கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வியாழன், 15 டிசம்பர், 2011

நெல்லையில் நடைபெற்ற TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு – முழு விபரத்துடன்!

பிரம்மாண்டமாய் கூடிய 13 வது மாநிலப் பொதுக்குழு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு கடந்த 11/12/2011 அன்று திருநெல்வேலி மாநகரத்தில் இருக்கும் பார்வதி சேஷ மஹாலில் காலை 10.30 க்கு கூடியது. மேலாண்மைக் குழுத்தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அலை கடலென திரண்ட நிர்வாகிகள் :

கடந்த 2011 ஜனவரி மாதம் சேலத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், மாநிலத்திற்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பொதுக்குழு அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இதில் 3000க்கும் அதிகமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

நெல்லை மாநகரில் இருக்கும் மண்டபங்களிலேயே மிகப்பெரியது இந்த பார்வதி மஹால்தான். இருந்தாலும் மக்கள் வெள்ளத்தால் இதுவும் கூட இடப்பற்றாக்குறையாய் இருந்தது. பொதுக்குழு உறுப்பினர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் அரங்கம் காலை 10 மணிக்கே நிரம்பி வழிய ஆரம்பித்தது. அரங்கத்தின் மாடி, பக்கவாட்டுப் பகுதிகள் அனைத்திலும் இருக்கைகள் நிரம்பி வழிந்தன. அரங்கத்திற்கு வெளியே ஷாமியானா பந்தல் போடப்பட்டு அதிலும் நாற்காலிகள் குவிக்கப்பட்டன. ஆனாலும் இடமின்றி மக்கள் பலர் நின்ற வண்ணமே இருந்தனர்.

வானுயர்ந்த உறுப்பினர்களின் கோஷம்:

பொதுக்குழுவின் முதல் நிகழ்ச்சியாக நிர்வாகக் குழு எடுத்த சில நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. சைபுல்லாஹ் ஹாஜாவின் தவறான செயல்பாடு காரணமாக அவரை நீக்கியதை பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் கேட்கப்பட்டது. “அல்லாஹ் அக்பர்” என தங்களின் கைகளை உயர்த்தி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

அதுபோல சொந்தக் காரணங்களுக்காகவும், வேலைப்பளு காரணமாகவும் தங்களின் பொறுப்புகளை ராஜினாமா செய்த சகோ.அப்துந்நாசர், தணிக்கைக் குழு உறுப்பினர் சகோ.தம்மாம் தவ்ஃபீக், மாநிலச் செயலாளர் சகோ.மாலிக் ஆகியோரின் விலகல் குறித்தும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

எழுச்சியடைய வைத்த லுஹாவின் உரை:

பொதுக்குழுவின் முதல் அமர்வின் முதல் நிகழ்ச்சியாக மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி “கொள்கை உறவு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த ஜமாஅத்தில் இருக்கும் உறுப்பினர்கள் உறவுகளைப் பேணுபவர்கள், அதே நேரம் அந்த உறவுகள் கொள்கைக்கு மாற்றமாகச் செயல்படும் சமயத்தில் அதைத் தூக்கி எறிந்து விட்டு இந்த சத்தியக் கொள்கையைத் தூக்கிப் பிடிப்பவர்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) காலத்திய ஒரு வரலாற்றைச் சுட்டிக் காட்டி

வியாழன், 8 டிசம்பர், 2011

நமதூர் தஹ்வ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற மாதாந்திர பெண்கள் பயான்

நமதூர் தஹ்வ்ஹீத் பள்ளியில் பெண்களுக்காக மாதந்தோறும் நடைபெறும் பயான் நிகழ்ச்சி நேற்று சிறப்புடன் நடைபெற்றது சகோதரர் பெண்ணடம் யாசின் அவர்கள் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சி மாலை 3  மணி முதல் அஸ்ர் தொழுகை வரை நடைபெற்றது. இதில் 40  க்கும்  மேப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.