திங்கள், 14 மே, 2012
சனி, 12 மே, 2012
சிதம்பரத்தில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் ஒத்திவைப்பு!
சிதம்பரம்: சிதம்பரம் TNTJ மார்கஸ் மிக அருகில் உள்ள NO;2406 அரசு டாஸ்மார்க் கடை பொது மக்களுக்கும், வணக்க வழி பாட்டிற்கும், மாணவ, மாணவியர்களுக்கும் மிகவும் இடையுறாக இருந்து வருகின்றது.
இந்த பெரும் அநீதியை எதிர்த்து, மாவட்ட ஆட்சியர்,கோட்டாசியர் ,தாசில்தார், SP அனைவர்க்கும் மனு வழங்கப்பட்டது. அதில் காலதாமதம் ஏற்படும் நிலை இருந்தவுடன் ”டாஸ்மார்க் கடைக்கு,பூட்டு போடும் போராட்டம் ” 11..05.2012 வெள்ளிக்கிழமை ஜும்மாவுக்கு பிறகு அறிவிக்கப்பட்டு, நகர முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.
![]() |
10.05.2012 அன்று மாலை 04.00 மணிக்கு சிதம்பரம் நகர நிலையத்தில் உதவி காவல் துறை ஆய்வாளர் ,அவர்களும், கலால் தாசில்தார் ரங்கராஜன் அவர்கள்முன்னிலையில் நமது ஜமாத் நிர்வாகிகள் D.முத்துராஜா (மாவட்ட தலைவர்) AK
லேபிள்கள்:
கொள்ளுமேடு கிளை
வியாழன், 10 மே, 2012
திங்கள், 7 மே, 2012
பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கலந்து கொண்ட கோவை மாவட்ட குடும்பவியல் மாநாடு!
கடந்த 6-5-2012 அன்று கோவை மாவட்டம் சார்பாக கோவையில் மாபெரும் குடும்பவியல் மாநாடு நடைபெற்றது. இதில் இம்மை மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் 15 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் இடம் பெற்றிருந்தது.
மேலும் P. ஜைனுல் ஆபிதீன் , சம்சுல்லுஹா, பக்கீர் முஹம்மத் அல்தாபி, M.I. சுலைமான், ரஹ்மத்துல்லாஹ், M.S. சுலைமான் ஆகியோரின் மார்க்க சொற்பொழிவுகள் இடம் பெற்றது.
இம்மாநாட்டில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்
லேபிள்கள்:
தவ்ஹீத் ஜமாஅத்
கடலூர் மாவட்டத்தில் கபளீகரம்: வளைக்கப்பட்ட வக்ஃப் நிலங்கள்!
கடலூர்: கடலூர் மாவட்டம் கடலூர் தாலுகாவில் உள்ளது செல்லஞ்சேரி என்ற கிராமம். புதவை மாநிலத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த ஊர் தற்போது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாக இல்லை. இருப்பினும் ஒரு காலத்தில் அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்கள் புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இற்கு செல்லஞ்சேரி தர்கா மற்றும் செல்லஞ்சேரி தைக்கா என்ற இரு பெயர்களில் சமார் 20 ஏக்கர் அளவிலான வக்ஃப் நிலங்கள் உள்ளன. மேலும் செல்லஞ்சேரி பங்களா என்ற பெயரில் ஒட்டு வீடாக உள்ள ஒரு கட்டடமும் மற்றொரு வக்ஃபு சொத்தாக உள்ளது. நிலங்களைப் பொறுத்தவரை சுமார் 16 ஏக்கர் அளவில் நஞ்சையாகவும் 4 ஏக்கர் அளவில் புஞ்சையாகவும் உள்ளன.
இந்த நிலங்கள் முஸ்லிம்கள் பல தலைமுறையாக வாழ்ந்து வந்ததன் அடையாளமாக பரந்து விரிந்த கபர்ஸ்தான் காணப்படுகிறது. மேலும் ஒன்றிரண்டு சமாதிகளும் பச்சைக் கொடிகளும் கூட காணப்படுகின்றன. ஒரு புறம் இப்படி என்றால் மறுபுறம் உள்ள நிலங்கள் விளைநிலங்களாக உள்ளன.
இந்த நிலம் மோசடிக்கும்பலால் வளைக்கப்பட்ட அந்த தருணத்திலும் இங்கே பயிர் செய்யப்பட்டு வந்துள்ளன. மேலும் பாசனத்திற்கான ஆதாரமாக விளங்கும் கிணறுகள், பாசன வாய்க்கால்கள், மோட்டார் பம்ப்செட் வைக்கும் அறைகள் என விவசாயத்திற்கான
லேபிள்கள்:
கடலூர் மாவட்டம்
திங்கள், 30 ஏப்ரல், 2012
மரணத்திற்கு பின்னும் நன்மைகள்!
பிரபஞ்சத்தின் படைப்பாளானாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே! பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ( அல்குர்ஆன்: 29:57)
மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் மரணித்தே தீர வேண்டும். மரணத்திலிருந்து தப்பித்தவர்கள் யாருமில்லை. இன்று மற்றவர்கள் மரணித்தால் நாளையோ அல்லது நாளை மறுநாளோ நாம் மரணிக்கப் போகிறோம்...
.
அந்த மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்மையெல்லாம் படைத்த இறைவன் இயம்புகின்றான். அதனால் தான் மரணித்தப் பின் நீங்கள் அனைவரும் என்னிடமே கொண்டு வரப்படுவீர்கள் என்று தன்னுடைய திருமறையின் மூலமாக கூறுகின்றான்.
அதுமட்டுமின்றி இவ்வுலக வாழ்வையும் மரணத்தையும் இவ்வாறு கூறுகின்றான்:
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன். மன்னிப்பவன். (அல்குர்ஆன் 67 : 2)
நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது. (அல்குர்ஆன் 31 : 22)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும். 1.நிலையான தர்மம் 2.பயனுள்ள கல்வி 3.இறைவனிடம் பிரார்த்திக்கும் குழந்தைகள். (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம்)
ஒரு இலக்கை நோக்கி மனித இனம் பயணித்துக் கொண்டிருக்கிறது. மனித இனம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அந்த இலக்கை அது அடைந்தே தீரும். அவ்விலக்கை சில லட்சியங்களுடன் வாழ்ந்து சென்றடைந்தால் மனித இனம் மாண்பு பெறும். அந்த லட்சியங்களையும் தன்னைப் படைத்த இறைவனும் அவனின் திருத்தூதரும் காட்டிய வழியில் அமைத்துக் கொள்ளுமேயானால் நிலையான பலா பலன்களை மனித இனம் தனது இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்ளும். இல்லையெனில் தலைக்குனிவே! அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
இறைவனோடு மனித இனத்துக்குள்ள பந்தம் சில தினங்களுக்கு மட்டுமல்ல. குறிப்பிட்ட நேரத்தோடு
லேபிள்கள்:
இஸ்லாம்
ஞாயிறு, 22 ஏப்ரல், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














