கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சனி, 9 ஏப்ரல், 2011

தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு!

கடலூர்:பண்ருட்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்தது.

மாவட்டத் தலைவர் அப்துல் ரஜாக் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். நெல்லிக்குப்பம் நகர தலைவர் அப்ரோஸ்தீன், துணைத் தலைவர் அனீஸ்ரஹ்மான், பொருளாளர் சவுக்கத் அலி, மேல்பட்டாம்பாக்கம் செயலர் முகமதுயூனிஸ், பொருளாளர் அப்துல்கபூர் உட்பட பலர் பங்கேற்றனர்.

பண்ருட்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு அவரை வெற்றி பெறச் செய்வது எனவும், 9 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றபட்டன.

நன்றி: தினமலர், புகைப்படம்: டி.என்.டிஜே.pno

முஸ்லிம்களை அடிக்க விளக்கு பிடித்த மம கட்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு மாநில பொதுச்செயலாளர் ரஹம்த்துல்லா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா திமுக கூட்டணியை TNTJ ஆதரிப்பது ஏன் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 9.45 மணியளவில் திடீரென அந்தக் கூட்டத்திற்குள் உருட்டுக்கட்டைகள் மற்றும் கற்களுடன் புகுந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த பெரிய ஸ்பீக்கரை கூட்டத்தினர் மீது பிடித்து தள்ள கூட்டத்தினரிடையேபரபரப்பு ஏற்பட்டது.

என்னவென்று சுதாரிப்பதற்குள் SDPI வேட்பாளர் உமர் தலைமையில் அங்கு வந்த மமகவின் பொருப்பாளர்கள் அங்கிருந்த விளக்குகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நேரத்தில் அதிமுக குண்டர்கள் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரின் வயரைப் பிடிங்கி விட அந்த இடமே இருளில் மூழ்கியது.
மேடைக்கு முன்னாள் திரண்டிருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த கலவர சூழ்நிலையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பெண்களைச் சுற்றி அரணாக நிற்க அவர்கள் மீது பிளாஸ்டிக் சேர்களை தூக்கி அடித்து விட்டு பெண்கள் கூட்டத்திற்குள் நுழைந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த இஸ்லாமிய பெண்களை வெளியே சொல்ல முடியாத கொச்சை வார்த்தைகளால் திட்டி அவர்கள் மீதும் சேர்களைத் தூக்கி அடிக்க பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர்.

ஆனால் மாற்றானின் இந்த வேலைகளையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாத மமக மற்றும் எஸ்டிபிஐ ரவுடிகள் அவனை அடி, இவனை அடி ஒவ்வொருவர் மீதும் செல்போனின் விளக்கைப் பிடித்து காட்ட அவர்கள் காட்டிய ஒவ்வொருவர் மீதும் அதிமுக குண்டர்கள் வெறித்தனமான தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர்.

மேடையில் உள்ளவன்களையும் அடியுங்கள்” என மமகவினருக்கு அதிமுக குண்டர்கள் உத்தரவிட அங்கே திரண்டிருந்த மமக SDPI ரவுடிகள் மேடையை நோக்கி சராமாரியாக கற்களை வீச ஆரம்பிக்க, மேடையின் மீது இருந்த பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா உள்ளிட்ட பல நிர்வாகிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது

ஆனால் என்ன நிகழ்ந்தாலும் மேடையை விட்டு இறங்க மாட்டோம் என உறுதியாக நின்ற நிர்வாகிகள் இரத்தம் சொட்ட சொட்ட மேடையிலேயே நின்றனர்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளி ஜும்ஆ உரை- "ஜனாசாவின் சட்டங்கள்"

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் 08.04.2011அன்று வெள்ளிக்கிழமை ஆயங்குடி அபூ பக்கர் அவர்கள் "ஜனாசாவின் சட்டங்கள்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தன.



 மாறி மாறி வரக்கூடிய திருநாள்: வெள்ளிக்கிழமையின் சிறப்புக்களில் ஒன்றுதான் இந்நாளில் தனித்து நோன்பு நேற்பது  தடுக்கப்பட்டுள்ளது, யூதர்களுக்கும், கிறிஸதவர்களுக்கும் மாற்றமாக நடப்பதற்காக முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை, குறிப்பாக ஒரு அடியான் இந்த நாளில் தொழுவதிலும், பிரார்த்திப்பதிலும், இவை அல்லாத வணக்கங்களிலும் ஈடுபட்டு இறைவனை வழிப்பட வேண்டும்.
 பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நேரம் உள்ள நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கின்றது; அதில் எவரொருவர் இறைவனை தொழுது அவனிடம் பிரார்த்திக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வான் என்று கூறிவிட்டு, அது செற்பமான நேரம் என்று தனது கையினால் சுட்டிக்காட்டினார்கள்.” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
 மறுமை நாள்  நிகழக்கூடிய நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்” (ஆதாரம்: முஸ்லிம்)
செய்தி: அபுல் மல்ஹர்

வியாழன், 7 ஏப்ரல், 2011

ஒரு கடவுள் மரணத்தை நோக்கி!

என்னப்பா இது? தலைப்பே தவறாக இருக்கிறதே! என்று எண்ணி முழுவதுமாக படிக்காமல் விட்டு விடாதீர்கள் முழுவதையும் படித்த பின்பு, உங்களுக்கு சரி என்று பட்டால் இதை பிறருக்கும் அனுப்புங்கள்.

ஆந்திர மா நில புட்டர்பத்தி சாய்பாபவை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் இந்துக்களில் பல பேர் நம்புகின்றனர். படிக்காத பாமர மக்கள் முதல் படித்த பட்டதாரி வரை, ஏழை முதல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பணக்காரன் வரை பல பேர் இவருடைய பக்தர்களாக இருக்கிறார்கள்.

தன்னுடைய பேச்சாற்றல் மூலமாகவும், தந்திர வித்தைகள் மூலமாகவும் பல மக்களை கவர்ந்து தன்னை ஒரு மிகப்பெரிய அவதாரமாக ஆக்கிக்கொண்டவர்தான் இந்த புட்டர்பத்தி சாய்பாபா! சமீபத்தில் தொலைகாட்சியிலும், நாளிதழ்களிலும் ஒரு பரவலான் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதுதான் சாய்பாபாவின் உடல் நிலைப் பற்றி.

சாய்பாபாவிற்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி (ஃபேஸ் மேக்கர்) பொருத்தப்படிருப்பதாகவும், நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை மோசமாகி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கட்டுரையை படிக்கக் கூடியவர்கள் யாராவது இவரை கடவுள் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ நம்புபவர்களாக இருந்தால் பொறுமையாக இந்த கட்டுரையை படிக்கவும். அதன் நன்றாக அமர்ந்து குறைந்தது 5 நிமிடமாவது சிந்தியுங்கள், நிச்சயமாக சத்தியம் உங்களை வந்தடையும்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

பிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்வோம்

நம்மில் சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவரிடம் உதவி கேட்பதும்,ஒரு தேவை என்றால் மாற்று வழியை யோசிக்காமல் உடனடியாக அடுத்தவரிடம் யாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

முகீரா இப்னு ஷுஅபா(ரலி)யின் எழுத்தர் (வர்ராது) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள்" என முஆவியா(ரலி) முகீரா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு முகீரா(ரலி) 'நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது). பொருள்களை வீணாக்குவதும் அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என பதில் எழுதினார்.

புஹாரி 1477

யாசிக்காதவர்களின் சிறப்பு:
தங்கள் மீது மற்றவர்களுக்கு அனுதாபம் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அந்த அனுதாபத்தை வைத்து நிறைய யாசிக்கலாம் என்பதற்காகவே தங்களுடைய உடைகளை கிழித்துக் கொண்டும் தங்களையே வருத்திக் கொண்டும் அலங்கோலமான நிலையில் இருப்பவர்களை நீங்கள் பார்க்கலாம்.

இவர்களை போன்றவர்கள் ஒரு புறம் இருக்க,மறுபுறம் தான் ஏழை என்பதை மறைத்து தன் மீது எவரும் அனுதாபம் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் தன் சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் வெளியில் பார்ப்பவர்களுக்கு தான் ஏழை என்று காட்டிக் கொள்ளாமலும் யாரிடமும் யாசிக்காமலும் அல்லாஹ்விடம் மட்டும் பிரார்த்து உதவி கேட்பவர்களை அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகிறான்.இவர்களையே தேர்ந்தெடுத்து நாம் உதவி செய்ய வேண்டும் என்பதாகவும் அல்லாஹ் தன் திருமறையிலே குறிப்பிடுகிறான்.


(பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அல்குரான் 2:273)