கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திங்கள், 7 மே, 2012

கடலூர் மாவட்டத்தில் கபளீகரம்: வளைக்கப்பட்ட வக்ஃப் நிலங்கள்!



கடலூர்: கடலூர் மாவட்டம் கடலூர் தாலுகாவில் உள்ளது செல்லஞ்சேரி என்ற கிராமம். புதவை மாநிலத்தின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த ஊர் தற்போது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாக இல்லை. இருப்பினும் ஒரு காலத்தில் அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்துள்ளனர்.



இவர்கள் புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இற்கு செல்லஞ்சேரி தர்கா மற்றும் செல்லஞ்சேரி தைக்கா என்ற இரு பெயர்களில் சமார் 20 ஏக்கர் அளவிலான வக்ஃப் நிலங்கள் உள்ளன. மேலும் செல்லஞ்சேரி பங்களா என்ற பெயரில் ஒட்டு வீடாக உள்ள ஒரு கட்டடமும் மற்றொரு வக்ஃபு சொத்தாக உள்ளது. நிலங்களைப் பொறுத்தவரை சுமார் 16 ஏக்கர் அளவில் நஞ்சையாகவும் 4 ஏக்கர் அளவில் புஞ்சையாகவும் உள்ளன.


இந்த நிலங்கள் முஸ்லிம்கள் பல தலைமுறையாக வாழ்ந்து வந்ததன் அடையாளமாக பரந்து விரிந்த கபர்ஸ்தான் காணப்படுகிறது. மேலும் ஒன்றிரண்டு சமாதிகளும் பச்சைக் கொடிகளும் கூட காணப்படுகின்றன. ஒரு புறம் இப்படி என்றால் மறுபுறம் உள்ள நிலங்கள் விளைநிலங்களாக உள்ளன. 

இந்த நிலம் மோசடிக்கும்பலால் வளைக்கப்பட்ட அந்த தருணத்திலும் இங்கே பயிர் செய்யப்பட்டு வந்துள்ளன. மேலும் பாசனத்திற்கான ஆதாரமாக விளங்கும் கிணறுகள், பாசன வாய்க்கால்கள், மோட்டார் பம்ப்செட் வைக்கும் அறைகள் என விவசாயத்திற்கான அணைத்தும் உள்ளன. இதைப்பற்றி இவ்வளவு விரிவாகக் குறிப்பிட காரணம் உள்ளது. ஏனெனில் மேலே நாம் குறிப்பிட்ட எதுவுமே தற்போது இல்லாதவாறு வெறும் மண் தரையாக இருப்பது போன்று சமப்படுத்தியுள்ளனர் சம்பந்தப்பட்ட மோசடி பேர்வழிகள்.


கடந்த 1861 ஆம் ஆண்டில் இச்சொத்துக்கள் வக்ஃபு செய்யப்பட்டதாக ஆவணங்களில் காணப்படுகின்றன. இதன் ஜி.எஸ். எண்கள் 128/SA   மற்றும் 129/SA ஆகியனவாகும். மதம் மற்றும் அறக்கட்டளை சார்ந்த வக்ஃபு நிலம் என்ற பொருள்படும் Religious and Charitable  என்ற வார்த்தைகளுடன் வக்ஃபுவாரிய கெஸட்டிலும் பதிவாகி இருக்கிறது. தவிர இறைபக்தியுள்ள என்ற பொருள்படும் "pious" என்ற சொல்லும் வக்ஃபு வாரிய அட்டவணையில் உள்ளதை நாம் கவனிக்க நேர்ந்தது. மேலும் காண்ட்ரிஃபூஷன் எனப்படும் . வக்ஃபு வாரியத்திற்கான தொகை செலுத்தப்பட்டதற்கும் ஆவணங்கள் உண்டு. 

தனி நபர்களுக்கு தாரை வார்ப்பு:

இந்தச் சொத்துக்கள் தான் இது வக்ஃபு நிரமே இல்லை என்ற போலியான வக்ஃபு சான்றிதழ்கள் பெறப்பட்டு தனிநபருக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. கடந்த 13.12 2011 அன்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்து முடிந்துள்ள இந்த விற்பனை பரிவர்த்தனையானது கடலூர் மாவட்டத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாகச் செல்லஞ்சேரி கிராம மக்கள் அணைவருமே (மதப்பாகுபாடின்றி) இந்த அநியாயத்திற்கு எதிராக கமிறங்கியுள்ளனர். 

இந்த நிலத்தை வாங்கியவர்கள் அதை பிளாட் போட்டு விற்பனை செய்யும் முயற்சியில் இறங்கியபோது கிராமவாசிகள் ஒன்றிணைந்து களமிறங்கி துரத்தி விட்டனர். வீட்டு மனைகளாக மாற்றும் முயற்சியின் தொடக்கமாகத்தான் சமாதிகள் இடிப்பு கொடிமரங்கள் சாய்ப்பு புதைகுழிகள் (கபர்ஸ்தான்) தரா மட்டமாக்குதல் பாசன வாய்க்கால்கள் மற்றும் கிணறுகளை மூடல் பம்பு செட்டு அறைகளை இடித்தல் ஆகிய செயல்களை இரவோடு இரவாக அரங்கேற்றி விட்டு அடுத்த நாள் மனைகளைச் சுற்றி முள்கம்பு வேலிகள் போடலானார்கள். 


நிலத்தின் மறுபகுதியில் மரக்கன்றுகள் வைக்கும் திட்டத்துடன் பள்ளங்களையும் தோண்டிப் போட்டனர்.முத்து மாரியம்மன் நகர் என்ற பெயர்பலகையும் வைக்கப்பட்டது. திரண்டு வந்த கிராம மக்கள்அந்த முள்கம்பி வேலிகளை கூண்டோடு சாய்த்து ரியல் எஸ்டேட் பேர்வழிகளை விரட்டியடித்தனர்.

அப்போது நடந்த கைகலப்பு சம்பந்தமாக ரெட்டிசாவடி காவல்நிலையத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் இக்கிராம மக்களின் இந்தப் போரட்டத்திலிருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்ளாததால் அவர்களுக்கெதிராக செயல்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

தந்திரமாக நடந்த பத்திரப்பதிவு:

கடலூர் மாவட்டத்தில் இந்தப் பத்திரப்பதிவு நடக்காமல் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்தற்கும் காரணங்கள் உண்டு என்கினறனர்உள்ளுர்வாசிகள். இந்த நிலம் வளைக்கப்படலாம் என்ற தகவல்கள் கசியத் தொடங்கியவுடன் கிராமவாசிகள் உஷாராகினர். கடலூர் மாவட்டத்தில் இது தொடர்பான விற்கிரய நடவடிக்கைகள் ஏதும் நடக்கிறதா எனக் கண்காணிக்க தொடங்கினர். மேலும் மாவட்டப் பதிவாளருக்கும் இந்நிலம் வக்ஃபு நிலம் என்ற ஆதாரங்களுடன் கடிதம் தந்து இது சம்பந்தமான கிரயப்பத்திரம் மாவட்டத்தில் பதியப்படும் பட்சத்தில் அதை நிறுத்திவைத்து ஊர் மக்களுக்குத் தகவல் தரும்படியும் கேட்டிருந்தனர்.

இச்செய்தியறிந்த நில மோசடியாளர்கள் தந்திரமாக அண்டை மாவட்டத்தில் இப்பத்திரப்பதிவை அரங்கேற்றியுள்னர். மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள மற்றொரு விற்பனைப் பதிவையும் இதே பத்திரத்தில் இணைத்தால் கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரி வக்ஃபு நிலமும் விற்கிரயம் செய்யப்பட்டது. அவ்வாறு இல்லாதபட்சத்தில் தனியாக செல்லஞ்சேரி நிலம் மட்டும் விற்கிரயம் செய்யப்பட வேண்டும் என்றால் அவர்கள் னடலூர் மாவட்டம்தான் வர வேண்டும். இதனால் நிலம் விற்கப்பட்ட பிறகுதான் இந்த ஊர் மக்களுக்கு தெரிய வந்தது எனலாம்.

இந்த நிலம் தனி நபரால் வளைக்கப்பட்டது என்று சொல்வதை விட தனிநபர்களால்என்று சொல்வது தான் பொருத்தமாகும். ஆம். இந்த விற்பனை விவகாரத்தில் இரு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அப்துல் வஹாப் மற்றும் முகமதலி ஜின்னா ஆகியோரே அவ்விருவராவார். செல்லஞ்சேரி பங்களா எனப்படும் வீடு மற்றும் சமாதிகள் அடங்கிய கப்ரஸ்தான்பகுதி ஆகியவற்றை விழுப்புரம் மாவட்டம் கழுப்பெரும்பாக்கம் என்ற ஊரைச் சேர்ந்த பாரிநாதன் என்பவருக்கு விற்பளைசெய்தவர் அப்துல் வஹாப் ஆவார். 

இந்த விற்பனையின் மதிப்பு பத்திரங்களின்படி ரூ 24லட்சமாகும். இது மொத்த வக்ஃபு நிலத்தின் கிட்டதட்ட முக்கால்வாசியாகும். மீதமுள்ள இடத்தை விற்றவர் முகமதலி ஜின்னா ஆவார் இவர் கடலூர் மாவட்டம் நத்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கு ரூ 5 லட்சத்திற்கு விற்றிருக்கிறார்.இதை வாங்கிய நந்தகுமார் உடனடியாக அதை மற்றொருவருக்கு நல்ல இலாபத்தில் கைமாற்றிவிடுகிறார். இவ்வாறு நிலத்தைப் பெற்றுக் பெருமாள்தான் அதை பிளாட் போடும் முயற்சியில் இறங்கி, அங்கே கல்தூண்கள் மற்றும் முள்வேலி ஆகியவற்றை அமைத்து ஊர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளானவர் ஆவார். அப்துல் வஹாப் மற்றும் முகமதலி ஜின்னா ஆகியோர் இந்த சொத்துக்களின் முத்தவல்லிகள் எனப்படுவோரின் வாரிசுகள் எனக் கூறிக் கொள்கின்றனர்.

வக்ஃபு வேறு – வாரியம் வேறு:

இநத சொத்தானது வக்ஃபு சொத்து அல்ல என்று இவர்கள் சான்றிதழ் பெற்றது ஒரு தனிக் கதையாக சொல்லப்படுகிறது. பொதுவாக வக்ஃபுவாரியத்திற்கு என்று எந்த சொத்துக்களும் கிடையாது. அந்தந்தப்பகுதி மஹல்லாவில் வக்ஃபு செய்யப்பட்ட சொத்துக்களை கண்காணித்து அதற்கான காண்டரிபூஸன் எனப்படும் கட்டணத்தை வசூலிப்பதுதான் வாரியத்தின் பணியாகும்.

இந்த அடிப்படை விஷயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இவர்கள் செல்லஞ்சேரியில் உள்ள அந்த வக்ஃபு நிலம் வாரியத்திற்கு சொந்தமானது அல்ல என சான்றிதழ் பெற்றது தான் தந்திரமான ஒன்றாகும். இந்தச் சான்றிதழை அப்போது வழங்கியவர் எஸ்.ஏ. அப்துர்ரஹ்மான் என்ற வக்ஃபு கண்காணிப்பாளர் ஆவார். கடந்த 07.12.2011 அன்று வழங்கப்பட்ட இந்த சான்றிதழில் குறிப்பிட்ட ஒரு வாக்கியம் அதி முக்கியத்துவம் வாய்ந்தது எனலாம்.

அதாவது சம்பந்தப்பட்ட நிலம் வக்ஃபு வாரியத்தின் சொத்து இல்லை என்ற சொற்பிரயோகம் தான் அது. உண்மையில் அதில் கூறப்பட்டப்படி அச்சொத்து (வக்ஃபு)வாரியத்தின் சொத்து இல்லைதான். (ஆனால் அது வக்ஃபு சொத்துதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை). இந்த சான்றிதழ் வழங்கப்பட்;ட விவகாரத்தில் இன்னொரு அதிர்ச்சித் தகவலும் அடங்கி இருக்கிறது. கிராமமக்கள சம்பந்தப்பட்ட வக்ஃபு கண்காணிப்பாளரை சந்தித்து இது பற்றி கேட்டபோதுஈ அவர் இந்h சான்றிதழில் உள்ளது தனது கையொப்பமே இல்லை என்ற குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

இந்த சான்றிதழைப் பெற்றுக் கொடுத்த அன்வர்தீன் என்ற நபரே இச்சான்றிதழை போலியாகத் தயாரித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த அன்வர்தீன் முன்னாள் வக்ஃபு வாரிய தலைவர் ஹைதர்அலியின் (தமுமுக) உதவியாளராக இருந்தவர். இந்த விற்கிரயம் நடக்க முக்கி ஆவணமாகவும் அதாரமாகவும் இந்த போலி சான்றிதழே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்கின்றனர் கிராம மக்கள்.

