கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

சேலத்தில் கூடிய மாநிலப் பொதுக்குழுவில் - புதிய மாநில நிர்வாகிகள்

சேலத்தில் கூடிய மாநிலப் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநில நிர்வாகிகள்
புதிய மாநிலத் தலைவர்

பி.ஜைனுல் ஆபிதீன்

மாநிலத் துணைத் தலைவர்

கோவை அப்துர்ரஹீம்

பொதுச் செயலாளர்
ரஹ்மத்துல்லாஹ்

துணைப் பொதுச்செயலாளர்
செய்யித் இப்ராஹீம்

பொருளாளர்
அன்வர் பாஷா

செயலாளர்கள்
1. அப்துல் ஹமீது
2. சாதிக்
3. அப்துல் ஜப்பார்
4. யூசுப் (திருவள்ளூர்)
5. அஷ்ராபுத்தின் பிர்தௌசி
6. மாலிக் (ராம்நாடு)
7. சாதிக் ( கோபிசெட்டிபாளையம்)

சேலத்தில் கூடிய மாநிலப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் 11 வது பொதுக் குழு மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
முதலில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் கொள்கையில் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்கள். அடுத்ததாக பொருளாளர் சாதிக் அவர்களுக்கு மாநில கணக்குகளை சமர்ப்பித்தார். அடுத்து சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தேர்நிலைபாடு தொடர்பாக விளக்கம் அளித்தார்.

தேர்தல் நிலைபாடு:
1. மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.


இவர்கள் சமுதாயத் தொண்டு செய்யாமல் ஜமாஅத் நிர்வாகிகளையும் தலைவர்களையும் மிரட்டுதல் பள்ளிவாசல் நிர்வாகத்தில் நுழைந்து நிர்வாகத்தை சீரழிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, அப்பாவிகளின் நிலத்தை அபகரிப்பது, குடும்பப் பஞ்சாயத்து என்ற பெயரில் அராஜகம் செய்வது ஆகிய காரியங்களைச் செய்து முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளனர். இவர்கள் வளர்வது சமுதாயத்துக்கு கேடாக முடியும் என்பதால் இவர்கள் எந்த அணியில் இருந்தாலும் இவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

யாருக்கு ஆதரவு ?

2. தேர்தல் கூட்டணிகளும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் இன்னும் வெளிவராத காரணத்தாலும் தேர்தல் நடத்தை விதி இன்னும் நடைமுறைக்கு வராததால் ஆளும் கட்சி முஸ்லிம்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை கடைசி நேரத்திலாவது செய்ய வாய்ப்பு இருக்கின்ற காரணத்தாலும் நிலைமை தெளிவானவுடன் மாநில செயற்குழுவைக்கூட்டி யாருக்கு ஆதரவு என்ற முடிவை எடுக்க செயற்குழுவுக்கு அதிகாரம் வழங்குவது என்று இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் உலா வந்த வித்தியாசமான பேனர்கள்


ஊடகங்களின் பார்வையில் - சென்னை & மதுரையை ஸ்தம்பிக்க வைத்த முஸ்லிம்கள்

வியாழன், 27 ஜனவரி, 2011

திணறியது சென்னை !!! அல்ஹம்துலில்லாஹ்...

நேரடி ஒளிப்பரப்பின் போது எடுத்த போட்டோக்கள்...புதிய புகைப்படங்கள் விரைவில்.......

புதன், 26 ஜனவரி, 2011

பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நேரடி ஓளிப்பரப்பு!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரணி

சென்னை : பாபர் மசூதி இடிப்பு தொடர்பான, அலகாபாத் கோர்ட்டின் தீர்ப்பை கண் டித்தும், சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கை மறு விசாரணை செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் சார்பில், நாளை சென் னையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்படுகிறது.இது குறித்து சென்னையில், நேற்று இந்த அமைப்பின் மாநில பொது செயலர் அப்துல் ஹமீது நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான, அலகாபாத் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட் டில் இவ்வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்து ஐகோர்ட் வரை கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி, என் தலை மையில் நாளை நடத்தப்படுகிறது. இதில், தமிழகம் முழுவதிலிருந்தும் முஸ்லிம்கள் கலந்துக் கொள்கின்றனர். பேரணியின் முடிவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் உரையாற்றுகிறார்.இவ்வாறு அப்துல் ஹமீது கூறினார்.
- தின மலர்

காவல்துறை அனுமதி அளிக்காவிட்டால், தடையை மீறி பேரணியாகச் செல்வோம்-பி.ஜெ

சென்னை: பாபர் மசூதி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து மறு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நோக்கி வியாழக்கிழமை பேரணி நடத்துகிறது.

இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் பி. ஜெய்னுலாபுதீன் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: சென்னை மெமோரியல் அரங்கம் அருகில் வியாழக்கிழமை தொடங்கும் இந்தப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

அதே நாளில் மதுரையிலும் ரயில் நிலையத்தில் தொடங்கி, அங்குள்ள உயர் நீதிமன்றக் கிளையை நோக்கி பேரணி நடைபெறும். இந்தப் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காவிட்டால், தடையை மீறி பேரணியாகச் செல்வோம் என்றார் ஜெய்னுலாபுதீன்.

Source: dinamani

செவ்வாய், 25 ஜனவரி, 2011

கம்பீரமாய் அழைப்பு விடுக்கும் கடைத்தெரு பேனர்!!!


இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜனவரி 27 அன்று சென்னையில் நடக்கும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டதிற்கு நமது கொள்ளுமேட்டிலிருந்து வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதற்காக உங்களின் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +919600445778 : சகோ.முஹம்மது ரஜ்வி

வெளிநாட்டு தொடர்புக்கு- அபுல் மல்ஹர் 050-5405642 (துபாய்)    


ஞாயிறு, 23 ஜனவரி, 2011

TNTJதலைவரின் கொள்ளுமேடு விசிட்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநிலத்   தலைவர் பக்கிர் முஹம்மது அல்தாபி அவர்கள் 16-01-2011 ஞாயிறு அன்று லால்பேட்டை சமூக விழிப்புணர்வு கூட்டத்தை முடித்துக்கொண்டு அன்று இரவு 11  மணியளவில் நமதூருக்கு வருகைப்புரிந்தார்.அதன் சமயம் கிளை நிர்வாகிகள் மற்றும் தாயகம் சென்றுள்ள அன்வர்தீர் முன்னாள் முத்தவல்லி பக்கிர் முஹம்மது, கொள்ளுமேடு வார்டு உறுப்பினர் முன்னால் ஜமாஅத் நிர்வாகி அப்துர்ரஹ்மான், தலிபா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கிளையின் செயல்பாடுகள் பற்றி கேட்டு அறிந்த அவர் மேலும் சிறப்பான முறையில் செயல்பட  ஆர்வமூட்டியதோடு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.அல்தாபி அவர்களின் திடீர் விசிட் நிவாகிகள் மற்றும் தொண்டர்களை மேலும் சிறப்பான முறையில் செயல்பட தூண்டும் வண்ணம் அமைந்தது.

செய்திகள்:முஹம்மது ரஜ்வீ

புதன், 19 ஜனவரி, 2011

கூட்டு துஆ எனும் கூட்டு பித்அத்!!!

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்” (அல்குர் ஆன் 7:55)

எமது சமுதாயத்தில் ஒருவர் துஆ கேட்க மற்றவர்கள் ஆமீன் சொல்லும் கூட்டு துஆ எனும் (புதிய) வழிபாட்டு முறை ஜனாஸா நல் அடக்கத்தின் போது, ஹஜ் பயனம் செல்லும் போது, கஸ்த் செல்லும் போது என பொதுவாகவும் ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ, பொருநாள் தொழுகைகளின் பின்பு என குறிப்பாகவும் இன்னும் சமுக, சமய விவகாரங்கள் போன்ற இன்னோரன்ன விடயங்களிலும் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

மேற்படி (நவீன ) அனுஷ்டானம் இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆனிலோ அல்லது நபி வழியிலோ காணப்படும் ஆதாரங்கள் அடிப்படையில் அமைந்த வணக்க முறையா? அல்லது அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தந்த நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகளில் ஒன்றா? என்பதை இக்கட்டுறையினுடாக விளங்க முற்படுவோம்.

திங்கள், 17 ஜனவரி, 2011

மீஸான் (தராசு)- - இப்னு தாஹிரா

இவ்வுலகத்தில் நன்மை செய்தவர்களும் தீமை செய்தவர்களும் மறுமை நாளில் அவரவர்களின் நன்மை, தீமைகளை தெளிவாகக் காண்பார்கள். இவ்வுலகில் மிக மிகச் சிறியதாக நினைத்தவை கூட அவர்களின் பதிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்.

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8)

 
பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே! எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன்எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். (அல்குர்ஆன் 18:49)

பதிவேட்டைப் பார்த்து அதிர்ந்து போகும் மனிதன், இந்தப் புத்தகம் தனக்குக் கொடுக்கப்படாமல் இருக்க வேண்டுமே என்று கதறுவான். புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பதுதெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே! எனக் கூறுவான். (அல்குர்ஆன் 69:25-29)

இந்துத்துவா பயங்கரவாதத்தை மிஞ்சிய SDPI யின் சமூக வீரோத செயல்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள போராட்டம் பற்றி சுவர் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. சுவர் விளம்பரம் செய்யப்பட்டவுடன் அந்த பகுதியில் உள்ள SDPI ரவுடிகள் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டத்தின் விளம்பத்தை அழித்து அதில் சுன்னாம்பு அடித்துவிட்டு SDPI என எழுதி வைத்துள்ளனர்.

சமூதாய ஒற்றுமை என்று கூறி கிழம்பிவிட்டு , பாபர் மஸ்ஜித் அநியாயதீர்ப்பை கண்டித்து செய்யப்பட்ட சுவர் விளம்பத்தை அழித்து, தாங்கள் பாசிச சக்தியை விட கோடூரமானவர்கள் என்பதை உலகிற்கு வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர்.


Thanks to www.tntj.net

சனி, 15 ஜனவரி, 2011

லால்பேட்டையில் சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால்

லால்பேட்டையில் சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
இறைவன் நாடினால் நாள் :16-01-2011 ஞாயிறு நேரம்:மாலை06.30 இடம்;ஸ்கூல்தெரு
தலைமை :A.அப்துல் ரஜாக் மாவட்ட தலைவர்
சிறப்புரை :S.அபு சுஹைல் பாகவி மாநில பேச்சாளர்
தலைப்பு :வெற்றின் பாதை
சிறப்புரை :M.பக்கிர் முஹம்மது அல்தாபி மாநில தலைவர்
தலைப்பு :ஜனவரி 27 ஆர்ப்பாட்டம் ஏன் ? எதற்கு?
அனைவரும் கலந்து கொள்ள வேண்டி அன்புடன் அழைக்கிறது
தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத், லால்பேட்டை நகரம்

புதன், 12 ஜனவரி, 2011

காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதி

வாக்காளர்க‌ள்:
மொத்த வாக்காளர்கள்:1,79,633
ஆண் வாக்காளர்கள்: 93,009
பெண் வாக்காளர்கள்:86,624
வாக்குச்சாவடிகள்: 212

தற்போதைய எம்.எல்.ஏ.:
ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)

தொகுதி மறுசீர‌மைப்பு:
தொகுதி மறுசீரமைப்பில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.

தொகுதி எல்லைக‌ள்:
காட்டுமன்னார் கோயில் தாலுக்கா
இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 11 முறை
தி.மு.க.: 5 முறை வெற்றி
காங்கிர‌ஸ்: 2 முறை வெற்றி
இந்திய‌ ம‌னித உரிமை க‌ட்சி: 2 முறை வெற்றி
காங்கிர‌ஸ் ஜ‌ன‌நாய‌க‌ப் பேர‌வை: 1 முறை வெற்றி
விடுத‌லைச் சிறுத்தைக‌ள்: 1 முறை வெற்றி

செவ்வாய், 11 ஜனவரி, 2011

தொழுகையில் தஸ்பீஹ் செய்தலைப்பற்றி

பள்ளிவாச­ல் ஃபஜ்ர், அஸர் தொழுகை முடிந்த உடன் துஆ ஓதாமல் தஸ்பீஹ் செய்து விட்டு துஆ ஓதுகிறார்கள். பின்னர் க­மாவும் ஸலவாத்தும் ஓதுகிறார்கள். ஆனால் மற்ற தொழுகையில் தஸ்பீஹ் ஓதுவதில்லை. இது சரியான முறையா?

ஐவேளைத் தொழுகைக்குப் பின்னால் பல திக்ருகளைக் கூறுவதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். அவற்றில் அனைத்தையுமோ அல்லது சிலதையோ நாம் கூறிக் கொள்ளலாம். ஆதாரப்பூர்வமான தொகுப்புகளில் வந்துள்ளவற்றில் சிலதைத் தருகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதை (அல்லாஹு அக்பர் என்ற) தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர­லி) நூல்கள்: புகாரீ 842, முஸ்­லிம் 1022

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர்,
(அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி) மூன்று முறை பாவமன்னிப்புத் தேடுவார்கள். மேலும் அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம், வமின்(க்)கஸ் ஸலாம், தபாரக்(த்)த தல் ஜலா­ வல்இக்ராம்

(பொருள்: இறைவா! நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. மகத்துவமும், கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியமிக்கவன்) என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: ஸவ்பான் (ர­லி) நூல்: முஸ்­லிம் 1037

புதன், 5 ஜனவரி, 2011

இணைவைத்தல் எப்போது தோன்றியது?

இணைவைத்தல் எங்கே எப்போது தோன்றியது?

இறைக் கொள்கைக்கு எதிரான நிராகரித்தலும், இணைவைத்தலும் இறைதூதர் நூஹ்-நோவா- (அலை) அவர்களின் சமூகத்தாரிடமே முதலில் தோன்றியது.
இறைமறையில் இறைவன் இதை பின்வருமாறு விவரிக்கிறான்:-

انا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ

(நபியே! (இறைதூதர்) நூஹுக்கும் அவருக்குப் பிறகு வந்த இறைதூதர்களுக்கும் நாம் வஹீ (இறைத்தூதை) அறிவித்தவாறே உமக்கும் அறிவித்தோம் (அந்நிஸா: 4:163)

நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:-

நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் நபி நூஹ் (அலை) அவர்களுக்கு மிடையே உள்ள காலம் பத்து நூற்றாண்டுகளாகும். இக்கால கட்டங்களில் மக்கள் அனைவரும் இஸ்லாத்திலேயே இருந்து வந்தார்கள்.(ஆதாரம்:தப்ஸீர் இப்னு கதீர்: பாகம் 2: பக்கம்: 412)

ஏன் தோன்றியது ?

இணைவைத்தல் (ஷிர்க்) தோன்றுவதற்கு முதற்காரணமே மனிதன் இறைவனின் படைப்புகளை இறைவனின் தகுதிக்கு உயர்த்தியதும், அவர்களிடையே வாழ்ந்து வந்த நல்லோரை வரையறை மீறிப் புகழ்ந்து வந்ததுமேயாகும்.

இதையும் இறைவனே கூறுகிறான்:-

وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا

மேலும் நூஹ் (அலை) அவர்களின் மக்கள், தமது சமூகத்தாரிடம் உங்களின் (வணக்கத்திற்குரிய) கடவுள்களை விட்டுவிடாதீர்கள்! மேலும் (உங்கள் தெய்வங்களான) வத்து,ஸுவாஉ, யஊது, யகூகு, நஸ்ரு (ஆகிய சிலைகளையும்) விட்டுவிடாதீர்கள் என்றும் கூறினார்கள்; (நூஹ்- 71:23)

ஏன் இஸ்லாம்?

தங்கள் மீதும், தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், பிரிட்டனின் பிரபல தினசரியான “தி கார்டியன் (The Guardian)”, இஸ்லாம் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரையை வெளியிட்டிருந்தது.

“கறுப்பின மக்கள் ஏன் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் (Why are black people turning to Islam?)” என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த பதிவை எழுதியவர் ரிச்சர்ட் ரெட்டி (Richard Reddie) அவர்கள்.இஸ்லாத்தை தழுவிய பலரிடம் நேர்க்காணல் செய்து அந்த கட்டுரையை எழுதியிருந்தார் அவர். அவருடைய ஆய்வு அடங்கிய அந்த பதிவு இங்கே உங்கள் பார்வைக்கு…

“கறுப்பின மக்கள் இஸ்லாத்தை தழுவுவதென்பது புதிய நிகழ்வு அல்ல. காலங்காலமாகவே அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆனாலும், ஏன் அதிக கறுப்பின பிரிட்டன் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், இஸ்லாத்தை தழுவுகின்றார்கள்? என்று ஆழமாக சென்று ஆய்வு செய்தேன். நான் முஸ்லிமில்லை என்றாலும் எனக்கு இஸ்லாம் மீது எப்போதுமே ஆர்வம் இருந்ததுண்டு.

உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி

பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப்படுகின்றது.

ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது. இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.

இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது. இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான்.

இப்படி உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இது தான் அடிப்படைக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

இங்கு தான் மனித உளவியலை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வாழ்வியலுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புத வழிகாட்டலை வழங்குகின்றான். மனிதர்களிடம் குடி கொண்டிருக்கும் இந்தப் புற்று நோய்க்கு சிறந்த மாமருந்தை வழங்குகின்றான். அந்த அருமருந்து இதோ:

''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6490

பார்வையைப் பாதுகாப்போம்!!

கே.எம். அப்துந் நாஸீர், கடையநல்லூர்.

உண்மையான இறைநம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய பல்வேறு பண்புகளை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் விவரித்துள்ளான். அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் நம்முடைய பார்வையைப் பாதுகாப்பதாகும். இந்த மனித சமுதாயம் ஒழுக்க வீழ்ச்சியடைவதற்கு மிக முக்கியமான ஒரு காரணி பார்வையை தவறான முறையில் பயன்படுத்துவதாகும். இதன் காரணமாகத்தான் இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் தங்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என இறைவன் தன் திருமறையில் கட்டளையிடுகின்றான்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல் குர்ஆன் 24 : 30, 31)

படைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்!!

பல துறைகளில் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி விட்ட மனிதன் மன நிம்மதிக்காக ஓர் தெளிவான வாழ்வு நெறியைத் தேடி அன்று முதல் இன்று வரை அலைந்து கொண்டு தான் இருக்கிறான். இந்த வாழ்வு நெறி தேட­ல் சிலருக்கு இஸ்லாமிய மார்க்க போதனைகள் கிடைக்கப் பெற்று அதனைத் தன்னுடைய வாழ்வு நெறியாக ஏற்றுக் கொள்கின்றனர்.

இவ்வாறு புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணங்களைப் பார்க்கும் போது, பரம்பரை முஸ்லிம்களாகிய நமக்கு அப்பொழுது தான் இஸ்லாத்தின் அருமையும் பெருமையும் புரிகிறது. அது மட்டுமில்லாமல் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கான காரணங்கள் நமக்குப் பல படிப்பினைகளைத் தருகின்றன.

சொகுசாக வாழ பொருளாதாரத்தைத் தேடி வளைகுடா நாடுகளுக்கு, குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகருக்கு வருகை தரும் பலர் தங்களுடைய மறுமை வாழ்வையும் வளப்படுத்திக் கொள்ளும் விதமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.