஜ் என்பது அதற்கானதல்ல. இஸ்லாம் மார்க்கம் பல உயர்ந்த நோக்கங்களுக்காக மனிதர்களுக்கு அருளப்பட்ட மார்க்கம்.
மிஃராஜ் என்ற இந்த விண்ணகப்பயணம் நவீன உலகில் வாழ்பவர்களால் எண்ணிப்பார்க்கக்கூட முடியாத அளவுக்கு, அதே நேரத்தில் வல்ல அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நடத்திக்காட்டப்பட்ட, காட்டப்படக்கூடிய அற்புதமாக நிறைந்துள்ளது. அந்தப்பயணத்தில் மக்கள் பண்படுத்தக் கூடிய அறவுரைகளை தனது தூதருக்கு வழங்கி தன்னை வழிபடும் இஸ்லாமிய சமுதாயம் எத்தகைய உயர்ந்த பண்பு நலன்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற படிப்பினைகள் நிறைந்ததாகவும் இந்த மிஃராஜ் பயணம் அமைந்திருந்தது. நாம் வாழுகின்ற இந்த பூமி அல்லாஹ்வின் ஆட்சிக்கு உட்பட்ட மிகச்சிறிய எல்லையாகும்.
இந்த பூமியின் பிரதிநிதிகளாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் உள்ளனர். ஒரு ஆட்சியின் கீழ் உள்ள பிரதிநிதிகளுக்கு ஏனைய சாதாரண மக்களுக்கு தெரியாத அரசின் சில உயர் விவகாரங்கள் காண்பிக்கப்படுவது போன்று வல்ல இறைவனும் தனது இப்புவியின் பிரதிநிதிகளான தூதர்களுக்கு தனது சில அற்புதங்களை காண்பிக்கின்றான். ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன..அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)நூல்: புஹாரி(4981) என்ற நபி(ஸல்) கூற்றுக்கேற்ப ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் அற்புதங்களை வழங்கி உள்ளான். இதற்கு ஏராளமான சான்றுகளை திருமறையில் நாம் காணலாம். உதாரணமாக நபி இபுராஹீம்(அலை)