நிலத்தை மீட்க களமிறங்கிய கிராமத்தினர்:

இப்பிரச்சினை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் வரை வந்துள்ளது. உள்ளுர் மக்கள் சார்பில் பொதுநல வழக்காக உள்ளது. இந்த வழக்கானது ஊர் மக்கள் சார்பில் அங்குள்ள பள்ளியின் முத்தவல்லியான அன்சாரி என்பவரால் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் கத்தகைதாரராக இருந்த வரும் அப்துல்ரஷீத் என்பவர் இதற்காக சென்னைக்கும் செல்லஞ்சேரிக்கும் அடிக்கடி அலைந்து வருகிறார். மேலும் இந்த பிரச்சினை சம்பந்தமாக சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்திற்கும் இவர் அடிக்கடி வந்து போகம் சூழல் உருவாகி இருக்கிறது. தவிர, இதே ஊரைச் சேர்ந்த துநை என்கிற மாற்றுமதச் சகோதரர் ஒருவர் இப்பரச்சினை பற்றிய அணைத்து விபரங்களையும் தன்னிடம் வைத்துள்ளதால் இவரும் பொதுநல வழக்கு தொடர்பாக தேவைப்படும் உதவிகள் செய்து எப்படியும் இந்நிலங்கள் மீடகப்படவேண்டும் என்பதில் உறதியாக உள்ளனர்.

செல்லங்சேரியில் நாம் சந்தித்த அணைத்து தரப்பினரும் இந்த அநீதிக்கு எதிராக இருப்பதைக் காண முடிந்தது. இருப்பினும் உன்றிரண்டு பேர் நில ஆக்ரமிப்பாளர்களுக்கு ஆதரவாக அவர்கள் தரும் பணத்திற்காக மறைமுகமாக செயல்படலாம் என்பதையும் மறைப்பதற்கில்லை. தங்கள் சார்பில் வாதாட நியமிக்கப்பட்ட வழக்கறிஞரும் தற்போது எதிர் தரப்பினரின் பணத்திற்க விலை போயிருக்கலாம் என்று சந்தேகிக்கும் ஊர்மக்கள் மாற்று வழக்கறிஞரை நியமிக்க முயன்று வருவததான் கடைசியாக நமக்குக் கிடைத்த தகவலாகும்.

மோசடி நிருபணமானால் - மீட்கப்படும் : வக்ஃபு வாரியம்:

மேலும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் மீதே தங்களுக்கு நம்பிக்கையில்லை. அதனால் டெல்லியில் உள்ள மத்திய வக்ஃபு போர்டு வரை இப்பிரச்சினையை எடுத்துச் செல்லும் முயற்சிகளிலும் இவர்கள் இறங்கி வருகிறார்கள். இந்த அபகரிப்பு விவகாரம் முதலில் சிதம்பரத்தில் உள்ள சில பொது நலன் கருதுவோர் மூலம்தான் வெளியே கசிந்தது. இந்த நிலம் போலிச்சான்றிதழ் பெறப்பட்டு விற்கப்பட்டுள்ளது என்பதை ஆவணக்காப்பகத்தின் மூலமும் தகவர் அறியும் சட்டத்தின் மூலமும் கண்டறிவதற்கு உள்ளுர் மக்களும் துனை நின்றனர்.ஆயினும் இந்த விஷயத்தில் மற்றொரு கருத்தும் சிதம்பரம் மக்களிடையே நிலவுகிறது. 

அன்வர்தீன் என்பவருக்கும் பொது நல விரும்பிகளுக்கும் இடையே ஏதோ முன் பகை இருந்ததாகவும் அதனால் தான் இப்பிரச்சினையைத் தோண்டித்துருவி அன்வர்தீன் என்பவர் போலிச்ச சான்றிதழ் பெற்றுத் தந்தார் என்பதை வெளிக்கொணர்ந்தனர் என்பது தான் சிதம்பரம்வாசிகளிடையே உலவும் செய்தியாகும். எது எப்படியாகிலும் நடந்துள்ள சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த விற்கிரயத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதும், இந்த ஊழலுக்கு அன்வர்தீன் பெற்றுத் தந்த அந்த சான்றிதழும் முக்கிய பங்காற்றியிருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை.

இப்பிரச்சினையை நா(மு)ம் சென்னை மண்ணடியில் இருக்கும் தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றோம். ஊநுழு எனப்படும் வாரியத்தின் பிரதான செயல் அலுவலர் அப்துல் ரஷீத் அவர்களை சந்தித்துக் கேட்டபோது இந்த விவகாரம்; எங்களது பார்வைக்கம் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட இந்த விற்கிரயப் பிரச்சினை தற்போது எங்களது விசாரனையில் உள்ளது. இந்த நிலம் முறைகேடாக விற்கப்பட்டதாக நிருபணமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அந்த நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீண்டும் செல்லஞ்சேரியின் வக்ஃபு சொத்துக்களாக நிலைபெற்றிட ஆவன செய்யப்படும் என்றார்.

நான் அவனில்லை – அப்துல் வஹாப் காமெடி:

இந்த சொத்துக்களின் விற்பனையில் பத்திரப்பதிவுகள் முடிந்திருந்தாலும்  இந்த விற்கிரய ஒப்பந்தம் இன்னும் முழுமையாகவில்லை என்ற ரீதியில் தான் வைக்கப்பட்டுள்ளன என்கிறது பதிவுத்துறை வட்டாரங்கள். நிலம் விற்ற இருவர்களில் ஒருவரான முகமதலி ஜின்னா என்பவரை தற்போது தொடர்பு கொள்ள இயலவில்லை. சொத்து ஆவணத்தில் முகம்மதியார் சமாதி என்றிருந்ததை முகமதலி ஜின்னா என்று மாற்றிக் கொண்டவர் இவர் என்கின்றனர் செல்லஞ்சேரிவாசிகள்.

மற்றொருவரான பரங்கிப்பேட்டை அப்துல் வஹாப் என்பவரை நாம் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டபோது போனை எடுத்தவர் அப்துல் வஹாப் வெளியூர் சென்றிருக்கிறார். நான் அவருடைய நண்பர் அப்துல் கரீம் என்றார். நாம் இந்தப் பத்திரப்பதிவு பற்றி தங்களுக்கு ஏதும் தெரியுமா என்றதற்கு எதுவானாலும் அவர் வந்த பின்தான் கேட்க வேண்டும் என்று கூறி செல்பேசியைத் துண்டித்தார். பின்னர் நாம் அப்துல்வஹாபின் சொந்த ஊரான பரங்கிப்பேட்டையில் விசாரித்தபோது இந்த பிரச்சினைக்குப் பிறகு வரும் போன்கால்களை இவ்விதம்தான் இவர் சமாளித்து வருகிறார் என்ற தகவல் கிடைத்தது.

அர்த்தமுள்ள கேள்வி எழுப்பும் செல்லஞ்சேரிவாசிகள்:

இந்த நிலப்பரப்பில் செய்யப்பட்டு வந்த விவசாயத்தால் ஒட்டுமொத்த கிராம மக்களும் பயன் பெற்று வநதுள்ளனர். மேலும், அக்கம்பக்கத்தில் உள்ள பலருக்கு வேலைவாய்ப்பையும் இந்த நிலப்பகுதி தந்து வந்திருக்கிறது. இந்த நிலப்பரப்பை மீட்டெடுக்க உள்ளுர்வாசிகள் ஒட்டுமொத்தமாக கரல் கொடுப்பதற்கு இதுதான் காரணமா என்று நாம் கேட்டபோது ஒரு சிறுபான்மைச் சமுகத்தினரின் பூர்வீக வக்ஃபு சொத்துகளுக்கு தனிநபர் சொத்துக்களாக மாற்றப்படுவதை மனசாட்சியுள்ள தாங்கள் எப்படி ஏற்றுக் கொள்வது என்ற அர்த்தமுள்ள கேள்வியை நம்மீது வீசினா கிராம மக்கள். 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூறிவருவது போல் அந்தந்தப்பகுதி மஹல்லா சொத்துக்களை சம்பந்தப்பட்ட ஜமாஅத்தினரே நிர்வகித்து வந்தால் இதுபோன்ற ஊழல்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏன் எனில் உள்ளுரில் பரம்பரை பரம்பரையாக நிர்வகிக்கப்பட்டு வரும் சொத்துக்களை அவ்வளவு எளிதில் வெளிநபருக்கு (உள்ளுர்வாசிக்கும்தான்) யாரும் மோசடியாக விலை பேசிட இயலாது.

வாரியம் கண்காணிக்கும் என்ற நம்பிக்கையில் வக்ஃபு செய்யப்பட்ட நிலப்பகுதியில் இருப்போர் அசட்டையாக இருப்பதை மோசடிப் பேர்வழிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பலன் பெற்று வருகிறார்கள். ஆகவே வாரியம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் சொத்துக்களை கண்காணிக்கும் காரியத்தில் கோட்டை விடக்கூடாது. இதுவே அணைத்து வக்ஃபு (செயய்ப்பட்ட) நிலப்பகுதியில் இருக்கும் முஸ்லிம்களுக்கும் நாம் சொல்லும் செய்தியாகும்.

களத்தொகுப்பு: D.முத்துராஜா

நன்றி: உணர்வு வார இதழ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக