கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திங்கள், 30 ஏப்ரல், 2012

மரணத்திற்கு பின்னும் நன்மைகள்!


பிரபஞ்சத்தின் படைப்பாளானாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:  

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே! பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ( அல்குர்ஆன்: 29:57)

 மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் மரணித்தே தீர வேண்டும். மரணத்திலிருந்து தப்பித்தவர்கள் யாருமில்லை. இன்று மற்றவர்கள் மரணித்தால் நாளையோ அல்லது நாளை மறுநாளோ நாம் மரணிக்கப் போகிறோம்...
.

அந்த மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்மையெல்லாம் படைத்த இறைவன் இயம்புகின்றான். அதனால் தான் மரணித்தப் பின் நீங்கள் அனைவரும் என்னிடமே கொண்டு வரப்படுவீர்கள் என்று தன்னுடைய திருமறையின் மூலமாக கூறுகின்றான். 

அதுமட்டுமின்றி இவ்வுலக வாழ்வையும் மரணத்தையும் இவ்வாறு கூறுகின்றான்:
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன். மன்னிப்பவன். (அல்குர்ஆன் 67 : 2) 

நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.    (அல்குர்ஆன் 31 : 22)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும். 1.நிலையான தர்மம் 2.பயனுள்ள கல்வி 3.இறைவனிடம் பிரார்த்திக்கும் குழந்தைகள். (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம்)

ஒரு இலக்கை நோக்கி மனித இனம் பயணித்துக் கொண்டிருக்கிறது. மனித இனம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அந்த இலக்கை அது அடைந்தே தீரும். அவ்விலக்கை சில லட்சியங்களுடன் வாழ்ந்து சென்றடைந்தால் மனித இனம் மாண்பு பெறும். அந்த லட்சியங்களையும் தன்னைப் படைத்த இறைவனும் அவனின் திருத்தூதரும் காட்டிய வழியில் அமைத்துக் கொள்ளுமேயானால் நிலையான பலா பலன்களை மனித இனம் தனது இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்ளும். இல்லையெனில் தலைக்குனிவே! அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

இறைவனோடு மனித இனத்துக்குள்ள பந்தம் சில தினங்களுக்கு மட்டுமல்ல. குறிப்பிட்ட நேரத்தோடு

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

இஸ்லாமிய குடும்பவியல் மாவட்ட மாநாடு ஏன்?



நோட்டிசை பெரிதாக பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

அர்த்தமுள்ள இஸ்லாம் - PJ

மனிதனை மறந்து விட்டு கடவுளை நினைத்தல் 

மதங்கள் அர்த்தமற்றவை' என்று விமர்சனம் செய்யும் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் 'மதங்கள் கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்கின்றன' என்பதாகும். அன்றாடம் உண்பதற்கு உணவில்லாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் போது கோவில் உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் போடப்படுகின்றன. ஒரு மூக்குத்திக்குக் கூட வழியில்லாத ஏழைப் பெண்கள் கோடிக் கணக்கில் இருக்கும் போது சிலைகளும், கலசங்களும், தேர்களும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. செல்வந்தர்கள் இதற்காக வாரி வழங்குகின்றனர். தேவையுள்ள மனிதர்களுக்குச் செலவிடாமல் எந்தத் தேவையுமற்ற கடவுளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப் படும் மனித நேயமற்ற காரியங்களைப் பார்க்கும் சிந்தனையாளர்கள் 'மதங்கள் அர்த்தமற்றவை' என்று கருதுகின்றனர். இஸ்லாத்தைப் பொருத்த வரை இந்த விமர்சனமும் பொருந்தாது.

  ஏனெனில் இது போன்ற காரியங்களையும் இஸ்லாம் மறுக்கிறது. கடவுளுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்கள் இரு வகைகளாக இஸ்லாத்தில் வகைப்படுத்தப் பட்டுள்ளன. ஒன்று உடலால் செய்வது. மற்றொன்று பொருளாதாரத்தால் செய்வது. தொழுகை, நோன்பு போன்றவை உடலால் செய்யப்படும் வணக்கங்களாகும். உடலால் செய்யும் வணக்கங்களை இறைவனுக்காக மட்டுமே செய்ய வேண்டும். வேறு எவருக்காகவும் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள்' என்ற விமர்சனம் இதில் எழாது. பொருளாதாரத்தைச் செலவிடுவதில் தான் மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனம் எழும்.

  இது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? மனிதர்கள் நோய் வாய்ப்படுகிறார்கள். வறுமையில் உழல்கிறார்கள். மன நிம்மதியை இழக்கிறார்கள். குழந்தைச் செல்வம் கிடைக்காமல் கவலைப்படுகிறார்கள். இது போன்ற துன்பங்களைச் சந்திக்கும் போது 'கடவுளே எனக்கு இந்தக் குறையை நிவர்த்தி செய்தால் நான் உணக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவிடுகிறேன்' என்பது போல் மனிதர்கள் நேமிதம் (நேர்ச்சை) செய்து கொள்கிறார்கள். அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறினால் எந்தக் கடவுளுக்கு நேர்ச்சை செய்தார்களோ அவரது ஆலயத்தில் அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர். துன்பத்திலிருப்பவன் இறைவனுக்காக இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாமும் அனுமதிக்கின்றது. ஆனால் இறைவனுக்காக பொருளாதாரம் குறித்த எந்த நேர்ச்சையைச் செய்தாலும் அவற்றைப் பள்ளிவாசல் உண்டியலில் போடக் கூடாது. மாறாக ஏழைகளுக்குத் தான் செலவிட வேண்டும். கடவுளே உனக்காகப் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்கிறேன்' என்று ஒருவர் முடிவு செய்தால் ஏழைகளின் உணவு, உடை, மருத்துவச் செலவு போன்றவற்றுக்காகத் தான் அதைச் செலவிட வேண்டும். கடவுளுக்காக நேர்ச்சை செய்த பணத்தில் பள்ளிவாசல் கட்டுவதோ, பள்ளிவாசலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதோ கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை.

 சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பது போல் 'கடவுளின் பெயரால் எந்தப் பொருளாதாரத்தையும் செலவிடாதே' என்று ஒருவனிடம் கூறினால், அதை ஏழைக்குத் தான் அவன் செலவிடுவான்

திங்கள், 16 ஏப்ரல், 2012

இந்து சகோதரர்களும் கலந்து கொண்ட TNTJ ஆர்பாட்டம்!

சிதம்பரம், ஏப்ரல் 15: கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்குடி தலுக்கா - மானியம் ஆடூர் ஊராட்சி தலைவர் ”சிவானந்தம்” தன்னுடைய ஏராளமான ஆதரவாளர்களுடன் 14.04.2012 அன்று நடத்திய TNTJ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். 

 அப்போது அவர் உணர்வு - விற்கு அளித்துள்ள பேட்டியில்: இந்து முஸ்லிம் சகோதர சகோதரிகளாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் இந்த ஒற்றுமையை பிடிக்காத சங்பரிவார கூட்டம் ஏற்படுத்தும் குழப்பம்தான் இது. முஸ்லிம்களுக்கு சிதம்பரம்- லால்புரம் MRV நகரில் மதரஸா கட்ட அரசு அனுமதித்தே ஆகவேண்டும். இல்லையேல் இந்த அநியாயத்தை எதிர்த்து நாங்களும் ஆர்பாட்டம் செய்வோம் என கூறினார். எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே!!!

சிதம்பரம் ஆர்பாட்டம்: பத்திரிக்கை செய்தி!


                                          -தினகரன் 


                                                                      தினமலர் 

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

அநீதிக்கு எதிராக ஆர்பரித்த மக்கள் வெள்ளம்!

சிதம்பரம், ஏப்ரல் 14: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக சிதம்பரம் அருகே லால்புரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் மற்று மதரஸா கட்ட அனுமதி மறுத்து வரும் கடலூர் மாவட்ட காவல்துறை, வருவாய்த் துறை சங்பரிவார கும்பலை கண்டித்து 14.04.2012 அன்று சிதம்பரம் பேருந்து நிலையம் காந்திசிலை அருகில் "மாபெரும் முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமை மீட்பு போராட்டம்" மாவட்ட தலைவர் சகோ.முத்துராஜா தலைமையில் நடைப்பெற்றது.

 இதில் மாநில பொதுச் செயலாளர் கோவை.ரஹ்ம்மதுல்லாஹ் கலந்து கொண்டு கண்டன் உரையாற்றினர். அவர் தனது உரையில் சம்மந்தப்பட்ட இடத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரஸா கட்ட உடனே அனுமதி அளிக்கவில்லை எனில் தமிழகமே ஸ்தபிக்கும் அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டதை தொடரும் என்று தெரிவித்தார் என்றதும் போராட்ட களத்தில் அல்லாஹ் அக்பர் என்ற ஒலி வின்முட்ட ஒளித்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாவட்டத்தின் அனைத்து கிளைலிருந்தும் சுமார் இரண்டு ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் ஆலயத்தை எழுப்ப ஆர்பரித்தனர். பாதுகாப்பிற்காக ஏரளமான போலீசார் குவிக்கபட்டுயிருந்தனர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தினதந்தி பத்திரிக்கையில் போட்டோவுடனும் மற்றும் ஆர்பாட்டம் பற்றிய செய்திகள் அணைத்து முக்கிய பத்திரிக்கையிலும் செய்தியாக வந்துள்ளது , சில TV செய்திகளிலும் செய்தியாக வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

 பிரச்சனை சுன்னத்ஜமாத் மதரசா பற்றியதாக இருந்தாலும் அது முஸ்லிம்களின் உரிமை அதை பறிக்க அரசாங்கத்திற்கு கூட உரிமை இல்லை என்ற அடிப்படையில் TNTJ நடத்திய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சுன்னத் ஜமாத்தினர் அனைவரும் பாராட்டினர்.

 TNTJ தலைமையில் நடந்த இந்த வழிபாட்டு உரிமை மீட்பு ஆர்பாட்டத்தில் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் மற்றும் பல பள்ளிவாசல் இமாம்களும் , முத்தவல்லிகளும் பங்கேற்றனர் . ஆர்பாட்டதிற்கான சிறப்பான ஏற்பாடுகளை சிதம்பரம் TNTJ கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர். மாவட்டத்தின் அணைத்து கிளைகளிலிருந்தும் ஏராளமான வாகனங்களில் TNTJ வினர் வந்திருந்தனர். இறுதியில் மாவட்ட செயலாளர் நிஷார் அஹம்மது அவர்கள் நன்றி கூறினார்.

 இன்ஷாஅல்லாஹ் விரைவில் அல்லாஹ்வின் ஆலயம் எழுப்ப அனைவரும் துஆ செய்யுங்கள்...........

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

மானியம் ஆடூர் தவ்ஹீத் மஸ்ஜித் திறப்பு பத்திரிகை செய்தி

                                                       தினத்தந்தி  நாளிதழ்  
தினகரன் நாளிதழ் 

S.P பட்டினம் பள்ளிவாசல் தவ்ஹீத் ஜமாஅத் வசமானது

அல்லாஹு அக்பர்...............!! அல்லாஹு அக்பர்....................!! S.P பட்டினம் பள்ளிவாசல் பிரச்சினை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவாக தீர்ப்பு.................!!

   இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாச்சியர் உத்தரவின்படி பூட்டி சீல் வைக்கப்பட்டது.

 இதற்கு எதிராக பல்வேறு சட்டப்போராட்டங்களையும் அறவழிப் போராட்டங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வந்தது இப்பள்ளிக்கு உரிமை கொண்டாடி சுன்னத் ஜமாஅத்தினர் திருவாடனை உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு போட்டனர், இவர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது இதன் பின்னர் வட்டாச்சியர் அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து தனது தடை உத்தரவை ரத்து செய்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசலை திறந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தனர் இத்தீர்ப்பை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை 8 மணிக்கு பள்ளிவாசல் திறக்கப்பட்டது , காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்க உறுதி அளித்துள்ளனர் மேலும் சுன்னத் ஜமாஅத்தினர் யாரும் பள்ளிவாசலை தவ்ஹீத் ஜமாஅத் திறக்கும் போது எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று பள்ளிவாசலில் பொது அறிவிப்பு

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

லால்புரம் ஜாமஅத்தினர் TNTJ-விடம் மனு அளித்தனர்!

சிதம்பரம் ஏப்ரல் 8: சிதம்பரம் அருகேயுள்ள லால்புரத்தில் 10 ஆண்டுகளுளாக காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் சங்கபரிவார கும்பலின் தலையீடால் பள்ளிவாசல் மற்றும மதரஸா கட்ட தொடர்ந்து அநீதி இழைத்து வரப்படுகிறது. இது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் சிதம்பரம் தவ்ஹீத் பள்ளியில் 03.04.2012 அன்று மாவட்ட தலைவர் சகோ.முத்துராஜா தலைமையில் நடைப்பெற்றது. இந்த சந்திப்பில் லால்புரம் ஜாமஅத்தினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை தலையிட்டு லால்புரத்தில் பள்ளிவாசல் மற்றும் மதரஸா அமைய உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

மானியம் ஆடூர் தவ்ஹீத் மஸ்ஜித் திறப்பு நிகழ்ச்சி


   கடலூர மாவட்டம் மானியம் ஆடூரில் கட்டப்பட்டு வந்த தவ்ஹீத் மஸ்ஜித் இன்று பக்கிர் முஹம்மது அல்தாபி அவர்களின் ஜூம்மா உரையுடன்  ஆரம்பம் செய்யபடுகிறது.ஜும்மா தொழுகைக்கு பின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொள்ளுமேடு,லால்பேட்டை,ஆயங்குடி,காட்டு மன்னார்குடி போன்ற ஊர்களில் இருந்து பெரும் அளவில் மக்கள் கலந்து கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
நம் ஊரில் இருந்து மக்கள் செல்வதற்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.