கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சனி, 29 டிசம்பர், 2012

காவல் துறை அதிகாரிகளின் அடக்குமுறைகளைக் கண்டித்து சனிக்கிழமை மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் (நேரடி ஒளிபரப்புடன்)



விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும்வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும்நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும்முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகளை  கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும்.
பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.
இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ளயுத்தத்திற்குபதிலடிகொடுக்கும்மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்
29 -12-2012 அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.
 எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நன்றி; தலைமை 

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

நாம் எதனால் இணைந்தோம்! -நாசிர் MISC

 தலைப்பு  இதான்- என் கொள்கை சஹோதர !! சஹோதரிகளே !!! நாம் எதனால் இணைந்தோம் என் கொள்கை சஹோதர !! சஹோதரிகளே !!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு . இன்ஷா அல்லாஹ் ,

வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே!! சகோதரா இது குருதி உறவல்ல. இவ்வுலகோடு முடிந்து போவதற்கு. மாறாக இது இறப்பிற்கு பிறகும் தொடரும் கொள்கை உறவிது. நம்மை பிளவு படுத்தத்தான் எத்தனை எத்தனை சைத்தானின் சதிவலைகள், அவதூறுகள், விமர்சனங்கள். நம்மை பிளவு படுத்துவதன் மூலம் நம் கொள்கையை நசுக்கிவிடலாம் என நாசக்காரன் நினைக்கின்றான்.

 ஆனால் நம்முடைய அழகிய முன்மாதிரி, நம் உயிரினும் மேலான நாயகத்தின் வழிகாட்டல்கள் நம்மோடு இருந்தால் நம்மை யார்தான் பிரித்திட இயலும். இதோ நாயகத்தின் வழிகாட்டல்களில் நம் உள்ளங்களை லயிக்கச் செய்வோம். அதில்தான் நம் எதிர்கால வெற்றி கனியவிருக்கிறது. கொள்கை உறவு ஒரு கட்டிடம். சிறு மழை வெள்ளத்தில் சரியக்கூடிய கட்டிடமல்ல. புயலடித்தாலும் பூமியே நடுங்கினாலும் தளராத கட்டிடம். இதோ நம் கொள்கைத் தலைவர் நாம் எப்படி இருக்கவேண்டும் என்று வழிகாட்டுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் (மூமின்கள்) ஒருவருக்கொருவர் (துணைநிற்கும் விஷயத் தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது. (இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோத்துக் காட்டினார்கள். நூல் : புகாரி (481) 

  நம் கொள்கை உறவு வெறும் பேச்சோடு, புன் சிரிப்போடு முடிந்து விடக்கூடியதல்ல. இது உயிரோடும். உள்ளத்தோடும் கலந்த உறவு. இதோ நம் வழிகாட்டி நன்குரைப்பதைப் பாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டு வதிலும் (உண்மையான) இறைநம்பிக்கை யாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது. அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலி) நூல் : புகாரி(6011) நாம் ஓரிறையையும். இறைத்தூதர் நெறியையும் உண்மையில் பிசகற அறிந்த இறைநம்பிக்கையாளர்கள் என்றால், நம் கொள்கைச் சகோதரனை தன்னைப் போல் பாவிக்க வேண்டும் என நம் தலைவர் நமக்கு வழிகாட்டுவதைப் பாருங்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார். அறிவிப்பவர்: அனஸ் (ரலிரி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி (13)

 இந்த நேசம் என்பது காசிற்காகவோ, சுயஉலக இலாபத்திற்காகவோ ஏற்பட்ட நேசமல்ல. மாறாக கொள்கைச் சகோதரன் என்பதால் ஏற்பட்ட நேசம். எங்கள் இணைவும், பிரிவும் ஏகத்துவத்திற்காகவே, ஏகனுக்காகவே என்பதை பறைசாற்றும் நேசம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, ''எங்கே செல்கிறாய்?'' என்று அந்த வானவர் கேட்டார். அதற்கு அந்த மனிதர், ''இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்'' என்று கூறினார். அதற்கு அவ்வானவர், ''அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?'' என்று கேட்டார்.அதற்கு அம்மனிதர், ''இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்'' என்று கூறினார். அதற்கு அந்த வானவர், ''நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன்

குவைத் கடலூர் மாவட்ட TNTJ நிதி!


குவைத், டிச 16: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் குவைத் வாழ் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மூலம் மாவட்ட மார்க்க வளர்ச்சிக்காகவும், மாவட்ட இணையதளம் அமைப்பதற்கும் குவைத் மண்டல பொருளாளர் அவர்களிடம் கடந்த 14.12.2012 அன்று ரூபாய்.15,000/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!




எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

கூத்தாடிகளின் கொட்டத்தை ஒடுக்குவது எப்படி? 15,000 நோட்டீஸ் விநியோகம்!


கடலூர், டிச 16: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட சார்பாக கூத்தாடிகளின் கொட்டத்தை ஒடுக்குவது  எப்படி? என்ற தலைப்பில் மாவட்ட முழுவதும் அனைத்து கிளைகளிலும் 15,000 நோட்டீஸ் விநியோகம்!




புதன், 12 டிசம்பர், 2012

Facebook மூலம் தஃவா செய்து இஸ்லாத்தை தழுவிய தினகரன்!


கடலூர், டிச 12: கடலூர் மாவட்டம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசித்து வருகிறார் தினகரன் (படத்தில் வையிலட் கலர் சட்டை அனிந்து, கண்ணாடியுடன் அல் குர்ஆன் மற்றும் புத்தங்களை பெறுபவர்) என்ற சகோதரர் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பனி புரிகிறார். இவர் இன்டர்நெட் உபயோகிக்கும் பழக்கம் உடையவர்.


இந்நிலையில் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் தற்கொலை செய்து கொண்டதாக சாதிக் பாஷா அவர்களின் செய்தி பத்திரிக்கையில் வந்ததை பார்த்து தனது Facebook முகநூல் நண்பரான சவூதி அரேபியா ரியாத்தில் பனி புரிந்துவரும் கடலூர் மாவட்டம் ஆயங்குடியை சேர்ந்த சகோ.சபியுல்லாஹ் (AbuUsama) என்பவரிடம் தற்கொலை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? என்ற முதல் கேள்வியை வைக்கின்றார்?


அதற்கு பதில் கூறி மேலும் இஸ்லாத்தை பற்றி கூறி உள்ளார் சகோ.சபியுல்லாஹ்.

அதன் பின் பல்வேறு நாட்களில் இஸ்லாத்தை பற்றிய சகோதரர் தினகரனின் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்களை தொடர்ந்து முகநூல் மூலமே தஃவா செய்து கொண்டிருந்தார் சகோ.சபியுல்லாஹ். 

இந்நிலையில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் கடலூர் நகர செயலாளர் சகோ.ஷாநவாஸ் அவர்களுக்கு போன் செய்து தினகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதாக கூறி இருக்கின்றார் உங்களை நேரில் பார்க்க சொல்லி இருக்கிறேன் என கூறினார். 

அதன் பின் சகோ தினகரன் அவர்களும் நேரில் வந்தார்வந்தவர் நான் தற்போது இருக்கும் மதத்தில் மிகுந்த கடவுள் பக்தி உடையவனாக இருந்தேன். ஆனால் இறை திருப்தியை என்னால் அங்கே உணர முடியவில்லை. ஒரு வருட காலமாகவே மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு முடிவு கட்டி இன்று இஸ்லாத்தை ஏற்க வந்துள்ளேன் என கூறினார். அல்லாஹ் அக்பர்! 

அவருக்கு இஸ்லாம் சம்பந்தமாக TNTJ நிர்வாகிகள் மூலம் மேலும் தஃவா செய்யப்பட்டது. அதன்பின் அவர் அணிந்திருந்த தாயத்து மற்றும் மத சம்பந்தப்பட்ட மோதிரம் ஆகியவைகள் அவரிடமிருந்து அவரின் முழு விருப்பத்தோடு அகற்றப்பட்டது. 

அதன் பின் நேற்று 11.12. 2012 அன்று TNTJ நிர்வாகிகள் முன்னிலையில் அந்த சகோதரர் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே என்றும் 
அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மத் நபி (ஸல் ) அவர்கள் என்றும் தான் உளபூர்வமாக ஏற்றுகொள்வதாக கூறி சத்திய இஸ்லாத்தை ஏற்று கொண்டு அப்துல்லாஹ் வாக (அல்லாஹ்வின் அடிமையாக) மாறினார். 

அல்லாஹு அக்பர்! (எல்லாஹ் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) 

Facebook (முகநூல்) மூலம் பல்வேறு தீமைகள் நடந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் அதே முகநூலை சத்திய இஸ்லாத்திற்கான பிரட்சாரகளமாக ஆக்கி செயல்பட்டால் நிறைய நன்மைகள் அடையலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். 

[இவருக்கு தஃவா செய்த சகோதரர் சபியுல்லாஹ் அவர்களின் சொந்த இடத்தில்தான் ஆயங்குடி TNTJ மர்கஸ் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது]

புகைப்படம் மற்றும் செய்தி: D.முத்துராஜா [கடலூர் மாவட்ட தலைவர்]

நன்றி: 
Facebook / Cuddalore Tntj (கடலூர் மாவட்டம்)

திங்கள், 3 டிசம்பர், 2012

அமீரகவாழ் கடலூர் மாவட்ட முதல் ஒருங்கிணைப்பு கூட்டம்!


துபை டிச 01: அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அமீரக வாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட முதல் ஒருங்கிணைப்பு கூட்டம் 30.11.2012  அன்று துபை மண்டல TNTJ தலைமை மர்கசில் மாலை 4:00 மணியளவில் மண்டல பொருளாளர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

முதலில் தலைமையுராக சகோ.சாஜிதுர் ரஹ்மான்   "ஏன் இந்த ஒருங்கிணைப்பு?"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஒருங்கிணைப்பு அவசியத்தை வலியுறுத்தி பேசினார்கள்.


அதனை தொடர்ந்து வந்துயிருந்தவர்களின் அறிமுகம் நடைப்பெற்றது. இதில் அவரவர்கள் தங்களை சுய அறிமுகப்படுத்தி கொணடனர்.

இதையெடுத்து தாயகத்திலிருந்து அலைப்பேசி மூலம் தலைவர் சகோ.முத்துராஜா, செயலாளர் சகோ.நிசார் அஹமத், பொருளாளர் சகோ.சிராஜ் , துணை செயலாளர்கள் சகோ.சலாம், சகோ.அஷ்ரப் அலி ஆகிய நிர்வாகிகள் மாவட்டதின் நடக்கும் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை பற்றி விளக்கினார்கள்.



பின்பு அமீரகத்திற்க்கான கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.

பொறுப்பாளர் 1 : சகோ.முஹம்மது இஸ்மாயில் 00971 50 52754642 
                                   [பரங்கிப்பேட்டை - துபை] 

பொறுப்பாளர் 2 : சகோ.முஜிபூர் ரஹ்மான் 00971 55 7295202 
                                   [சிதம்பரம் - அபுதாபி -  ஜகாட்]

பொறுப்பாளர் 3: சகோ.ஹாஜா சாதிக் அலி 00971 557294845 
                                    [பரங்கிப்பேட்டை - அபுதாபி]


இதையெடுத்து மண்டல் பொருளாளர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் "பொறுப்பார்களின் பண்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்த்தினார்கள்.


அதனை தொடர்ந்து சகோ.யூசுப் அலி " நாம் ஏன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கின்றோம்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். தன்னுடைய உரையில் தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்க்கும் மற்ற அமைப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கி பேசினார்கள்.


முன்னாள் கடலூர் மாவட்ட பேச்சாளர் சகோ.பாஜுல் ஹீசைன் அவர்கள் தற்போதைய மாவட்டத்தின் நிலவரம் மற்றும் தஃவாவின் அவசியம் ஆகியவற்றை பற்றி பேசினார்கள்.

தீர்மானங்கள்:-
  • கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு எல்லாம் வகையிலும் உறுதுனையாக இருப்பது என தீர்மானிக்கப்பட்டது.
  • கடலூர் மாவட்டத்தை தஃவா மற்றும் சமுதாய பணிகளில் மாநிலத்தில் முதலிடத்தில் கொண்டு வரவேண்டும்.
  • மாவட்டத்தில் இரத்தானத்திற்க்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி இரத்தான முகாம் நடத்துவது.
  • கடலூர் மாவட்டம் புவனகிரியில் புதிய கிளையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்தை கோருவது.
  • மாவட்டத்தில் கத்னா முகாம் நடத்துவது.
  • அமீரகவாழ் ஒருங்கிணைப்பிற்கு அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது.
  • இன்ஷாஅல்லாஹ் அடுத்த கூட்டம் வருகின்ற 25.01.2013 அன்று நடைப்பெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அல்லாஹ் அக்பர்!

கூட்டத்தின் நிறைவாக கடலூர்

சனி, 1 டிசம்பர், 2012

இன்று முதல் காட்டுமன்னார் குடியில் 144 தடை உத்தரவு!

இன்று முதல் காட்டுமன்னார் குடியில் 144 தடை உத்தரவு! கடலூர் ஆட்சியர் அறிவிப்பு. மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் நடவடிக்கை.கடந்த சில தினங்களாக இரு பிரிவினர்களுக்கிடையே மோதல்கள் இருந்துவருவதை தொடர்ந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.