கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வெள்ளி, 14 அக்டோபர், 2011

விரைவில் வர இருக்கிறது இஸ்லாமியர்களுக்கான செல்போன்

இந்த நவீன காலத்தில் ஒவ்வரு நாளும் ஒவ்வரு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போதைய உலக நடப்புபடி பெரும்பாலான மக்கள் செல்போன் தான் அதிகம் உபயோகித்து வருகிறார்கள். புதிய வசதிகள், புதிய மாடல்களில் செல்போன்களின் உற்பத்திகளும் நாளுக்கு நாள் பெருகி கொண்டுதான் வருகிறது. இவ்வாறு தற்போது ஐ டெல் நிறுவனம் இஸ்லாமியர்களுக்கான செல்போன் ஒன்றை விரைவில் அறிமுகபடுத்த இருக்கிறது.

ஐ டெல் நிறுவனம் அறிமுகபடுத்த இருக்கும் இந்த ஐ டெல்-786 என்ற 2 சிம் பொருந்த கூடிய மாடல் செல்போனில் இஸ்லாமியர்களுக்கு 5 வேலை தொழுகையின் நேரத்தை கொண்டு அலாரம் அடிக்க கூடிய வசதியும், இஸ்லாமியர்களுக்காக தயாரிக்கப்பட்ட காலேண்டர் மற்றும் சாக்கட் காலேண்டர் வசதிகளும், 1.3 பிக்சஸ் கேமரா, சிறப்பான விடியோ ரேக்கார்டிங் வசதிகள், புழு டூத் வசதிகள், பொழுது போக்கு அம்சம் கொண்ட mp3 ,mp4 ,மிடியா பிளேயர் வசதிகளையும் கொண்டது,மேலும் இந்த செல்போனில் பயன்பாட்டிற்கு ஆங்கிலம்,ஹிந்தி,உருது,இந்தோனேசியா,துருக்கி, பெர்ஷியன் போன்ற 11 மொழிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த செல்போன் மூலம் வருகிற வருவாய் மூலம் 2.5 சதவீதம் பங்கு ஏழை இஸ்லாமிய குழந்தைகளுக்கு
பயன்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்க உருவாக்கபட்டிருக்கும் இந்த ஐ டெல்-786 செல்போன் விரைவில் இந்திய சந்தைக்கு வர இருக்கிறது. இதனுடைய விலை ரூபாய் 2,999 ஆகும்.
நன்றி:thiruvai.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக