கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திங்கள், 3 டிசம்பர், 2012

அமீரகவாழ் கடலூர் மாவட்ட முதல் ஒருங்கிணைப்பு கூட்டம்!


துபை டிச 01: அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அமீரக வாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட முதல் ஒருங்கிணைப்பு கூட்டம் 30.11.2012  அன்று துபை மண்டல TNTJ தலைமை மர்கசில் மாலை 4:00 மணியளவில் மண்டல பொருளாளர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

முதலில் தலைமையுராக சகோ.சாஜிதுர் ரஹ்மான்   "ஏன் இந்த ஒருங்கிணைப்பு?"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஒருங்கிணைப்பு அவசியத்தை வலியுறுத்தி பேசினார்கள்.


அதனை தொடர்ந்து வந்துயிருந்தவர்களின் அறிமுகம் நடைப்பெற்றது. இதில் அவரவர்கள் தங்களை சுய அறிமுகப்படுத்தி கொணடனர்.

இதையெடுத்து தாயகத்திலிருந்து அலைப்பேசி மூலம் தலைவர் சகோ.முத்துராஜா, செயலாளர் சகோ.நிசார் அஹமத், பொருளாளர் சகோ.சிராஜ் , துணை செயலாளர்கள் சகோ.சலாம், சகோ.அஷ்ரப் அலி ஆகிய நிர்வாகிகள் மாவட்டதின் நடக்கும் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை பற்றி விளக்கினார்கள்.



பின்பு அமீரகத்திற்க்கான கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.

பொறுப்பாளர் 1 : சகோ.முஹம்மது இஸ்மாயில் 00971 50 52754642 
                                   [பரங்கிப்பேட்டை - துபை] 

பொறுப்பாளர் 2 : சகோ.முஜிபூர் ரஹ்மான் 00971 55 7295202 
                                   [சிதம்பரம் - அபுதாபி -  ஜகாட்]

பொறுப்பாளர் 3: சகோ.ஹாஜா சாதிக் அலி 00971 557294845 
                                    [பரங்கிப்பேட்டை - அபுதாபி]


இதையெடுத்து மண்டல் பொருளாளர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் "பொறுப்பார்களின் பண்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்த்தினார்கள்.


அதனை தொடர்ந்து சகோ.யூசுப் அலி " நாம் ஏன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கின்றோம்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். தன்னுடைய உரையில் தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்க்கும் மற்ற அமைப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கி பேசினார்கள்.


முன்னாள் கடலூர் மாவட்ட பேச்சாளர் சகோ.பாஜுல் ஹீசைன் அவர்கள் தற்போதைய மாவட்டத்தின் நிலவரம் மற்றும் தஃவாவின் அவசியம் ஆகியவற்றை பற்றி பேசினார்கள்.

தீர்மானங்கள்:-
  • கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு எல்லாம் வகையிலும் உறுதுனையாக இருப்பது என தீர்மானிக்கப்பட்டது.
  • கடலூர் மாவட்டத்தை தஃவா மற்றும் சமுதாய பணிகளில் மாநிலத்தில் முதலிடத்தில் கொண்டு வரவேண்டும்.
  • மாவட்டத்தில் இரத்தானத்திற்க்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி இரத்தான முகாம் நடத்துவது.
  • கடலூர் மாவட்டம் புவனகிரியில் புதிய கிளையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்தை கோருவது.
  • மாவட்டத்தில் கத்னா முகாம் நடத்துவது.
  • அமீரகவாழ் ஒருங்கிணைப்பிற்கு அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது.
  • இன்ஷாஅல்லாஹ் அடுத்த கூட்டம் வருகின்ற 25.01.2013 அன்று நடைப்பெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அல்லாஹ் அக்பர்!

கூட்டத்தின் நிறைவாக கடலூர்
மாவட்ட பொறுப்பாளர்களில் ஒருவரான சகோ.முஹம்மது இஸ்மாயில் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைப்பெற்றது.

இதில் அமீரகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 30-க்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள்  கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக