கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சனி, 18 ஜூலை, 2015

நோன்பு பெருநாள் திடல் தொழுகை!அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளை சார்பில் நடைபெற்ற   "நோன்பு பெருநாள்" திடல் தொழுகை!அல்ஹம்துலில்லாஹ்...
வெள்ளி, 17 ஜூலை, 2015

கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிஃத்ரா விநியோகம் -2015

கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பிஃத்ரா  விநியோகம் கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் சிறப்பான முறையில் நடைப்பெற்றது..மேலும் விபரங்கள் விரைவில் செவ்வாய், 23 ஜூன், 2015

ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களுக்கு இறுதி அறிவிப்பு!

கடலூர் : மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் விவரங்கள் அளிக்காதவர்களுக்கு, தேவையான விவரங்களை அளிக்க வசதியாக இறுதி அறிவிப்பு நோட்டீஸ் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

தேர்தல் ஆணையம் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் ஆதார் அட்டை எண், மொபைல் எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படுகிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று விவரங்களை சேகரித்தனர். மேலும், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டசபை தொகுதிகளில் 9 லட்சத்து 48 ஆயிரத்து 314 வாக்காளர்கள் தேவையான விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.இதில், கடந்த 19ம் தேதி வரை, 7 லட்சத்து 56 ஆயிரத்து 551 பேரின் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 763 பேரின் விவரங்கள் படிப்படியாக இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆதார் அட்டை இருந்தும் அதன் விவரம் அளிக்காமல் இடம் பெயர்ந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் ஆதார் எண் விவரங்களை சமர்ப்பிக்க வசதியாக அவர்களுக்கு

வெள்ளி, 19 ஜூன், 2015

கொள்ளுமேடு தவ்ஹீத் மர்கஸ் ரமளான் நிகழ்வுகள்!

கொள்ளுமேடு தவ்ஜீத் பள்ளியில் ரமளானை முன்னிட்டு வழக்கம் போல நோன்பு கஞ்சி, இரவு தொழுகை மற்றும்
தொழுகைக்கு பிறகான சொற்பொழிவுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.


ரமளான் மாதத்தின் சிறப்புகள் !அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:
 "ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898),முஸ்லிம் (1956) 

"ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ (1899 முஸ்லிம் (1957) 

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில்
காணப் படுகின்றன. இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம்.

ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல! "ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன'' என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான். மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும். இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் "ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன'' என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.

"ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்''’என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான். இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். "யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்)

சனி, 9 ஆகஸ்ட், 2014

ஓர் வபாத் செய்தி!

நமதூர் தெற்குத் தெருவில் வசிக்கும் மர்ஹும் ஆம்ஷா அவர்களின் மகனும்,அப்துல்பாரி அவர்களின் மருமகனுமாகிய முஹம்மது அமீன் நேற்று நள்ளிரவு தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு tntj  பிரார்த்தனை செய்கிறது.

செவ்வாய், 29 ஜூலை, 2014

TNTJ கொள்ளுமேடு மர்கசில் பெருநாள் திடல் தொழுகை!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளை தவ்ஹீத் மர்கசில் இந்த ஆண்டிற்கான பெருநாள் தொழுகை சிறப்பான முறையில் நபி வழிபடி மார்க்சின் பின்புறத்திலுள்ள திடலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் வழக்கம்போல் ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.சகோதரர் முஹம்மது ரஜ்வீ  அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

படங்கள்: இமாம் அலி