கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

சேலத்தில் கூடிய மாநிலப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் 11 வது பொதுக் குழு மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
முதலில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் கொள்கையில் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அடுத்ததாக மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்கள். அடுத்ததாக பொருளாளர் சாதிக் அவர்களுக்கு மாநில கணக்குகளை சமர்ப்பித்தார். அடுத்து சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தேர்நிலைபாடு தொடர்பாக விளக்கம் அளித்தார்.

தேர்தல் நிலைபாடு:
1. மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.


இவர்கள் சமுதாயத் தொண்டு செய்யாமல் ஜமாஅத் நிர்வாகிகளையும் தலைவர்களையும் மிரட்டுதல் பள்ளிவாசல் நிர்வாகத்தில் நுழைந்து நிர்வாகத்தை சீரழிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது, அப்பாவிகளின் நிலத்தை அபகரிப்பது, குடும்பப் பஞ்சாயத்து என்ற பெயரில் அராஜகம் செய்வது ஆகிய காரியங்களைச் செய்து முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பைச் சம்பாதித்துள்ளனர். இவர்கள் வளர்வது சமுதாயத்துக்கு கேடாக முடியும் என்பதால் இவர்கள் எந்த அணியில் இருந்தாலும் இவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வது என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

யாருக்கு ஆதரவு ?

2. தேர்தல் கூட்டணிகளும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் இன்னும் வெளிவராத காரணத்தாலும் தேர்தல் நடத்தை விதி இன்னும் நடைமுறைக்கு வராததால் ஆளும் கட்சி முஸ்லிம்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகளை கடைசி நேரத்திலாவது செய்ய வாய்ப்பு இருக்கின்ற காரணத்தாலும் நிலைமை தெளிவானவுடன் மாநில செயற்குழுவைக்கூட்டி யாருக்கு ஆதரவு என்ற முடிவை எடுக்க செயற்குழுவுக்கு அதிகாரம் வழங்குவது என்று இப்பொதுக்குழு ஏகமனதாக தீர்மானிக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக