கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 26 அக்டோபர், 2011

வெளிநாட்டில் இருப்பவர் ஊரில் கொடுக்கும் குர்பானியின் சட்டம் என்ன?

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது.

"நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)

குர்பானி கொடுப்பவர் எங்கிருந்தாலும் சரி, எங்கு குர்பானியைக் கொடுத்தாலும் சரி குர்பானி கொடுப்பதற்குத் தீர்மானித்தவர் துல்ஹஜ் பிறை ஒன்றில் இருந்து குர்பானியைக் கொடுக்கும் வரை நகம், முடி போன்றவற்றை களையக் கூடாது.
கொடுப்பவர் எங்கிருந்தாலும் இதைத் தான் சட்டமாக இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது.

நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் குர்பானி கொடுப்பதற்கு நீங்கள் தீர்மானித்தால் இதுதான்
உங்களுக்குறிய சட்டமாகும்.

(நிர்பந்தத்திற்கு உள்ளானவர்களுக்கு மாத்திரம் இஸ்லாம் விதிவிலக்கு தருகின்றது.)

நன்றி:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக