கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

செவ்வாய், 29 மே, 2012

லால்பேட்டை பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் 29.05.2012 அன்று பல்வேறு தடைகளை தாண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் லால்பேட்டை கிளை சார்பாக நடத்திய மாபெரும் பொதுக்கூட்டத்தில் (மாநாட்டில்) ஆயிரக்காணக்னேர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி TNTJPNO.COM இணையதளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. ஆயிரத்திற்கு மேற்ப்பட்டோடர் இணையதளம் இந்த நிகழ்ச்சி பார்த்தணர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் அருகே உள்ள காலடிபேட்டை கிளையில் இனையதளத்தின் நேரடி ஒளிப்பரப்பை மர்கசில் பார்க்க ஏற்பாடு செய்துயிருந்தணர். மேலும் புதுகோட்டை, கோவை, திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை போன்ற பல மாவட்டங்களில் பல கிளைகளில் இது போன்ற நேரடி ஒளிபரப்பினால்

மௌலவி பிஜெ அவர்களின் கொள்ளுமேடு விசிட்


நேற்று லால்பேட்டையில் நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்கு வந்த மௌலவி பிஜே அவர்கள் நமதூருக்கு விசிட் வந்தபோது எடுத்த படம்.
படம்.Faizal 

லால்பேட்டை பொதுக்கூட்டம் நேரடி ஒளிப்பரப்பு (LIVE


இன்ஷாஅல்லாஹ்!


இன்று (29.05.2012) கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் நடைபெறும் பி.ஜே. அவர்களின் பொதுக்கூட்டம் நமது www.tntjpno.com - ல் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

- Live Powered By TNTJPNO.COM WEB TEAM


மே 29 லால்பேட்டையில்...

மே 29 லால்பேட்டையில்...

ஞாயிறு, 27 மே, 2012

லால்பேட்டை பொதுக்கூட்டம் சம்மந்தமாக ஆலோசனை

லால்பேட்டையில் நாளை நடைபெற இருக்கின்ற பொதுக்கூட்டம் சம்மந்தமாக நமதூர் தவ்ஹீத் மர்கசில் அஷர் தொழுகைக்கு பிறகு நிவாகிகள் மத்தியில் ஆலோசனை நடைபெற்றது இதன் சமயம் மாவட்ட தலைவர் முத்துராஜா மற்றும் முன்னாள் தலைவர் அப்துர்ரஜ்ஜாக் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.நமதூரில் இருந்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் என தனி தனியாக வாகன வசதி செய்வது என்று தீர்மானிக்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்......பொதுக்கூட்டம் வெற்றிபெற துஆ செய்வோம்.......


திங்கள், 21 மே, 2012

லால்பேட்டை யில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மே29 2012

ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவிய கூத்தாநல்லூர் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்!


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 20-5-2012 அன்று மாபெரும் வரதட்சனை ஒழிப்பு பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் அபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பொதுக் கூட்டம் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும் மாநாட்டை மிஞ்சும் அளிவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பியது.
சகோதரர்கள் அமர்வதற்கு கூட இடமில்லா நின்று கொண்டும் சுவர்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சொற்பொழிவை கேட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. மேலும் இரண்டு சகோதரர்களும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தங்களை வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்லாஹம் லில்லாஹ்!
உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஆன்லைன் பி.ஜே. இணையதளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை எப்படியாது தடுத்தி நிறுத்திட வேண்டும் என சுன்னத் ஜமாஅத் உள்பட பல்வேறு அமைப்பினர் இரவு பகலாக  பெருமளவு பணத்தை செலவு செய்து சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவைகளை முறியடிக்கம் வண்ணம் பொதுக் கூட்டம் மாநாடாக மாறியது குறிப்பிடதக்கது. எல்லா புகழும் இறைவனுக்கே.
விரிவான செய்திகள் பின்னர் வெளியிடப்படும்.







source: www.tntj.net

புதன், 16 மே, 2012

கோடைக்கால தர்பியா முகாம்


கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக மாபெரும் கோடைகால தர்பியா முகாம் சிறப்பாக நடைபெற்றது.இமாம் சாபி மன்பஈ அவர்களும் இமாம் ஹனிபா ரஷாதி அவர்களும் சிறப்பான முறையில் சொற்பொழிவை நிகழ்த்தினர்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.இறுதியாக மார்க்கம் சம்மந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இஷா தொழுகைக்கு பிறகு இரவு சாப்பாட்டிற்கும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.....


செய்தி:முஹம்மது  பைசல் 

திங்கள், 14 மே, 2012

தினத்தந்தியை ஒழித்துக் கட்ட இருமாத செயல்திட்டம்!


கடந்த 28.04.2012 சனிக்கிழமை அன்று "இதை கேட்பாரே இல்லையா?" என்ற தலைப்பில் தினத்தந்தியில் வெளியான தலையங்கம் முஸ்லிம்களை மிகுந்த கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. தாங்கள் சங்பரிவாரக் கும்பலின் கைக்கூலிகள் தான் என்பதை தினத்தந்தி வெட்ட வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அந்தத் தலையங்கம் அமைந்துள்ளது.

இவ்வாறு விஷம் தோய்ந்த வினாக்களை எழுப்பி பொய்யான அவதூறுகளை முஸ்லிம்கள் மீது சுமத்தி ஏதோ பாகிஸ்தானில் பிற மதத்தவர்களை நிர்ப்பந்தப் படுத்தி ஆயிரக்கணக்கான இந்துக்களையும், கிறித்தவர்களையும் இஸ்லாத்திற்கு மாற வைக்கின்றார்களே எனவே இந்து மற்றும் கிறித்தவர்களே! நீங்களும் நீங்கள் சார்ந்த அமைப்புகளும் கொதித்தெழ வேண்டாமா?

அரசியல் கட்சிகள் கொதித்தெழ வேண்டாமா? என்ற கேள்விகளை கேட்டு எல்லோரையும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, அண்ணன் தம்பிகளாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் இந்து, கிறித்தவ, முஸ்லிம் சகோதரர் களுக்கு மத்தியில் கலவரத்தை உண்டு பண்ணி தமிழகத்தையும் குஜராத் போன்று சுடுகாடாகவும் கலவர பூமியாகவும் மாற்ற வேண்டும் என்பதுதான் தினத்தந்தியின் திட்டம் என்பது அதன் கேவலமான தலையங்க வார்த்தைகளிலிருந்து புலனாகின்றது.

முதலில் தினத்தந்தி எழுப்பியுள்ள வாதங்கள் முட்டாள் தனமானவை என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம். இவர்கள் சொல்வது போல இந்துக்களும், கிறித்தவர்களும் மிரட்டப்பட்டுதான் முஸ்லிம்களாக மாற்றப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு ஏற்கனவே நாம் உணர்வு 16:31 இதழில் தெளிவாக தக்க ஆதாரங்களுடன் விளக்கமளித்திருந்தோம்.

கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்து யார் ஒருவரையும் மிரட்டி ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ள வைக்க முடியாது என்ற ஒரு அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை. அது மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கிறித்தவ மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவினாரே பாகிஸ்தானின் முன்னனி கிரிக்கெட் வீரர் யூசுப் யோகானா. அந்த யோகானாவை மிரட்டி இஸ்லாத்தில் வலுக்கட்டாயமாக சேர வைத்து முஹம்மது யூசுப் ஆக மாற்றியது யார்? அவரை மிரட்டியது யார்? என்பதை

சனி, 12 மே, 2012

சிதம்பரத்தில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் ஒத்திவைப்பு!


சிதம்பரம்: சிதம்பரம் TNTJ மார்கஸ் மிக அருகில் உள்ள NO;2406 அரசு டாஸ்மார்க் கடை பொது மக்களுக்கும், வணக்க வழி பாட்டிற்கும், மாணவமாணவியர்களுக்கும் மிகவும் இடையுறாக இருந்து வருகின்றது. 


