கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திங்கள், 13 டிசம்பர், 2010

அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 27 ல் சென்னையில் / மதுரையில் ஆர்த்தெழுவோம்

அன்புடன் அழைக்கிறது .........
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளை

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

அநீதிக்கு மேல் அநீதி.. அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 4ல் ஆர்த்தெழுவோம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து ஜனவரி 4 ல்அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 27 ல் சென்னையில் / மதுரையில் ஆர்த்தெழுவோம்

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது முதல் அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜிதை இடித்த பாவிகளை சட்டத் தின்படி தண்டிக்க வலியுறுத்தியும் நாம் உள்பட பல்வேறு இயக்கங்கள் டிசம்பர் ஆறாம் நாளில் போராட்டங்களை விடாமல் நடத்தி வந்தோம். நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்கக் கோரி நாம் நடத்திய அனைத்து போராட்டங்களையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அர்த்தமற்றதாக்கி விட்டது.

சனி, 11 டிசம்பர், 2010

ஆஷூரா நோன்பு !


நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1592


இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1901
மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆஷூரா நோன்பு ஏன் ?
ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். இது என்ன நாள் என்று கேட்டார்கள். இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள் என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3397

நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.
ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எனவே இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.

ஆஷூரா நோன்பின் சிறப்புகள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை
நூல்: புகாரி 2006
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம்
நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977

யூதர்களுக்கு மாறு செய்வோம்
ஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள் அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.
மற்றொரு அறிவிப்பி அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: முஸ்லிம் 1916, 1917
நபி (ஸல்) அவர்கள் ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதா நாம் ஒன்பது பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்

சனி, 4 டிசம்பர், 2010

துபையில் பெரும் எழுச்சியோடு நடைப்பெற்ற தவ்ஹீத் மாநாடு


கடந்த வெள்ளிக்கிழமை 03.12.2010 அன்று துபாயில் உள்ள அல் மக்தூம் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் பெரும் எழுச்சியோடு தவ்ஹீத் மாநாடு மண்டலத் தலைவர் அப்துல் நாசிர் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. தாயகத்தில் இருந்து வருகைத் தந்த மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல்லுகா அவர்கள் வஞ்சிக்கப்பட்டோரின் கோரிக்கைகள் என்ற தலைப்பில் பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை விளக்கி கூறியதோடு தவ்ஹீதுக்கு எதிராய் புறப்பட்டுள்ள 19 கூட்டத்தை பற்றியும் விளக்கி பேசினார்.

துபாய் மண்டல தலைவர் ஹாமீம் இப்ராஹீம் அவர்கள் தடம் மாறாத தவ்ஹீத் ஜமாஅத் என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராய் சொல்லப்படுகின்ற, பரப்பபடுகின்ற பொய் புரட்டுகளை பற்றியும் இந்த ஜமாஅத் என்றும் கொள்கை மாறாமல் குரான் ஹதீஸ் வழிமுறையில் நிற்கிறது என்ற கருத்தோடு எழுச்சி உரை நிகழ்த்தினர்.

எத்துனை 19 கூட்டங்கள் வந்தாலும் தவ்ஹீத் எனும் சத்தியக் கொள்கையை அழிக்க முடியாது
((நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக.Al Quarn 17:81))என்பதை பறைச் சாற்றும் விதமாக மக்கள் பெரும் திரலாக கலந்துக்கொண்டு சிறபித்தனர்.

ஊர்களில் வருவதுபோல் மக்கள் பஸ்கலையும் வேன்கலையும் வைத்துக்கொண்டு வந்து மாநாட்டை வெற்றிப்பெற வைத்தனர் எல்லப் புகழும் அல்லாஹ்விற்கே !!!

புதன், 1 டிசம்பர், 2010