வெள்ளி, 19 ஜூன், 2015
ரமளான் மாதத்தின் சிறப்புகள் !

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:
"ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898),முஸ்லிம் (1956)
"ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1899 முஸ்லிம் (1957)
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில்
காணப் படுகின்றன. இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம்.
ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல! "ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன'' என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான். மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும். இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் "ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன'' என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.
"ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்''’என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான். இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். "யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்)

லேபிள்கள்:
இஸ்லாம்
சனி, 9 ஆகஸ்ட், 2014
ஓர் வபாத் செய்தி!
நமதூர் தெற்குத் தெருவில் வசிக்கும் மர்ஹும் ஆம்ஷா அவர்களின் மகனும்,அப்துல்பாரி அவர்களின் மருமகனுமாகிய முஹம்மது அமீன் நேற்று நள்ளிரவு தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....
எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு tntj பிரார்த்தனை செய்கிறது.
லேபிள்கள்:
கொள்ளுமேடு கிளை
செவ்வாய், 29 ஜூலை, 2014
TNTJ கொள்ளுமேடு மர்கசில் பெருநாள் திடல் தொழுகை!
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளை தவ்ஹீத் மர்கசில் இந்த ஆண்டிற்கான பெருநாள் தொழுகை சிறப்பான முறையில் நபி வழிபடி மார்க்சின் பின்புறத்திலுள்ள திடலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் வழக்கம்போல் ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.சகோதரர் முஹம்மது ரஜ்வீ அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்
படங்கள்: இமாம் அலி
படங்கள்: இமாம் அலி
லேபிள்கள்:
கொள்ளுமேடு கிளை
கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிஃத்ரா விநியோகம் -2014
கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பிஃத்ரா விநியோகம் கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் சிறப்பான முறையில் நடைப்பெற்றது...மேலும் கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் நமது பக்கத்துக்கு கிராமம் புத்தூர் மக்களுக்கும் பயன்படும் வகையில் பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டது.. விபரம் வருமாறு
பிஃத்ரா பெற்று பயனடைந்த குடும்பங்கள் மொத்தம்: 105
மொத்த வரவுகள் :ரூ 46,350/-
உள்ளூர் வசூல் (ஜமாஅத்தினர் மட்டும் )ரூ 21,000/-
வெளிநாடு வசூல் ரூ 15,350/-
தலைமை மூலம் ரூ 10,000/-
மொத்த செலவுகள்: ரூ 41,574/-
மளிகை பொருட்கள் மொத்தம் ரூ 32,530/-
கோழி விநியோகம் மொத்தம் ரூ:12,600/-
ரோக்கமாக வழங்கியது (6ஏழைகளுக்கு ) ரூ 1220/-

படங்கள் செய்திகள்:
யாசின்,இமாம் அலி மற்றும் ரஜ்வீ
லேபிள்கள்:
கொள்ளுமேடு கிளை
பெருநாள் தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கான உதவி !
கடலூர் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது விதவைகள் போன்றோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவிகளை செய்து வருகின்றது. இதனடிப்படையில் நமதூரில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டது.மொத்தம் 19 நபர்களுக்கு அவர்களுக்காக ஆடைகள் கொள்ளுமேடு தவ்ஹீத் சகோதரர்களால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
லேபிள்கள்:
கொள்ளுமேடு கிளை
வியாழன், 8 மே, 2014
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : 90.6% மாணவர்கள் தேர்ச்சி!
சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இத்தேர்வில் 90.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தாள். தர்மபுரி பள்ளி மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்தார். மேலும் 3ம் இடத்தை இரண்டு மாணவர்கள் பிடித்தனர், நாமக்கல் போதுப்பட்டியைச் சேர்ந்த டி.துளசிராஜன் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடம் பெற்றார். மேலும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த எஸ்.நித்யாவும் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தைப் பிடித்தார்.
ப்ளஸ் 2 தேர்வில் ஒட்டுமொத்தமாக 90.6 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 4 லட்சத்து 14 ஆயிரத்து 211 மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். தமிழில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுஷாந்தி 200க்கு 198 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். ஆங்கிலத்தில் ஓசூரைச் சேர்ந்த பவித்ரா 198 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பிடித்தார். கணிதத்தில் 3882 புலிகள் 200க்கு 200 பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 5,884 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை தேர்வு நடந்தது. இதற்காக 2210 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 74,197 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 38,392 பேர் மாணவிகள். புதுச்சேரியில் 120 பள்ளிகளில் படித்த 13,528 பேரும் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 1 லட்சம் பேர் எழுதினர். இது தவிர சிறைகளில் உள்ள 58 கைதிகளும் இந்த தேர்வை எழுதினர். டிஸ்லெக்சியா மற்றும் இதர குறைபாடுகள் உள்ள மாணவர்கள் 1000 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்.
தேர்வின்போது, கேள்வித்தாள் படித்து பார்க்க இந்த ஆண்டும் 15 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
விடைத்தாளில் முதல் முறையாக மாணவர்களின் போட்டோ, தேர்வு எழுதும் பாடம் உள்ளிட்டவை அச்சிட்டு வழங்கப்பட்டன. ஹால்டிக்கெட்டிலும் மாணவ மாணவிகளின் போட்டோ இடம் பெற்றது. மாணவர்களின் வருகையை பதிவு செய்ய போட்டோவுடன் கூடிய பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த தேர்வு மையங்களில் மாணவர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டன.
கேள்வித்தாள் இந்த ஆண்டு மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்பட்டு அத்தாட்சியாக மாணவர்களிடம் கையெழுத்து
லேபிள்கள்:
கடலூர் மாவட்டம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)