கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 18 ஜூலை, 2012

தவ்ஹீத்வாதிகளே எச்சரிக்கை!!

  அன்பார்ந்த கொள்கை சகோதரர்களே...கடந்த முப்பது வருடங்களாக நம் உயரிலும் மேலான இந்த தவ்ஹீத் கொள்கையை பட்டி தொட்டி எங்கும் பிரச்சாரம் செய்துவருகின்றோம். அசத்தியம் கொண்டு ஆன்மீகம் வளர்த்துக்கொண்டு இருந்த நம் தமிழ் நாட்டிலே சத்தியத்தை சத்தம் போட்டு சொல்லி சாமானிய மக்களின் சிந்தனைகளை சீவிவிட்டோம்!!!கடந்த முப்பது வருடங்களாக நம்மை கொள்கையளவிலே வெற்றிகொள்ள முடியாத சில பேர் நம்மீது பல்வேறு அவதூறுகளை கிளப்பிவிட்டு மக்களை திசைதிருப்பிவிடலாம் என்ற எண்ணத்திலே செயல்பட்டு வந்துள்ளனர்.

  நம்மை சத்திய பிரச்சாரம் செய்யவிடாமல் அவர்களின் அபத்தமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வைத்து  நம்மை திசை திருப்பும் சதித்திட்டம் தான் இது என்று என்ன தோன்றுகிறது,  இதை அறிந்து நாமும் அவர்களின் வலையில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது தவ்ஹீத் எதிப்பு பிரசாரங்கள் தனி நபர்களை குறிவைத்து நடத்தபடுகின்றது.இவர்களின் நோக்கம் எல்லாம் நாம் எந்த நோக்கத்திற்காக அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தந்த வழிகளிலே செல்கின்றோமோ அதிலிருந்து நம்மை திசை திருப்பிவிடுவதுதான் ,அம்முயற்சியிலும் அவர்கள் சிறிதளவு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள் என்று தான் என்ன தோன்றுகிறது ஏனென்றால் நம் மீது அவர்கள் எந்த அளவிற்கு அவதூறு பரப்புகிறார்களோ அதையும் மிஞ்சும் அளவிற்கு நம்முடைய சில சகோதரர்களின் செயலை முகநூலிலே(Face Book) காணமுடிகிறது.

அவர்கள் நம்முடைய தலைவர்களின் புகைபடங்களை அசிங்கபடுத்தி செய்தி வெளியிடுகிறார்கள் என்பதற்காக நாமும் அவர்களைப் போல் செயல்படுவது என்பது தவ்ஹீத்வாதிகளின் செயல் அல்ல.மாறாக அவர்கள் நம்மை அசிங்கபடுத்தும் போது அவர்களின் மீது நமக்கு அனுதாபம் தான் வரவேண்டுமே தவிர ஆத்திரம் அல்ல!அவர்கள் தாங்களாக அதை செய்யவில்லை அவர்களின் கொள்கையிலே ஏற்பட்டுள்ள குறைபாடுதான் காரணமாக அமைகிறது .தயவு செய்து தவ்ஹீத்வாதிகள் இதுபோன்ற அபத்தமான செயல்களை தவிர்ப்போம்.நம் சிந்தனைகள் அனைத்தும் ஏகதுவமாய் இருக்கட்டும் செயல்கள் அனைத்தும் ஏகதுவவாதியாய் அமையட்டும்.

நாம் எந்த பிரச்சினைகளையும் சந்திக்கவில்லை என்றால் தவறான பாதையில் இருக்கின்றோம் என்றாகிவிடும் ஏனென்றால் சத்தியத்தை சொல்கின்றபோது பிரச்சினைகள் அவதூறுகள் வரத்தான் செய்யும் அந்த வகையில் பார்த்தால் இன்று நம்முடைய கொள்கைக்கு எதிராக பல்வேறு வசைபாடல்கள் அரங்கேரிதான் வருகிறது என்பதை நினைக்கும்போது நாம் சரியான் திசையில்தான் செல்கின்றோம் என்பதை விளங்கிகொள்ள முடிகிறது நம்மை எதிர்பவர்கள் அனைவரும் எதோ ஒருவகையில் இந்த ஏகத்துவ கொள்கையால் பாதிக்கபட்டவர்கலாகதான் இருக்க முடியும்! முழு நேர ஏகத்துவ பிரச்சாரத்தில் இருந்து நம்மை திசைதிருப்பும் அவர்களின் முயற்சிகளை முறியடிப்போம்.அவதூறுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிப்பதிலேயே நேரத்தை வீணாக்காமல் மலிந்துகிடக்கும் நூதன மூடநம்பிக்கைகளையும் இனைவைப்புகளையும் வேரறுப்போம் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தந்த வழிமுறையில்.

அன்பானவர்களே கண்ணியம் பொருந்திய அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: மனிதனை படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.(அல்குர்ஆன் 50:16-18)இப்படிப்பட்ட கூர்மையான ஆற்றல் நிறைந்த நிர்வாகியான அல்லாஹ்விடத்தில் முறையிடுவோம், நம்முடைய நன்மைகளை பாழாக்கி விடும் செயல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வோம்.

 உலக ஆதாயத்தை எதிர்பாராமல் அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூய வடிவில் சொல்லும்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவிகளும் நன்மைகளும் வந்துக்கொண்டே இருக்கும் அவன் ஒருபோதும் கைவிடுவதே இல்லை. 

வஸ்ஸலாம்
அபூ தஃப்ஹீம் கொள்ளுமேடு

ஞாயிறு, 15 ஜூலை, 2012

ரமளானை வரவேற்போம்...!



மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...

இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)

மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37

கோடையின் கடுமை நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வருட ரமலானை இன்ஷாஅல்லாஹ் சந்திக்க இருக்கிறோம்.இடைநிலை,கடைநிலை ஊழியர்கள் எல்லாம் ஒருவித தவிப்போடு ரமளானின் நோன்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதை பரவலாக நாம் பார்த்து வருகிறோம்.காலத்தைப் படைத்து அதன் சுழற்சியை தன் கையில் வைத்திருக்கும் கருணையாளனாகிய அல்லாஹ் இந்த கடின கோடையை சந்திக்கும் ஆற்றலையும் இன்ஷா அல்லாஹ் நமக்கு வழங்குவான்.உணவுகள் மட்டுமல்லாது,நம் உள்ளத்திற்கும் வழங்கும் திடமும் ஆற்றலுமே நோன்பை நிறைவு செய்ய உதவுகிறது.எனவே சகோதர,சகோதரிகள் தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு பயந்து அலட்சியங்களுக்கோ, பலவீனங்களுக்கோ இடம் தந்துவிட வேண்டாம்...!

ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுத்தரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமளான்.இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க  திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் ரமளான்.

உள்ளும் புறமும் எந்தவொரு அடையாளத்தைக் கொண்டும், நம்மால் இனங்காண முடியாமல் உணர்வுகளாலேயே இறைக்கருணையின் பக்கம் அடியார்களை இழுத்துச் செல்லும் அற்புத வணக்கமே நோன்பு.

அது பிற நாட்களில் நோற்பதை விட குறிப்பிட்ட இம்மாதத்தில் நோற்பது இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் கடமையும் ஏக இறைவனுக்குப் பிரியமான அம்சமும் ஆகும். 

இறையச்சம் இல்லாத அமல்கள் எதற்கும் பயனளிக்காத விழலுக்கு நீர் இறைப்பது போன்றதாகும். ஒட்டு மொத்த வாழ்வையும் இறையச்சத்திற்கு அப்பாற்பட்டு தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ரமளானின் நோன்பு இறையச்சத்தை புனரமைத்துக் கொள்ள உதவும் கண்ணியமிக்க கருவியாகும்.

தீங்கான எண்ணங்களும், மனோ இச்சைகளும் மனிதர்களை -  அது ஆணாயினும், பெண்ணாயினும் -  ஆட்டிப் படைக்கிறது. ஈமானுக்கு ஏற்படும் மிகப் பெரும் நோவினை இதுதான். ஈமானுக்கு நோவினை என்றால
மனிதன் பிற வளங்கள் என்னதான் பெற்றிருந்தாலும் பயனற்ற வாழ்வுக்கு தான் பலியாகி விடுவான்.

நமக்குள் இருந்து கொண்டே நம் வாழ்வை வேரறுக்கும் தீய ஊசலாட்டத்தின் ஆணிவேரை அடையாளம் கண்டு அறுத்தெறியும் ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு. 

மகத்தான இரட்சகனின் நேசமும், மறுமையில் நற்பயனும் பெற்றிட வழிகாட்டும் வசந்தமே ரமளான் மாதம்! 

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்:  
நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183)

இந்த நோன்பை அல்லாஹ் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயத்திற்கும் கடமையாக்கி

செவ்வாய், 10 ஜூலை, 2012

கடலூர் மாவட்ட TNTJ செயற்குழு!


சிதம்பரம், ஜுலை 10: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 08. 0 7 .2012 அன்று சிதம்பரம் TNTJ மர்கசில் மாவட்ட தலைவர் D.முத்துராஜா தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலிருந்தும் திரளான செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்வத்தோடு வந்திருந்தனர்.

காலை 10 . 30 மணியளவில் தொடங்கிய இந்த செயற்குழுவின் தொடக்கத்தில் "அழைப்பு பனியின் அவசியங்கள் " என்ற தலைப்பில் மெளலவி.அப்துல் மஜீத் உமரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.


பின்னர் அனைத்து கிளை நிர்வாகிகளும் தலா இரண்டு நிமிடங்கள் செயல்பாடுகள் குறித்து பேசினார்கள்.

இதனை தொடர்ந்து  மாநில மாணவரணி சகோ.சித்திக் அவர்கள் மற்ற அமைப்புகளுக்கும் TNTJ விற்கும் உள்ள வித்தியாசங்களை விளக்கினார்.


தொழுகைக்கும் , உணவிற்கும் இடைவெளிவிட்டு மதியம்  இரண்டு  மணிக்கு தொடங்கிய இரண்டாம் அமர்வின் முதலில் ”முஸ்லிம்கள் மத்தியில் கிறிஸ்த்துவத்தை  எப்படியெல்லாம் கிறிஸ்த்துவர்கள் விதைக்கிறார்கள் அதை எப்படி முஸ்லிம்கள் முறியடிக்க  வேண்டும் என்று மிக தெளிவாக

புதன், 4 ஜூலை, 2012

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  நமதூர் தவ்ஹீத் பள்ளியில் நேற்று மாலை 3 மணிமுதல் 4 மணிவரை மாதாந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.லால்பேட்டை தவ்ஹீத் பள்ளி இமாம் ஹாபிழ் முபாரக் அவர்கள் நரக வேதனை ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .இதில் அதிக அளவில் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்....  

அலை அலையாய் சத்தியத்தை நோக்கி…….


  கிருத்தவ மிஷினரிகளைப் போல திட்டமிட்ட பிரசாரம் எதுவும் இல்லை. எந்த இலவசங்களும் வழங்கப்படுவதில்லை. சவுதி அரேபியாவிலிருந்தோ அல்லது மற்ற எந்த வளைகுடா நாடுகளிலிருந்தோ பண உதவி பெறுவதில்லை. நாடு முழுக்க இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிரசாரம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. சில இந்துத்வ வாதிகள் கோவில்களிலும் பொது இடங்களிலும் மசூதிகளிலும் குண்டுகளை வைத்து விட்டு அதற்கு கச்சிதமாக முஸ்லிம்களையே கைது செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்க இஸ்ரேலிய நாசகார திட்டங்களால் உலகம் முழுக்க இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற பிரசாரம் ஊடகங்களால் பரப்பப்படுகிறது. இந்தியாவில் அரசு நலத் திட்டங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அரசு வேலை வாய்ப்புகளிலும் திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு சிறந்த எதிர்காலம் இந்தியாவில் இருக்க முடியாது என்ற எண்ணமே பலரது எண்ணமாக இருக்கிறது.

இவ்வளவு இடர்பாடுகள் இருந்தும் அத்தனையையும் தூரமாக்கி இன்று சத்திய இஸ்லாத்தை ஏற்று வந்திருக்கும் இந்த புதிய முகங்களை இருகரம் நீட்டி அரவணைப்போம். நம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்போம். பூர்வீக சொந்தங்கள் இவர்களை ஏசுவார்கள்: தூற்றுவார்கள்: அத்தனையையும் எதிர் நோக்கியே இன்று புதிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களை நம்முடைய உடன்பிறப்புகளாக நினைக்க வேண்டும். திருமண உறவுகளை அவர்களோடு ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமூட்ட வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகளை செல்வந்தர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தையல் மிஷின், ஆட்டோ ரிக்ஷா, வட்டியில்லாத கடன் என்று அனைத்து தரப்பு உதவிகளையும் அந்த மக்களை நோக்கி திருப்பி விட வேண்டும்.

படித்து விட்டால் தீண்டாமையும் சாதி வெறியும் தணிந்து விடும் என்று நினைத்திருந்தோம். ஆனால் முன்பு இருந்ததை விட சாதி வெறி படித்தவர்களிடம்தான் அதிகம் இருப்பதை இணைய விவாதங்களில் பார்த்து வருகிறோம். எனவே ஆரியர்களால் புகுத்தப்பட்ட இந்த வர்ணாசிரம முறையை தகர்க்கும் ஒரே வழி: மிக இலகுவான வழி: வன்முறையற்ற வழி: இஸ்லாம்தான் என்றால் மிகையாகாது.

இந்த கணக்கெடுப்பு கடந்த ஒரு மாதத்தியது. அதிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இஸ்லாத்தை தழுவியவர்களின் கணக்கெடுப்பு இது. கணக்கில் வராமல் மற்ற அமைப்புகள் மூலமும் அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். தவ்ஹீத் ஜமாத் மூலம் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளதால் தர்ஹா வணக்கம், தாயத்து, பல தெய்வ வணக்கம், தீண்டாமை என்று மூடப் பழக்கங்களை விட்டும் தூரமாக்கப்படுவர். ஒரு வருடம் இஸ்லாமிய கல்லூரியில் சேர்க்கப்பட்டு இஸ்லாத்தின் அடிப்படையையும் தொழிற் கல்வியையும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுவர். கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து ஏக இறைவனை வணங்கி மூடப்பழக்கங்களை தூரமாக்கி சிறந்த முஸ்லிம்களாக இவர்கள் வாழ வாழ்த்துவோம். நம் தமிழகத்தின் தீராத தலைவலியாய் இருக்கும் தீண்டாமை எனும் அரக்கனை ஒழிக்கும் இது போன்ற முயற்சிகளுக்கு நம்மால் ஆன ஆதரவை தருவோம். திரு மூலர் அருளிய திருமந்திரம் கூறும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் மூதாதையர் மார்க்கத்தை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் இவர்களை அன்போடு அரவணைப்போம்.
-----------------------------------------------------------------------------------
1.




1.வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் கடந்த 5-6-2012 அன்று Phd படித்த கல்லூரி பேராசிரியர் விவேகானந்தம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்கள். இவர் குர்ஆனை நன்கு ஆராய்ந்த பிறகு இஸ்லாத்தை ஏற்றுள்ளது குறிப்பிடதக்கது.

-----------------------------------------------------------------------------------
2.

திங்கள், 2 ஜூலை, 2012

உழு இல்லாமல் குர்ஆனைத் தொடலாமா?

கேள்வி : அஸ்ஸலாமு அழைக்கும் !!!ஒழு இல்லாமல் குரான் ஐ தொடலாமா? மாதவிடாய் சமயத்தில் உதிரப்போக்கு நிற்காத போது மூன்று நாட்கள் கழித்து குரான் ஐ தொடுவதும் ஓதுவதும் கூடுமா ? ஹதீஸ் ஆதாரங்களோடு கூறவும் . Mubashareena S. – India 

 பதில் : உழு இல்லாமலும், மாதவிடாய் காலத்திலும் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற சிலர் வாதிடுகிறார்கள் அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தின் உண்மைத் தன்மையை நாம் ஆய்வு செய்தால் அவர்களின் வாதம் தவறானது என்பதையும், உழு இல்லாமலும், மாதவிடாய் நேரத்திலும் திருமறைக் குர்ஆனைத் தொடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். குர்ஆனைத் தூய்மையின்றித் தொடக்கூடாது என்று வாதிடுபவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்குறிய பதில்களைப் பார்ப்போம். 


 தூய்மையில்லாதவர்கள் திருமறைக் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிடுபவர்கள் உமர் (ரலி) அவர்கள் தொடர்பான ஒரு தகவலை ஆதாரமாக் காட்டுகிறார்கள். முதல் வாதமும், பதிலும். உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரியிடம் குர்ஆனின் வசனங்கள் எழுதப்பட்ட ஏட்டைக் கேட்ட நேரத்தில் அவருடைய சகோதரி அவர்களை நோக்கி, "நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது'' என்று கூறினார்கள். (முஸ்னத் பஸ்ஸார் – 279) முதலாவது இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது ஏன் என்றால் மேற்கண்ட செய்தி நபியவர்கள் கூறியதாகவோ, அல்லது நபியவர்களின் நடைமுறையாகவோ அறிவிக்கப்படவில்லை. மாறாக உமர் (ரலி) அவர்களின் சகோதரியின் கூற்றாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இதனை ஆதாரமாகக் ஏற்றுக் கொள்ள முடியாது. இரண்டாவது விஷயம் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெரும் உஸாமத் பின் ஸைத் என்பவர் பலவீனமானவர் என்று இமாம் ஹைஸமீ குறிப்பிடுகின்றார். (மஜ்மவுஸ் ஸவாயித்) பைஹகியில் இதே ஹதீஸ் இடம் பெற்றுள்ளது அதில் இடம் பெரும் காஸிம் பின் உஸ்மான் அல்பஸரி என்பவர் பலவீனமானவர் என்றும் இவருடைய ஹதீஸ்கள் பின்பற்ற ஏற்றமானது அல்ல என்றும் ஹதீஸ் கலை மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (லிஸானுல் மீஸான்) 


 இரண்டாவது வாதமும், பதிலும். அடுத்ததாக திருமறைக் குர்ஆனின் 56வது அத்தியாயத்தின் 79வது வசனத்தை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். (அல்குர்ஆன் - 56 : 79) இந்த வசனத்தைத் தான் வலுவான ஆதாரமாக இவர்கள் காட்டுகிறார்கள் இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது குர்ஆனை உலு இல்லாதவர்களும் மாதவிடாய் பெண்களும் திருமறைக் குர்ஆனைத் தொடக்கூடாது என்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்தினாலும், இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களையும், இது போல் அமைந்த மற்ற வசனங்களையும் நாம் ஆராய்கின்ற நேரத்தில் இவர்களின் வாதம் தவறானது என்பதை தெளிவாக அறியக்கிடைக்கிறது. மேற்கண்ட வசனத்தில் இடம் பெற்றுள்ள தூய்மையானவர்கள் யார் என்பதையும், அதைத் தொடமாட்டார்கள் என்பது எதைப்பற்றியது என்பதையும் முதலில் அறிந்து கொள்வோம்.


 முதலாவது விஷயம் நபியவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருமறைக் குர்ஆன் புத்தக வடிவில் அவர்களுக்கு இறக்கப்படவில்லை. மாறாக ஒலி வடிவில்தான் இறக்கப்பட்டது. திருமறைக் குர்ஆன் இறங்கும் போது நபி (ஸல்) அவர்கள் அதனை மனப்பாடம் செய்து கொள்வார்கள். ஒலி வடிவில் திருமறைக் குர்ஆன் இறக்கப்பட்டிருக்கும் போது அதனைத் தொடுதல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லாமல் போகிறது. புத்தக வடிவில் அல்லது தொடும் விதத்தில் அல்லாஹ் திருக்குர்ஆனை இறக்கியிருந்தால் மட்டுமே தொடுதல் என்ற