இந்த பெரும் அநீதியை எதிர்த்துமாவட்ட ஆட்சியர்,கோட்டாசியர் ,தாசில்தார், SP அனைவர்க்கும் மனு வழங்கப்பட்டது. அதில் காலதாமதம் ஏற்படும் நிலை இருந்தவுடன் டாஸ்மார்க் கடைக்கு,பூட்டு போடும் போராட்டம் ” 11..05.2012 வெள்ளிக்கிழமை ஜும்மாவுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுநகர முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.





10.05.2012 அன்று மாலை 04.00 மணிக்கு சிதம்பரம் நகர நிலையத்தில் உதவி காவல் துறை ஆய்வாளர் ,அவர்களும் கலால் தாசில்தார் ரங்கராஜன் அவர்கள்முன்னிலையில் நமது ஜமாத் நிர்வாகிகள் D.முத்துராஜா (மாவட்ட தலைவர்) AK  

வியாழன், 10 மே, 2012

திங்கள், 7 மே, 2012

பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கலந்து கொண்ட கோவை மாவட்ட குடும்பவியல் மாநாடு!

கடந்த 6-5-2012 அன்று கோவை மாவட்டம் சார்பாக கோவையில் மாபெரும் குடும்பவியல் மாநாடு நடைபெற்றது. இதில் இம்மை மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் 15 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் P. ஜைனுல் ஆபிதீன் , சம்சுல்லுஹா, பக்கீர் முஹம்மத் அல்தாபி, M.I. சுலைமான், ரஹ்மத்துல்லாஹ், M.S. சுலைமான் ஆகியோரின் மார்க்க சொற்பொழிவுகள் இடம் பெற்றது. இம்மாநாட்டில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்



கடலூர் மாவட்டத்தில் கபளீகரம்: வளைக்கப்பட்ட வக்ஃப் நிலங்கள்!



கடலூர்: கடலூர் மாவட்டம் கடலூர் தாலுகாவில் உள்ளது செல்லஞ்சேரி என்ற கிராமம். புதவை மாநிலத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த ஊர் தற்போது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாக இல்லை. இருப்பினும் ஒரு காலத்தில் அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்துள்ளனர்.



இவர்கள் புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இற்கு செல்லஞ்சேரி தர்கா மற்றும் செல்லஞ்சேரி தைக்கா என்ற இரு பெயர்களில் சமார் 20 ஏக்கர் அளவிலான வக்ஃப் நிலங்கள் உள்ளன. மேலும் செல்லஞ்சேரி பங்களா என்ற பெயரில் ஒட்டு வீடாக உள்ள ஒரு கட்டடமும் மற்றொரு வக்ஃபு சொத்தாக உள்ளது. நிலங்களைப் பொறுத்தவரை சுமார் 16 ஏக்கர் அளவில் நஞ்சையாகவும் 4 ஏக்கர் அளவில் புஞ்சையாகவும் உள்ளன.


இந்த நிலங்கள் முஸ்லிம்கள் பல தலைமுறையாக வாழ்ந்து வந்ததன் அடையாளமாக பரந்து விரிந்த கபர்ஸ்தான் காணப்படுகிறது. மேலும் ஒன்றிரண்டு சமாதிகளும் பச்சைக் கொடிகளும் கூட காணப்படுகின்றன. ஒரு புறம் இப்படி என்றால் மறுபுறம் உள்ள நிலங்கள் விளைநிலங்களாக உள்ளன. 

இந்த நிலம் மோசடிக்கும்பலால் வளைக்கப்பட்ட அந்த தருணத்திலும் இங்கே பயிர் செய்யப்பட்டு வந்துள்ளன. மேலும் பாசனத்திற்கான ஆதாரமாக விளங்கும் கிணறுகள், பாசன வாய்க்கால்கள், மோட்டார் பம்ப்செட் வைக்கும் அறைகள் என விவசாயத்திற்கான