செப்டம்பர் 11 அன்று குரானை எரிக்க போவதாக சொன்னவர் இப்பாதிரியார்
1. குரான் அதிக விற்பனையானது : அமேசான், உள்ளூர் மற்றும் வெளியூர் கடைகளிலும் இணையம் மூலமாகவும் குரான் அதிக அளவு விற்பனையானது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட குரானை மானுடம் சிந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.
2. வியாபரம் சூடு பிடித்தது : நிறைய குரான்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் விற்பனையானதின் மூலம் இஸ்லாமிய நிறுவனங்களின் உரிமையாளர்களூக்கு நல்ல லாபம் கிடைத்தது.
3. பள்ளிவாயில்களுக்கு அதிகமானோர் வருகை : உங்கள் சர்ச்சையால் இஸ்லாத்தை அறிந்து கொள்ள பள்ளி வாயில்களுக்கு அதிகமானோர் வருகை புரிந்ததின் மூலம் இஸ்லாத்தின் செய்தியை பெற்று கொன்டனர்.
4. இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது : இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.
5. கூகுளில் குரான் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன : நீங்கள் குரானை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குரான் குறித்து தேடுவோரின், இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
6. நூலகங்களில் குரான் காணாமல் போயின : எத்துணை பிரதிகள் வாங்கிய போதும் ஐரோப்பா, கனடா, அமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குரானை அனைவரும் எடுத்து கொண்டு போவதால் குரான் ஸ்டாக் இல்லாமல் போனது.
7. முஸ்லீம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் :மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பிரச்சாரத்தை தங்களின் வெறும் அறிக்கைகள் உண்டாக்கியதால் தஃவாவில் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.
8. முஸ்லீம்கள் உணர்வுகள் தூக்கத்திலிருந்து எழுந்தன : உலகெங்கும் வாழும் முஸ்லீம் சமூகம் உங்களின் உரைக்கு பின் தன் தூக்கத்தை கலைத்து குரானின் செய்தியை அறிந்து கொள்வதில், குரானுடனான தங்கள் உறவை புதுப்பித்து கொள்வதில், குரானின் செய்தியை பிற மக்களுக்கு அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டின.
9. நிறைய மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் : முன்பை காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
10. நீதியை நேசிப்பவர்களை ஒன்றிணைத்தது : இஸ்லாம், கிறிஸ்துவம், யூதர்கள், ஹிந்துக்கள், இறை மறுப்பாளர்கள் என அனைத்து பிரிவிலும் உள்ள நீதியை நேசிப்பவர்களை இக்கொடுமைகளை கண்டித்ததன் மூலம் ஒன்றிணைத்தது.
பாதிரியார் டெர்ரி ஜோன்ஸூக்கு ஒரு வேண்டுகோள் : நீங்கள் எரிக்க நினைத்த அக்குரானை திறந்த மனதோடு படியுங்கள். இயேசுவை பின்பற்றுபவராக இருந்தால் இயேசுவின் மார்க்கமான, நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மது (ஸல்) போன்ற நபிமார்களின் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்.
குரானோடு மோதியவர்கள் ஒன்று குரானால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அழிந்து போயிருக்கின்றார்கள். எது வேண்டும் என்று தீர்மானிப்பதுஉங்கள் கையில் தான் உள்ளது சகோதரரே
திங்கள், 20 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக